தஞ்சாவூர் தடுமாற்றம்! யாருக்கு மேயர் வாய்ப்பு?

tt

மிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆண்ட கட்சியான அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏனோ பெரிதாக கவனம் செலுத்தவில்லை. மாஜி வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., இத்தனை வருடங்கள் பதவியிலிருந்து சம்பாதித் தும்கூட துடிப்புடன் தேர்தல் பொறுப்புகளில் தலைகொடுக்கவில்லை என்ற வேதனை ர.ர.க்களிடம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டி ருக்கிறது. இதே மனநிலையில்தான் அ.தி.மு.க. வேட்பாளர்களும் உள்ளனர். மாஜி மேயர் சாவித்திரி கணவர் கோபால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடமைக்கு வார்டைச்

மிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆண்ட கட்சியான அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏனோ பெரிதாக கவனம் செலுத்தவில்லை. மாஜி வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., இத்தனை வருடங்கள் பதவியிலிருந்து சம்பாதித் தும்கூட துடிப்புடன் தேர்தல் பொறுப்புகளில் தலைகொடுக்கவில்லை என்ற வேதனை ர.ர.க்களிடம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டி ருக்கிறது. இதே மனநிலையில்தான் அ.தி.மு.க. வேட்பாளர்களும் உள்ளனர். மாஜி மேயர் சாவித்திரி கணவர் கோபால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடமைக்கு வார்டைச் சுற்றிவருகிறார்.

சரி கட்சித் தலைமை வந்தபிறகாவது நிலைமை சரியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஓ.பி.எஸ். வந்தார். மாநகர வார்டுகளுக்குச் சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவில்லை. பொதுவெளியில் வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். அதுவும் நடக்கவில்லை ஒரு மண்டபத்திற்கு வேட்பாளர்களை வர வைத்து “நமக்குதான் மக்கள் ஓட்டுப் போடப் போறாங்க. அதனால வேலையை நல்லா பாருங்க. அடுத்து நாடாளு மன்றத் தேர்தலோட சட்ட மன்றத் தேர்தலும் நடக்கும்“ என்று சொல்லி ர.ர.க்களை உற்சாகப்படுத்த முயன்றார். ஆனால் எந்த வேட்பாளர் முகத்திலும் மகிழ்ச்சி தெரியவில்லை. “மாவட்டம்தான் சரியா இல்லைன்னா மாநில தலைமையும் இப்படி இருந்தா எப்படி”என்ற முணு முணுப்புதான் அ.தி.மு.க வேட்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் கேட்கிறது.

tt

மற்றொரு பக்கம் தி.மு.க. வேட்பாளர்களும் பணப்பசை குறைவாக உள்ளதாகக் கூறி தனித்தனியாகவே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். பல வார்டுகளில் உள்கட்சி சலசலப்புகள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனைச் சமாதானம் செய்யவே பல மணி நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்து மொத்த வேட்பாளர்களையும் ஓரிடத்தில் நிறுத்தி வாக்குகள் சேகரித்துப் பேசினார். வங்கிகளில் தங்க நகைக் கடன் தள்ளுபடியிலுள்ள பிரச்சனையைக் கூறி, “"இன்னும் என் நகையை வங்கி திருப்பித் தரலயே?''” என்று ஒரு பெண் கேள்வியெழுப்ப, “"உங்க பேரு என்னம்மா''’என்று கேட்டவரிடம் தங்கம் என்றார். “"தங்கமே, தங்கத்தை அடகு வச்சிருக்கீங்களா?'' என்று ஜாலியாக கமெண்ட் அடித்தவர், “சீக்கிரமே நகைகள் கிடைக்கும்” என்று பேசினார். ஆனால் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் பலரின் மனதிலும் உறுத்தலாகவே இருந்துவருகிறது.

தி.மு.க.வில் சண்.ராமனாதன், டாக்டர் அஞ்சுகம் பூபதி இருவரின் பெயர்களே மேயர் வேட்பாளர் ரேஸுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. இருவரும் மேயர் கனவுகளோடு முதலமைச்சர் வீட்டின் ஆதரவைக் கேட்டு களம்கண்டு வருகின்ற னர். கடந்த முறை கோஷ்டிப் பூசலில் விட்ட மாநகராட்சியை இந்த முறை தி.மு.க கைப்பற்ற வழி உண்டு என்றாலும், உள்ளூர் உடன்பிறப்புகளின் சுணக்கம் ஒரு முட்டுக்கட்டையே.

nkn160222
இதையும் படியுங்கள்
Subscribe