"தமிழ்நாடு முழுக்க வெற்றி பெற்றாலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறாது. அந்தளவிற்கு கோஷ்டிப்பூசல் புரையோடிக்கிடக்கிறது'' எனப் புலம்புகிறார்கள் இலைக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க..வாக இருந்ததை எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளரானதும், கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து, திருவையாறு, பாபாநாசம் தொகுதிகளை மேற்கு மாவட்டமாக்கி, மா.செ.வாக ரத்தினசாமியையும், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக்கி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.பாரதிமோகனை மா.செ.வாகவும் அறிவித்தார். ஆர்.கே.பாரதிமோகன் மா.செ.வாக உள்ள கிழக்கு மாவட்டத்தில்தான் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுவதாக புலம்புகின்றனர் ர.ர.க்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர், "பாரதிமோகனை அதிர்ஷ்டம் தான் இந்தளவுக்கு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து ஊருக்குவந்தவர், கஞ்சனூர் பேரவை கிளைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகு, பேரவை மாவட்ட செயலாளராக இருந்த கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனோடு நெருக்கமாகி பேரவை ஒன்றிய செயலாளரானார். அதன்பின் வைத்திலிங்கத்திடம் ஒட்டிக்கொண்டார். அப்போது திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளராக இருந்த கருணாநிதியிடமிருந்த ஒன்றிய செயலாளர் பொறுப்பை தன்வசமாக்கினார்.
வைத்திலிங்கத்தின் நம்பிக்கையாக இருந்ததால் திருவிடைமருதூர் தொகுதியில் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ. காலம் முடிந்த உடனேயே மயிலாடுதுறை தொகுதிக்கான எம்.பி. சீட் வாங்கி எம்.பி. ஆனார். எம்.பி., எம்.எல்.ஏ., எனத் தொடர்ந்து இருந்தாலும் கட்சிக்கோ, தொகுதிக்கோ, எந்த
"தமிழ்நாடு முழுக்க வெற்றி பெற்றாலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறாது. அந்தளவிற்கு கோஷ்டிப்பூசல் புரையோடிக்கிடக்கிறது'' எனப் புலம்புகிறார்கள் இலைக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க..வாக இருந்ததை எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளரானதும், கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து, திருவையாறு, பாபாநாசம் தொகுதிகளை மேற்கு மாவட்டமாக்கி, மா.செ.வாக ரத்தினசாமியையும், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக்கி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.பாரதிமோகனை மா.செ.வாகவும் அறிவித்தார். ஆர்.கே.பாரதிமோகன் மா.செ.வாக உள்ள கிழக்கு மாவட்டத்தில்தான் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுவதாக புலம்புகின்றனர் ர.ர.க்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர், "பாரதிமோகனை அதிர்ஷ்டம் தான் இந்தளவுக்கு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து ஊருக்குவந்தவர், கஞ்சனூர் பேரவை கிளைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகு, பேரவை மாவட்ட செயலாளராக இருந்த கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனோடு நெருக்கமாகி பேரவை ஒன்றிய செயலாளரானார். அதன்பின் வைத்திலிங்கத்திடம் ஒட்டிக்கொண்டார். அப்போது திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளராக இருந்த கருணாநிதியிடமிருந்த ஒன்றிய செயலாளர் பொறுப்பை தன்வசமாக்கினார்.
வைத்திலிங்கத்தின் நம்பிக்கையாக இருந்ததால் திருவிடைமருதூர் தொகுதியில் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ. காலம் முடிந்த உடனேயே மயிலாடுதுறை தொகுதிக்கான எம்.பி. சீட் வாங்கி எம்.பி. ஆனார். எம்.பி., எம்.எல்.ஏ., எனத் தொடர்ந்து இருந்தாலும் கட்சிக்கோ, தொகுதிக்கோ, எந்த வளர்ச்சியும் இல்லை. அதே நேரம், பாரதிமோகனின் சொத்து அசுர வளர்ச்சியடைந்தது. பின்னர், பாரதிமோகனின் அலட்சியத்தால் அ.தி.மு.க. கோட்டையான திருவிடைமருதூர், தி.மு.க.விற்கு சாதகமானது. பாரதிமோகன் எம்.பி.யாக இருந்தபோது தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராகவும் அமைச்சராக வும் துரைக்கண்ணு இருந்தார். துரைக்கண்ணுவிற் கும், வைத்திலிங்கத்திற்கும் ஏழாம்பொருத்தமாக இருந்த சமயத்தில் துரைக்கண்ணுவிற்கு நேரெதிராக இருந்தார் பாரதிமோகன்.
