அன்று: அனிதா-பிரதீபா இன்று: ரிதுஸ்ரீ -வைஷியா -மோனிஷா

neet

வ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படும் நீட் படுகொலைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

2017-ஆம் ஆண்டு முதன்முதலாக நீட் நடைமுறைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்துப் போராடியும் நீதி கிடைக்காததால், தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இதனால் கொதித்தெழுந்த தமிழக மக்கள் நீட் எதிர்ப்பு முழக்கங்களோடு எதிர்த்தனர். தீர்மானம் போட்டுவிட்டு தமிழக அரசு கண்டுகொள்ளாமல்விட, 2018-ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார் விழுப்புரம் மாணவி பிரதீபா. இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறித்துவிட்டு, அடுத்த ஆண்டிலேயே தன் பலி எண்ணிக்கையில் இன்னும் மூன்றைக் கூட்டிவிட்டு, கொடூர மாகச் சிரிக்கின்றன நீட் என்ற போர்வைக்குப் பின்னாலிருந்து மத்திய-மாநில அரசுகள்.

2019-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, மே 05-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 188 தேர்வுமையங்களில் தேர்வெழுதிய 1,23,078 மாணவர்களும் வழக்கம்போல தீவிரவாதிகளாகவே கையாளப்பட்டனர். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜூன் 05-ந்தேதி நீட் தேர்வுமுடிவு வெளியானது. இதில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு முத்தையன்கோவிலைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

neet

ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜும், தாய் ராஜலட்சுமியும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் கூலிவேலை பார்ப்பவர்கள். வறுமையிலும் தங்கள் மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் உறுதியோடு இருந்தனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் படித்த ரிதுஸ்ரீ ப்ளஸ்டூவில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஜூன் 05-ந் தேதி நீட் முடிவுகள் வெளியான நிலையில், மதியம் 1.30 மணியளவில் செல்வராஜ் மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்றபோது, பக்கத்து வீட்டு குழந்தைகளோடு சகஜமாக விளையாடிக் கொண்டிருந்தார் ரிதுஸ்ரீ. ரிசல்ட் பற்றி அவரிடம் தந்தை செல்வராஜ் கேட்டபோது, ‘"3:30 மணிக்குதான் ரிசல்ட் டாம்ப்பா. வந்ததும் நானே உங்களைக் கூப்பிடுவேன். கவலைப்படாதீங்க. ரிதுஸ்ரீ நாளையில் இருந்து டாக்டர்ப்

வ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படும் நீட் படுகொலைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

2017-ஆம் ஆண்டு முதன்முதலாக நீட் நடைமுறைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்துப் போராடியும் நீதி கிடைக்காததால், தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இதனால் கொதித்தெழுந்த தமிழக மக்கள் நீட் எதிர்ப்பு முழக்கங்களோடு எதிர்த்தனர். தீர்மானம் போட்டுவிட்டு தமிழக அரசு கண்டுகொள்ளாமல்விட, 2018-ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார் விழுப்புரம் மாணவி பிரதீபா. இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறித்துவிட்டு, அடுத்த ஆண்டிலேயே தன் பலி எண்ணிக்கையில் இன்னும் மூன்றைக் கூட்டிவிட்டு, கொடூர மாகச் சிரிக்கின்றன நீட் என்ற போர்வைக்குப் பின்னாலிருந்து மத்திய-மாநில அரசுகள்.

2019-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, மே 05-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 188 தேர்வுமையங்களில் தேர்வெழுதிய 1,23,078 மாணவர்களும் வழக்கம்போல தீவிரவாதிகளாகவே கையாளப்பட்டனர். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜூன் 05-ந்தேதி நீட் தேர்வுமுடிவு வெளியானது. இதில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு முத்தையன்கோவிலைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

neet

ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜும், தாய் ராஜலட்சுமியும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் கூலிவேலை பார்ப்பவர்கள். வறுமையிலும் தங்கள் மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் உறுதியோடு இருந்தனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் படித்த ரிதுஸ்ரீ ப்ளஸ்டூவில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஜூன் 05-ந் தேதி நீட் முடிவுகள் வெளியான நிலையில், மதியம் 1.30 மணியளவில் செல்வராஜ் மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்றபோது, பக்கத்து வீட்டு குழந்தைகளோடு சகஜமாக விளையாடிக் கொண்டிருந்தார் ரிதுஸ்ரீ. ரிசல்ட் பற்றி அவரிடம் தந்தை செல்வராஜ் கேட்டபோது, ‘"3:30 மணிக்குதான் ரிசல்ட் டாம்ப்பா. வந்ததும் நானே உங்களைக் கூப்பிடுவேன். கவலைப்படாதீங்க. ரிதுஸ்ரீ நாளையில் இருந்து டாக்டர்ப்பா'’எனக் கூறியிருக்கிறார்.

