விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நம் தேசத்தின் அவலம். அந்த வரிசையில், ஜவுளித் தொழிலாளர்களையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு, தன் மோசமான கொள்கை முடிவுகளால்.

tt

2017-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. எனும் வரிக் கொடூரத்தால், மிகப் பெரிய தாக்குதலைச் சந்தித்திருக்கிறது ஜவுளித் துறை. "ஜவுளி விற்பனையில் சுணக்கம், விற்பனை யான பொருளுக்கு பணம் வந்து சேருவதில் தாமதம், உற்பத்திப் பொருட்களில் ஏற்படும் தேக்கம்...' என இதுபோன்ற சிரமங்களுக்கு ஜி.எஸ். டி.யைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள். இதெல்லாம்போக, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் போனதால், கொடுக்கப்படும் மனஅழுத்தம் ஜவுளித் தொழிலாளர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. ஈரோடு மாணிக்கம் பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜின் தற்கொலை அதையே நமக்கு உணர்த்துகிறது. தனக்கு சொந்தமான இடத்தில் 16 விசைத்தறிகளை வைத்து தறிப்பட்டறை நடத்திவந்த கனகராஜ், தொழிலில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். சமீபகாலமாக யாருட னும் பேசாமல் இருந்தவர், சில தினங் களுக்கு முன்னர், மொக்கையம்பாளை யம் அருகேயுள்ள பெரிய கிணற்றின் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து பேப் பரில் எதையோ எழுதியிருக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில், அருகிலிருந்த வீட்டில் ஒரு பாட்டியிடம் சென்று, அந்தப் பேப்பரையும், மணிபர்ஸையும் கொடுத் தவர்...…"என் பைக் பஞ்சர் ஆகிடுச்சு. நான் பஸ் ஏறி வீட்டுக்கு போயிடுவேன். வீட்டிலிருந்து வந் தாங்கன்னா இதைக் கொடுத்திடுங்க' எனக் கூறிவிட்டு, வேகமாக ஓடிப்போய் கிணற்றில் குதித்து விட்டார். அந்தப் பாட்டி கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து கனகராஜின் உடலை மீட்டனர். கனகராஜுக்கு வனிதா என்கிற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

Advertisment

இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னால், "" ஜவுளித் தொழிலுக்கு மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னுடைய மரணத்திற்கு மத்திய-மாநில அரசுகளே காரணம்'' என்று அந்தப் பேப்பரில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார் கனகராஜ்.

""உற்பத்தி செய்த பொருளுக்கான விலை உட னடியாக உற்பத்தியாளரை சென்று சேரவேண்டும். ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் புதிய ஜவுளிக் கொள்கை, ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு போடப்படும் ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகள், அதற்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்திவிட்டன. கனகராஜைப் போலவே ஏராளமான அப்பாவிகள் இந்த நெருக் கடியை சந்தித்து வருவது மோசமான உண்மை'' என்கிறார் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங் கத்தின் மாநிலச் செயலாளர் சின்னச்சாமி.

தவறு செய்தது தாங்கள்தான் என்றாலும், ஏதும் செய்யாதவர்கள்போல் கள்ள மவுனம் காக்கின்றன மத்திய-மாநில அரசுகள்.

Advertisment

-ஜீவாதங்கவேல்