துரைக்கண்ணுவின் நேரடி வலதுகரமாக இருந்தவர் சிட்டிங் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளரான ஏ.வி.கே.அசோக்குமார். அப்போது அசோக்குமாருக்கும், பாரதிமோகனுக்கும் இருந்த மோதல் இன்றுவரை தொடர்கிறது. வைத்திலிங்கம் ஓ.பி.எஸ். அணிக்கு போனதும், பாரதிமோகன் சைலண்டாக இருந்தார். துரைக்கண்ணு மறைவால் வெற்றிடமான தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பு மாஜி காமராஜிடம் சென்றது. மா.செ. பொறுப்பை குறிவைத்து கும்பகோணம் ராமநாதன், ஏ.வி.கே.அசோக்குமார், சோழபுரம் அறிவழகன் எனப் பலரும் காய் நகர்த்தினர். பாரதிமோகனோ கே.பி.முனுசாமி மூலம் காய் நகர்த்தினார்.
பாரதிமோகனுக்கு மா.செ. கொடுத்தால் ராமநாதன் இடையூறு செய்வாரென ராமநாதனை குடந்தை மாநகர செயலாளராக அறிவித்துவிட்டு, பிறகு பாரதிமோகனை மா.செ.வாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு பலருக்கும் பேரதிர்ச்சியாக மாறியது. பாரதிமோகன் மாவட்ட செயலாளர் ஆனாலும் கும்பகோணத்திற்குள் நுழைய முடியாதபடி ராமநாதனும், திருவிடைமருதூர் பகுதியில் அசோக்குமாரும், கும்பகோணம் ஒன்றிய பகுதிகளில் நுழையமுடியாதபடி சோழபுரம் அறிவழகனும் ரவுண்ட் கட்டினர். இந்நிலையில், ஓ.பி.எஸ். அணிக்கு சென்று, மீண்டும் அ.தி.மு.க. விற்கு திரும்பிய கும்பகோணம் பி.எஸ்.சேகருக்கு, மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பை ஓ.எஸ்.மணியன் வாங்கிக்கொடுத்தார். இதுவும் பலரை அதிர்ச்சியடையச் செய்தது. ஏனெனில், 2022ஆம் ஆண்டு, அ,தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தஞ்சை பகுதி ஓ.பி.எஸ். அணியினருக்கு பேருந்து, பண உதவி செய்தவர் பி.எஸ்.சேகர் என்று அப்போது பேசப்பட்டது. இந்நிலையில், பி.எஸ்.சேகரோடு கூட்டணி அமைத்த பாரதி மோகன், தற்போது துணிந்து இறங்கியடிக்கிறார்.
இன்னொருபுறம், மாஜி காமராஜிடம் நெருக்கமாக இருக்கும் சோழபுரம் அறிவழகன், தலைமையோடு நெருக்கமாகக் காட்டிக்கொள்ளும் ராமநாதன், அசோக்குமார் ஆகியோர் தனி அணியாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில் அடுத்தகட்ட பொறுப்பாளர் களுக்கான லிஸ்ட்டை பாரதிமோகன் அனைவரிட மும் கேட்க, அறிவழகன் கொடுத்தார். அசோக் குமாரும், ராமநாதனும், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கருணாநிதியும் கொடுக்காமல் இழுத்தடித்தனர். தமிழ்நாடு முழுக்க பொறுப் பாளர்களை அறிவித்தபோதும், தஞ்சை கிழக்கு மாவட்டத்தில் மட்டும் லிஸ்ட் வராததால் பாரதிமோகனுக்கு தலைமை நெருக்கடி கொடுக்க, பாரதிமோகனே லிஸ்ட்டை தயாரித்தார். இதில், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள், அ.தி.மு.க. தலைமையகத்தை தாக்கியவர்கள் என அனைவரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு பொறுப்பை அறிவித்தார். இந்த வசூல் வேட்டையை பாரதிமோகனின் உதவியாளர் காமேஷ் கவனித்துக்கொண்டார். இந்த காமேஷ் அ.ம.மு.க.விலிருந்து வந்தவர். அடுத்தகட்ட பொறுப்பாளர் லிஸ்ட்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி, மேலிடத்துக்கு புகார்கள் பறந்துள்ளன. இரண்டு தொகுதிக்குமான தேர்தல் பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டிருக்கும் திருச்சி மனோகரன், கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளின் நிலைமையை புரிந்துகொண்டு, "இவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லவே முடியாத அளவுக்கு கோஷ்டிப்பூசல் பெரிதாகவுள்ளது. இதை சரிசெய்தால் மட்டுமே வெல்ல முடியும்'' என்று கூறியதாகத் தெரிகிறது.