மதியம் 3.30 மணியைக் கடந்தும் மகளிடமிருந்து அழைப்பு வராததால், வீட்டிலிருக்கும் செல்போனுக்கு அழைத்திருக்கின் றனர் பெற்றோர். தொடர்ச்சியாக அழைத்தும் பதிலேதும் கிடைக்காத நிலையில், நீண்டநேரமாக ரிங் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்வராஜின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறக்க யாரும் வராததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி பிணமாகியிருக்கிறார் ரிதுஸ்ரீ.

நடந்தது பற்றி விவரிக்கும் ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜ், ""ரொம்ப நேரமா போன் அடிச்சி எடுக்கலையேன்னு குழப்பத்துல இருந் தப்போ, பக்கத்து வீட்டுக்காரங்க கூப்பிட்டுதான் பிள்ள செத்துப்போச்சுன்னு சொன்னாங்க. ஸ்டெதஸ்கோப் மாட்டி அழகு பார்க்கவேண்டிய என் பொண்ணு, என் மனைவியோட சேலையை கழுத்துல மாட்டி தொங்கிட்டு இருந்தா. நீட் தேர்வுல தோத்ததுதான் என் மகள் செத்துப் போனதுக்குக் காரணம். அதென்னங்க ‘நீட்டு? பிள்ளைங்களைக் கொல்றதுக்காகவே கண்டுபிடிச் சதா அது?''’என ஆதங்கம் தாளாமல் கதறியழுதார்.

neet

ஒரு துயரச் செய்தி வெளியாகி, அதன் சோகம் குறைவதற்குள்ளாகவே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசநகர் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜ்-பிரியா தம்பதியின் மூத்தமகள் வைஷியா, நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட செய்தி தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.

நம்பிராஜ் சேதுபாவாசத்திரத்தில் படகு வைத்து தொழில் செய்துவருகிறார். வைஷியாவின் சித்தப்பா காசி.விசுவநாதன், அவரது மனைவி மைதிலி இருவருமே மருத்துவர்கள் என்பதால், தானும் மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவு இயல்பாகவே இருந்திருக்கிறது.

அதனால், பட்டுக்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துக்கொண்டே, நீட் கோச்சிங்கிற்கும் சென்றுவந்தார். தேர்வு முடிவுகள் வெளியான அன்று, பெற்றோர் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த வைஷியா, தனது செல்போனில் ரிசல்ட் பார்த்திருக்கிறார். அதில் 250 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததால், தனது மருத்துவக் கனவு தகர்ந்ததை எண்ணி யாரிடமும் பேசாமல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டதும் பெற்றோர் சென்று பார்ப்பதற்குள் வைஷியாவை முழுமையாக சூழ்ந்துகொண்டது நெருப்பு. உடனடியாக தீயை அணைத்துவிட்டு, பட்டுக்கோட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது, வைஷியா வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு வைஷியாவின் உடல் இரவிலேயே தகனம் செய்யப்பட்டது. “""டாக்டர் ஆகணும்னு ஆசைப் பட்டது தப்பா? நீட் வேணாம்னு எத்தனையோ தடவை சொல்லியும் கேட்காத அரசுகள், வருசாவருசம் பிள்ளைங்க உசுருகளைப் பறிக்குதே. இப்படி எங்க குழந்தை பரிதாபமா செத்துப் போச்சே''’என்று வைஷியாவின் பெற்றோர் கதறித் துடித்தது காண்போரைக் கலங்கச் செய்தது.

neet

தேர்வுமுடிவு வெளியான மறுநாளான ஜூன்.06-ல் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு மீனவர் குப்பத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் மோனிஷா, நீட் தோல்வியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே தாயை இழந்த மோனிஷா, தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்திருக் கிறார். பள்ளிக் காலத்திலேயே தன் மருத்துவக் கனவை தந்தையிடம் தெரியப்படுத்தி, பாண்டிச் சேரியில் ஒரு கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், மோனிஷா வால் 31 மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. இதனால் மனமுடைந்த மோனிஷா, “"மருத்துவ ராகும் கனவோடுதான் காத்திருந்தேன். ஆனால், நான் நினைத்தது நடக்கவில்லை. அதனாலேயே தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத் திற்கு வேறெந்தக் காரணமுமில்லை'’என கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

