ற்போது எதிர்க் கட்சிகளனைத்தும் ஒன்றி ணைந்து 'இந்தியா' என்ற அரசியல் பாதையில் அடி யெடுத்துவைத்த நாள்முதலே பா.ஜ.க.வை பதற்றம் தொற்றிக் கொண்டது. "இந்தியா' அமைப்புக்கு அடிப்படையே காங்கிரஸ் தான் என்ப தால் காங்கிரஸ் கட்சி மீதான தாக்குதலை பா.ஜ.க. அதிகரித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திரா காந்தி கொண்டுவந்த மிசா காலகட்டத் தில் சிறைவாசத்தை அனுபவித்தவர்களுக்கு பாராட்டு விழா என்று புதியதொரு பொதுக் கூட்டத்தை சங்கரன்கோவிலில் கடந்த 25ஆம் தேதி நடத்தியிருக்கிறது பா.ஜ.க.

hh

மிசா தியாகிகள் என்று திரட்ட நினைத்து மிகவும் சொற்ப நபர்களையே அழைக்க முடிந்திருக் கிறது. அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். அவர்களில் குமரி மாவட்ட பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வான எம்.ஆர். காந்தியும் ஒருவர், ஒரு வருடம் மிசாவிலிருந்தவர் என்று விழா மேடையில் அறிவிக்கப்பட்டது. விழா பேசப்பட வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வின் பரபர பேச்சாளர் ஹெச்.ராஜா அழைக்கப்பட்டிருந் தார். இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என 1975 ஜூன் இரண்டாம் வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்தே 25.06.75 நள்ளிரவில், இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார்.

Advertisment

அப்படியான மிசாவை வைத்து அரசியல் செய் வதற்காக, மிசாவில் சிறை சென்றவர்களை சுதந் திரப் போராட்ட வீரர்கள் அளவுக்கு உயர்த்தும் முயற்சியில் இறங்கி யிருக்கிறது பா.ஜ.க. அவ்விழாவில் பேசிய ஹெச்.ராஜா, "1975 முதல் 77 வரை நெருக்கடி நிலையின் மிகக் கொடூரமான காலகட் டம். அனைத்து உரிமை களும் முடக்கப்பட்டன. கொட்டடியில் சித்ரவதைக் குள்ளனாவர்களில், உறுப்புகளை இழந்து முடமாக் கப்பட்டவர்கள் எத்தனையோ பேர். மிகக் கொடூர மான ஆட்சி. சிட்டிபாபு என்ன ஆனார் தெரியுமா'' என்றவர், மிசாவுக்குக் காரணமானவர்களை சபித் தார். நெருக்கடி நிலையில் பல அரசியல் கட்சிகள் நடுங்கின. ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம், நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்க தொண்டர்கள் யாரும் சிறைசெல்ல மாட்டார்கள் என்று சொன்னார்கள் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கத்தினர் சிறைவைக்கப்பட் டார்கள். பா.ஜ.க.விற்கு கடுமையான பாதிப்பு.

2014ன்போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம். அப்போதே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றி விட்டது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத் தில் அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிப் பிரிந்திருந்தது. அதை ஒன்று சேர்த்தது பா.ஜ.க. தான். அப்போது நானும் உடனிருந்தேன். பிரிந் திருந்த தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது பா.ஜ.க. தான். எடப்பாடி பழனிசாமி இப்போது அந்த நன்றியே இல்லாமல் செயல்படுகிறார்'' என்றார்.

-பி. சிவன்

Advertisment

படங்கள்:ப.இராம்குமார்