ந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்துடன் மீண்டும் ஆட்சி என நம்பிய பா.ஜ.க.வின் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக 2004ல் ஆச்சரியகரமான வெற்றியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெற்றபோது, சோனியா காந்தி பிரதமராவார் என ஒரு பொதுவான மதிப்பீடு இருந்தது. ஆனால் தன்னை வெளிநாட்டுக்காரர் என முத்திரை குத்தும் சர்ச்சையைத் தவிர்க்க எண்ணி அதை மறுத்தார் சோனியா. சரத்பவார் போன்ற பெருந்தலைகள் தங்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த நினைத்தபோது, அவர்களின் எண்ணத்தை வெற்றி பெறவிடாமல் தடுத்து, சோனியாவின் தேர்வான மன்மோகன் சிங்கை இந்தியப் பிரதமராக பதவிப் பிரமாணம் எடுக்கச் செய்தவர் அகமது படேல்.

Advertisment

aad

சூத்ரதாரியாகவே வாழ்ந்து மறைந்த அண்மைக்கால அரசியல்வாதி அவர். பெரிதாக மக்கள் மத்தியில் அறியப்படாதவர், கட்சித் தலைமையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர். பகட்டில்லாதவர், ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர், காங்கிரஸ் கொள்கையை சோர்வின்றி முன்னெடுத்துச் சென்றவர். மன்மோகன் சிங்கால் மத்திய அமைச்சரவை யில் இடம்பெற அழைக்கப்பட்டபோது, சற்றும் தயக்கமின்றி அதனை நிராகரித்தவர். அமைச்சரவையில் இடம், அதன்மூலம் சாதகங்களை எதிர்பார்த்தல் போன்ற கவர்ச்சிகளுக்கு இடம் தராதவர். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தபோதும், கிட்டத்தட்ட ஆறு முறையாவது அமைச்சர் பதவியை மறுத்தவர்.

பதவி-அதிகாரம் இல்லாத அகமது படேலை முக்கியமான வராக மாற்றியது எது?

அவரது பல்வேறு பட்ட தனித்துவமிக்க தகுதிகளே அவரை சிறப்புமிக்கதொரு வல்லமை மிக்க காங்கிரஸ் பெருந்தலையாக நீடிக்கச்செய்தது. அனைத்துக்கும் மேலாக, அவருக்கென சொந்த விருப்பங்கள் எதுவும் கிடையாது, அரசியலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் கிடையாது. அவரது ஒரே நோக்கம், நேரு குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலம் மட்டுமே.

Advertisment

ஒருமுறை அவரது விசுவாசம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ""குஜராத்தின் உள்ளடங்கிய பகுதியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த நான், பாராளுமன்ற உறுப்பினராகவும், தேசிய அரசியலிலும் இருக்கிறேன் என்றால்... அதற்குக் காரணம் சோனியா காந்தி. நாம் குறிப்பிடத்தகுந்தவர்களாக இல்லாதபோதே நம்மை பேணியதற்காகவும், நம்மில் பலருக்கு அவர்கள் செய்த கைமாறுக்காகவும் நாம் அவசியம் நன்றியுடன் இருக்கவேண்டும்'' என பதிலளித்தார்.

ad

இந்த நன்றியுணர்வே அவரது அரசியலின் மையமாக இருந்தது. எந்த நகர்வு, எந்த அடியெடுப்பு என்றாலும் அவரது ஒரே அக்கறை: இது காங்கிரஸ் கட்சியின், நேரு குடும்பத்தின் நலன்களுக்கானதா என்பதுதான். இந்த இரண்டும் அவரது அபிப்ராயத்தில் பின்னிப் பிணைந்தவை. நேரு குடும்பம் இல்லாமல் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் இல்லாமல் நேரு குடும்பம் இல்லை.

Advertisment

உண்மையில், அவர் காங்கிரஸ் தலைவராக நரசிம்மராவுக்கு தன் ஆதரவை அளித்து துணை நின்றதற்கு முதன்மையான காரணம் அர்ஜூன்சிங்கும் ஷீலா தீட்சித்தும், நட்வர் சிங்கும் பிரிந்து சென்று தாங்கள் இருப்பதே உண்மையான காங்கிரஸ் என்றதுதான். அவரது நோக்கில் காங்கிரஸை பிரித்து, பிளவுபடுத்தும் யாரும், எதிரிகளுக்கே உதவிகரமாக இருப்பர், அவர்களை தீவிரமாக எதிர்ப்பது அவசியமானதாகும்.

பின்னால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும் விருப்பத்தை வெளிப் படுத்தியபோது, சீதாராம் கேசரியை தலைவராக ஏற்கச்செய்ய வேலைசெய்த சதிக் கும்பலை இரக்கமின்றி கட்சியைவிட்டு தூக்கியெறிந்து, சோனியாவை தலைவராக்கினார். பின் அவர், சோனியாவின் அரசியல் ஆலோசகராக மாறி, கட்சியை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிரிகளின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்தார். காங்கிரஸ் தலைவருக்கு தனது நேரடியான அறிவுரையை வழங்கியதோடு, அவர் கேட்டுக் கொண்டதை மிகச் சரியாக நிறைவேற்றினார். ஒருமுறை முடிவு மேற்கொள்ளப்பட்டு விட்டால், அதனை அவர் நம்பகமாகவும், உறுதியுடனும் நடைமுறைப்படுத்தினார்.

மாறுபட்ட தலைமுறையைச் சேர்ந்த ராகுல் காந்தியுடன், அவர் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ் தலைவருக்கான அரசியல் ஆலோசகர் என்பதிலிருந்து, கட்சிப் பொருளாளராக மாறினார். சோனியாவுக்கு அரசியல் ஆலோ சகராக இருந்த அவர், ராகுலுடன் அதே சமநிலையைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனாலும், ராகுலுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தை கூறியதில்லை. அவரைப் பொறுத் தளவில் ராகுல், நேரு குடும்பத்தின் மற்றுமொரு வாரிசு.

சோனியா காந்தி அகமது படேலை, தோழர் என்றதும், அவரது இடம் நிரப்பத்தக்க தல்ல என்றும் கூறியதில் ஆச்சர்யம் எதுவு மில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி, அவரது இடம் நிரப்பத்தக்கதல்ல. குறைந்தபட்சம், தற்போதைய தலைமுறை காங்கிரஸ் தலைவர் களில் அவரது இடத்தை நிரப்பத்தக்கவர்கள் யாருமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அவரது மறைவு பேரிழப்பாகும். அவர், கருத்து வேறு பாடுகளின்போது கட்சியை ஒருங்கிணைக்கும் பசையைப் போன்று திகழ்ந்து, உலகுக்கு ஒருங்கிணைந்த முகத்தைக் காட்டிவந்தார். நேரு குடும்பம் காங்கிரஸை நடத்துவதற்கு, ஒற்றை மனிதக் கேடயமாகத் திகழ்ந்துவந்தார். தற்போது கேடயம் போய்விட்டது.

dad

அவரது மறைவில்தான் அரசியல் உலகம் அகமது படேல் என்ற நன்றி விசுவாச ஆளுமையின் உண்மை மதிப்பை உணர வந்திருக்கிறது

-புதுடெல்லிவாசி