தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மாநில, தேசியக் கட்சிகள், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி எண்ணிக்கை, தொகுதிகள் விவரங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருக்கும் சூழலில்... இன்னொருபுறம், வேட்பாளர்களின் விருப்ப மனுக்களையும் பெற்றுவருகின்றன. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில், பா.ஜ.க.வின் சீனியர் அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடியுடனான சந்திப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, எடப்பாடிக்கும் பியூஷ் கோயலுக்கும் இடையிலான சந்திப்பில், வெறுமனே கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து மட்டுமே இல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள தேர்தல் கள நிலவரம் குறித்தும் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார் கள். தமிழகத்தில் கணிசமான வன்னியர் சமுதாய வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ம.க.வின் அப்பா, மகன் பிரச்சனை பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்காமல் தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும், பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதையும் ஆலோசித்திருக்கிறார்கள். அதோடு, பா.ம.க.வில் ராமதாஸையும், அன்புமணியையும் ஒன்றிணைப்பது, மேலும் டி.டி.வி.தினகரனையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒன்றிணைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அவர்களை இணைத்து தேர்தலை சந்தித்தால் கூட்டணியின் பலம் எப்படியிருக்கும் என்றும் ஆலோசித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை நடந்த அதே வேளையில், அமித்ஷா உருவாக்கிய தேர்தல் அனலைஸ் டீம், தமிழக பா.ஜ.க.வுக்கு 50 தொகுதிகளை தேர்வு செய்துள்ளது. அதில், தமி ழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதியை கேட்பது அல்லது ஒரு மாவட்டத்திற்கு ஒரு சட்ட மன்றத் தொகுதியை கேட்பது என்ற பார்முலாவை முன்னெடுத் துள்ளனர். பா.ஜ.க. என்றால் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர் என்றில்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கான ஆதரவாளர்கள் பரவலாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பது அமித்ஷாவின் திட்டத்தில் உள்ளது. அதற்கு அடிப்படையாக 2021, 2022 உள்ளாட்சித் தேர்தலில், குறிப்பாக நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனியாகப் பெற்ற வாக்கு விவரங்கள், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற 18 சதவீத வாக்கு களை சட்டமன்ற வாரியாக ஆராய்ந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, தற்போது சட்டமன்ற வாரியாக பா.ஜ.க. பிரமுகர்களின் செல்வாக்கினையும் பல்ஸ் பிடித்துப் பார்த்து, ஒட்டுமொத்த விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியலை தயாரித்து, எடப்பாடி மகன் மிதுனிடம் பா.ஜ.க. டீம் கொடுத்திருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/bjp1-2026-01-02-11-45-52.jpg)
பியூஷ் கோயல் நியமனத்தில், தமிழக பா.ஜ.க.வில் எடப்பாடிக்காக ஒரு முக்கிய மாற்றம் நடந்துள்ளது. ஒடிசாவின் லோக்சபா எம்.பி.யும் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளருமாக இருந்தவருமான பைஜயந்த் பாண்டா, எங்கெல் லாம் பா.ஜ.க.வுக்கு பொறுப்பேற்கிறாரோ, அங்கெல்லாம் வெற்றிகரமாக செயல்படுபவர் என்ற பெயர் அவருக்குண்டு. இவர் ஏற்கெனவே, டெல்லி, ஒடிஸா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக வெற்றிகரமான வியூகங்களை வகுத்துக் கொடுத்ததாக, அமித்ஷா வின் குட்புக்கில் இருப்பவர். அதனால், தமிழ் நாட்டிலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி சாத்தியமாக வேண்டுமென்று அவரை தமிழ்நாட்டுக்கும் தேர்தல் பொறுப்பாளராக பா.ஜ.க. டெல்லி தலைமை நியமித்திருந்தது. ஆனால், எடப்பாடி மகன் மிதுன் மீது நம்பிக்கை வைக்காமல், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டது எடப்பாடி தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தி யது. எடப்பாடியின் கோபம் பா.ஜ.க. டெல்லி தலைமைவரை எட்ட, அதன் விளைவாக, தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை அறிவித்த ஒரே மாதத்தில் அந்த பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும், பா.ஜ.க. தலைமையானது, எடப்பாடியை குஷிப்படுத்த பியூஷ் கோயலை அப்பொறுப்புக்கு நியமனம் செய்தது. இவர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பியூஷ் கோயல் சென்னை வந்து எடப்பாடியை சந்தித்து, சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடப்பாடியுடன் ஆலோசித்தார். மேலும், எடப் பாடி யின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்ற உறுதியும் அளிக்கப்பட்ட தால் எடப்பாடி தரப்பில் உற்சாகம் பிறந்தது.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரக் களம் அமைப்பது, தி.