திருவிடைமருதூர் தொகுதியை பொறுத்த வரை, அசோக்குமாருக்கு பெரிதாக தொகுதியில் செல்வாக்கில்லை. பாரதிமோகனுக்கு மாவட்ட செயலாளருக்கான கெத்தே இல்லை. ராமநாதனுக்கு அப்புறம்தான் என்கிற பிம்பம் கும்பகோணத்தில் உள்ளது. பொறுப்பாளர் லிஸ்ட் தயாரித்ததில் நிறைய குளறுபடிகள். அ.தி.மு.க. விற்கு வந்து இரண்டு வருடம்கூட ஆகாத கேபிள் குமரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர். இதனால் சீனியர்களுக்கு விரக்தி. பி.எஸ்.சேகர், கும்பகோணம் தொகுதியை குறிவைத்து பாரதி மோகனோடு நெருக்கமாக இருக்கிறார். அதே தொகுதியை அறிவழகனும், ராமநாதனும், அசோக்குமாரும் கேட்டு மெனக்கெடுக்கிறார்கள். கும்பகோணத்தில் ராமநாதனை ஓரங்கட்டுவதற் காக 4 பகுதிச் செயலாளர்களையும் தனது ஆதரவாளர்களாக நியமிக்கவைத்து ராமநாதனுக்கு குடைச்சல் கொடுக்கிறார்.
பாரதிமோகனோ, "நடந்துமுடிந்த எம்.பி. தேர்தலில், தனது சொந்த கிராமத்திலேயே அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்கு செல்லவைத்துவிட்டார். அவரது சொந்த ஊரான கஞ்சனூரில் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், 10 ஒன்றிய பொறுப்பாளர்களென ஒரே கிராமத்தில் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதிமோகனின் தம்பி ஆர்.கே.குணசேகரன் மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர். ஆர்.கே.இளங்கோவனுக்கு திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய பேரவை செயலாளர் பொறுப்பு. இப்படியாக இவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பொறுப்புகளை வாரிவழங்கியுள்ளார். இறந்தவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படி பல பொறுப்பாளர்களை புதிதாக அறிவித்து, தனக்கு எதிராக இருந்தவர்கள், மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டதால் கோஷ்டி மோதல் தொடர்கிறது. அதன் விளைவாக, புதிய பேருந்து நிலையக் கட்டுமானம் தொடர்பான போராட் டத்திலும், எம்.ஜி.ஆர். நினைவுப்பேரணியிலும் கோஷ்டிப்பூசல் வெளிப்பட்டது'' என்கிறார் அவர்.
திருவிடைமருதூர் தொகுதியைச்சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரோ, "திருவிடைமருதூர் தொகுதி அ.தி.மு.க.விற்கு சாதகமான தொகுதி. கடந்த சில தேர்தல்களில் ஆயிரம் வாக்குகளுக்குள் தான் தோல்வியடைந்துள்ளனர். அதேபோல் கும்பகோணம் தொகுதியில் 1991, 1996 தேர்தல்களில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. 2001-ல் 2000 வாக்குகளுக்குள்ளும், 2006-ல், 2011-ல் 3000 வாக்குகள் வித்தியாசத்திலும் ராமநாதன் தோற்றார். 2021-ல் ஸ்ரீதர் வாண்டையாரும்கூட குறைந்த வாக்குகளில் தான் தோற்றார். நிர் வாகத்திறனற்ற பாரதிமோகனை நீக்கினால் கும்பகோணம், திருவிடை மருதூர் மீண்டும் அ.தி.மு.க. வசமாகும். அதனால் இந்தமுறை புது வேட் பாளர்களை அ.தி.மு.க. தலைமை நிறுத்த வேண்டும். ராமநாதனுக்கு சீட்டு கொடுத்தால் சேகர் எதிராகயிருப்பார். சேகருக்கு ராமநாதன் வேலை பார்க்கமாட்டார். அதேபோல அறிவழகனுக்கு இரண்டு பேருமே வேலை பார்க்கமாட்டார்கள். எனவே இரண்டு தொகுதியிலும் புதுமுகங்களை களமிறக்கினால் மீண்டும் கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்'' என்கிறார்.
ஏ.வி.கே. அசோக்குமாரிடம் கேட்டோம், "பிரச்சனைகளை தலைமையின் கவனத்திற்கு கொண்டுபோயிருக்கிறோம், தலைமைதான் முடிவெடுக்கணும். தலைமைக் கழகத்தை தாக்கியவர்களை இணைத்ததை ஜீரணிக்க முடியவில்லை''’என்கிறார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகனிடம் கேட்டோம். "பிரச்சனை ஒன்றுமில்லை. அனைவருமே இரண்டு தொகுதிகளையும் வெல்வதற்காக முனைப்போடு வேலை பார்க்கிறோம்'' என்று கூறிவிட்டு துண்டித்தார். அ.தி.மு.க.வில் கோஷ்டிப்பூசலால் பரபரத்துக்கொண்டிருக்கும் சூழலில், தி.மு.க.விலோ கும்பகோணம் எம்.எல்.ஏ.வும், மாவட்ட கழகப் பொறுப்பாளருமான சாக்கோட்டை அன்பழகன் தனது பிறந்த நாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடி, அ.தி.மு.க.வினரை வெறுப்பேற்றி யிருக்கிறார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க.விற்கு வாழ்வா, சாவா? என்ற நிலையில் இப்படி கோஷ்டி மோதலால் கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் அ.தி.மு.க. மிக மோசமான தோல்வியைத் தழுவும் என ர.ர.க்கள் வேதனைப்படுகிறார்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us