neet

நீட் தேர்வு முடிவுகள் வெளியான ஒரே நாளில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுபற்றி மருத்துவரும் சமூகநீதியை வலியுறுத்தும் இளைஞர் இயக்கத்தை நடத்துபவருமான எழிலனி டம் கேட்டபோது, “""நீட் திணிப்பின் வெளிப் பாடுதான் இது. எளிய, நலிந்த மக்களும் மருத்துவராகலாம் என்ற வழிமுறையை திராவிடக் கட்சிகள், சமூகநீதித் தளத்தின் வழியாக செய்துகொடுத்தன. அதன்பிறகே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற முதல் தலைமுறை மருத்துவர்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது நீட் அந்த வழிமுறையைத் தகர்த்துவிட்டது. நீட் தேர்வை தனியார் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள் என்று அனைத்துக்கட்சிகள் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானம் எங்கே போனது? இந்த விஷயத்தில் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தும் வாய்ப்பிருந்தும் மவுனமாக இருப்பதும், இத்தனை துயரங்களைக் கடந்தும் அடாவடியாக நீட்டைத் திணித்தே தீருவேன் என்று மத்திய அரசு துடிப்பதும் அதிர்ச்சி யையே தருகிறது. மறுதேர்வு மூலம் ஒன்றிரண்டு வருடங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்றாலும், பொருளாதாரச் சூழல் இடம் கொடுக்காத பல மாணவர்கள் குடும்பச் சூழலை எண்ணி பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்களில் சிலர் கனவைத் தொலைத்துவிட்டதாகவும், பெற்றோரின் நம்பிக்கையை பாழாக்கிவிட்டதாகவும் எண்ணி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர்''’என்கிறார் அவர்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 7,04,335 பேர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், பிற்படுத்தப்பட்ட(63,749), தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் கள்(20,009) என சேர்த்து மொத்தமாகவே 83,758 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றால், நீட் தேர்வைக் கொண்டு வந்ததற் கான மறைமுக நோக்கத்தை சிறப்பாகவே செயல்படுத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 1,23,078 மாணவர்கள் கலந்துகொண்ட நீட் தேர்வில், 48.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 9.01 சதவீதம் அதிகம். ஆனால், தேர்வெழுதிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்பதைவிட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் முதல் 4 ஆயிரம் இடங்களைப் யாரெல்லாம் பெறுகிறார் கள் என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய அம்சம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயின் றோருக்கு சாதகமான சூழல் இருந்தது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற எத்தனை மாணவர்கள் முன்னிலை பெறுகிறார்கள் என்பதை ஆராய வேண்டிய அவசியமும் இருக்கிறது.

ஒருபுறம் நீட் தேர்வு படுகொலைகளுக்குக் காரணமான மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டி ருக்க, வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான மாணவர்கள் சலனமே இல்லாமல் தங்கள் மருத்துவக் கனவைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் நுழைவுத்தேர்வு முறை அமலில் இருந்தபோது, அதற்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டுவந்து, பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து... மாநிலப் பாடத் திட்டத்தின் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற வழிசெய்தார் முன்னாள் முதல்வர் கலைஞர். அந்த சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அரசியலில் எதிரெதிர் துருவங்கள் என்றாலும் இட ஒதுக்கீடு, சமூகநீதி, கல்வி வாய்ப்பு போன்ற மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தற்போது அந்த உரிமைகளை இழந்து நிற்கிறோம் என்பதை அறிந்திருந்தும், சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய அம்மா வழி எடப்பாடி அரசு, "இனிமேலும் நீட் விலக்கு கேட்டு மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்கிறது. ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு தருவதாகக் கூறிய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், "நாடாளு மன்றத்தில் வலுவாக எதிர்ப்போம்' என்கின்றன.

மக்களின் நம்பிக்கையை சுமக்கும்வரை மட்டுமே அரசுக்கு மரியாதை. அதை மறக்கும் அரசுகளுக்கு மக்கள் காலத்தே பாடம் புகட்டுவார்கள்.

நீட் எனும் உயிர்க்கொல்லி இன்னும் எத்தனை பேரை பலிவாங்கப் போகிறதோ?

-எஸ்.பி.சேகர், இரா.பகத்சிங், அருள்குமார், மதிவாணன்

_________________

இறுதிச் சுற்று!

ஷங்கர் கதை திருட்டு! கோர்ட் அதிரடி!

கவிஞரும், நக்கீரன் இதழின் முதன்மைத் துணையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடன் 1990-களில் எழுதிய கதை "ஜூகிபா. 2010-ல் ஷங்கர் டைரக்ஷனில் வெளியானது "எந்திரன்'. அச்சு அசலாக "ஜூகிபா'வைப் போலவே "எந்திரன்' இருந்ததால் காப்புரிமைச் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்தார் ஆரூர் தமிழ்நாடன். இந்நிலையில், ""இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதால் காப்புரிமைச் சட்டப்படி ஷங்கர் மீது வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது'' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட் உத்தரவிடும் நாளில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

-கீரன்

nkn110619
இதையும் படியுங்கள்
Subscribe