மு.க. - இந்தியா கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் வியூகங்களை உருவாக்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், தொகுதிகளின் எண் ணிக்கை பற்றி வரும் ஜனவரி 4ஆம் தேதி தமிழகம் வரவுள்ள அமித்ஷாவுடன், எடப்பாடி நேரில் சந்தித்துப் பேசி உறுதி செய்யவும் தீர்மானிக்கப்பட் டது. இதன் முன்னோட்டமாக, அமித்ஷா வருகைக்கு முன் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பியூஷ் கோயல் தமிழகம் வரவுள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி என்று மேடையில் பேசிவந்த எடப்பாடி, இந்த முடிவுக்கு பின்னர் தற்போது பிரச்சாரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பேசத் தொடங்கியுள்ளார். மேலும், பத்திரிகை யாளர் சந்திப்பிலும் இதை உறுதி செய்தார். இந்த நிலையில், .ஓ.பி.எஸ். கூட்டம் கூட்டி எடப்பாடியை கடுமையாக விமர்சித்தாலும், அ.தி.மு.க. தொண்டர் கள், இணைப்பு என்ற கருத்தின் அடிப்படையில், இந்த கூட்டணிக்குள் ஓ.பி.எஸ்., டி.டி.வி. போன்ற வர்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் பா.ஜ.க. சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
பா.ஜ.க.வை பொறுத்தவரையில், அவர்கள் முடிவு செய்த 50 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, சராசரியாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் என்று முடிவு செய்து, மொத்த மாக 50 சட்டமன்றத் தொகுதிகளில் 100 வேட் பாளர்கள், அதில் 20 பெண் வேட்பாளர்கள் என உத்தேசப் பட்டியலை தயார் செய்து அமித்ஷாவின் டேபிளுக்கு அனுப்பியுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிவுக்குப் பிறகு, இந்த பட்டியலை அமித்ஷா, மோடியுடன் ஆலோசித்து இறுதிவடிவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் டாப் 25 இடங்களில் இருக்கும் தொகுதிகளை எந்த விதத்திலும் பா.ஜ.க. விட்டுக் கொடுக்காது. குறைந்தபட்சம் வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்ற உறுப்பினர் களை சட்டமன்றத்திற்கு உள்ளே கொண்டுசெல்ல பா.ஜ.க. மேலிடத்தின் வழிகாட்டுதல்படி நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்த முறை குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வியூகம் அமைத்துள்ளனர். அதே சமயம், விஜய் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தால், தேர்தல் முடிவுகளை கூடுமானவரை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்வதற்கேற்ப தொகுதிகளை பெறுவதற்கு பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க., பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள், தற்போது பா.ஜ.க.வில் சரணடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை முன்னிறுத்தி, தேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்து சட்டமன்றத்திற்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் கட்சியி லிருந்து பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரணி, ராஜபாளையம் கோபால்சாமி, சோழன் பழனிசாமி, சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு பா.ஜ.க.வில் ஜாக்பாட் காத்திருக்கிறது. அதேபோல, சரத்குமார், குஷ்பு போன்ற செல்வாக்குள்ள திரைக்கலைஞர் களுக்கும் யோகம் அடிக்கக்கூடும்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, அதிக வாக்குகளை பெற்றுத் தந்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் சீட்டுகளை பெற்றுத்தர தமிழக பா.ஜ.க. பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. இதே நேரத்தில், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு மீண்டும் மீண்டும் தேர்தலில் தோற்றுப்போன பழைய தலை வர்களுக்கு வாய்ப்பு வழங்காமலிருக்க அகில இந்திய பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளதால், பா.ஜ.க. மூத்த தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
_______________
இறுதி சுற்று!
முதல்வரின்புத்தாண்டு வாழ்த்து!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/bjpbox-2026-01-02-11-47-12.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் "அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமையவேண்டுமென'' குறிப்பிட் டுள்ளார். மேலும், "தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச்சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான, சமத்துவமான வளர்ச்சியும் சாத்தியமாகி வருகிறது. தமிழ்நாடு யாருக்கும் தலைகுனியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். நாம் இதுவரை பெற்ற வெற்றி கள் தந்த ஊக்கத்தோடும், போராட்டங்களால் பெற்ற துணிவோடும் 2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்'' என்றும் தெரிவித் திருக்கிறார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க. தொண்டர் கள் என ஏராளமானோர் புத்தாண்டில் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/bjp-2026-01-02-11-45-36.jpg)