தீவிரவாதி' திஷா? ""தேசவிரோதி' ஓவியா? -பா.ஜ.க.வின் பிரிட்டிஷ்' ஆட்சி!

disha

ழக்கமாக பா.ஜ.க. கட்சியினர்தான் தங்களுக்கு ஆகாதவர்கள் மேலெல்லாம் ஆன்டி இந்தியன் முத்திரையைக் குத்துவார்கள். பீமா கொரோகான் விவகாரத்திலிருந்து, மத்திய பா.ஜ.க. அரசே அந்த நடவடிக்கையில் இறங்கி, தங்களை எதிர்ப்போர் மீதெல்லாம் தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்து, குடிமக்களை தேசவிரோதிகள் ஆக்கிக்கொண்டிருக்கிறது. அந்த லிஸ்ட்டில், 22 வயதேயான திஷா ரவியும் இப்போது தேச விரோதியாகி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

disha

வேளாண் போராட்டத்தை முடக்க மும்முரம் காட்டிவரும் மத்திய அரசு, அப்போராட் டத்துக்கு ஆதரவாக டவிட்டரில் பதிவிட்ட வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக சிடுமூஞ்சியைக் காட்டியதுடன், பதிலுக்கு இந்தியப் பிரபலங்களின் மூலம், "வேளாண் போராட்ட விவகாரம் உள்ளூர் பிரச்சனை. அதை இந்தியா கவனித்துக்கொள் ளும்'’என பதில் ட்வீட் போடவைத்தது.

சுற்றுச்சூழல் போராளியான கிரேட்டா தன்பெர்க், வேளாண் போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்ததுடன், டூல்கிட் ஒன்றையும் வெளியிட்டார் என அவர்மீது குற்றம்சாட்டி டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. எனினும் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் காவல் துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.

தற்போது ஸ்வீடன் நாட் டின் கிரேட்டா தன்பெர்க்கின் டூல்கிட்டை உருவாக்கியவர் என பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வல ரான திஷா ரவியைக் கைதுசெய்துள்ளது. டூல்கிட்டை உரு வாக்க உதவியதாக மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்டும் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி, கல்லூரி மாணவி. கிரேட்டா தன்பர்க்கின் மீதான ஈர்ப்பால் அவருடன் இணைந்து "ப்ரைடேஸ்

ழக்கமாக பா.ஜ.க. கட்சியினர்தான் தங்களுக்கு ஆகாதவர்கள் மேலெல்லாம் ஆன்டி இந்தியன் முத்திரையைக் குத்துவார்கள். பீமா கொரோகான் விவகாரத்திலிருந்து, மத்திய பா.ஜ.க. அரசே அந்த நடவடிக்கையில் இறங்கி, தங்களை எதிர்ப்போர் மீதெல்லாம் தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்து, குடிமக்களை தேசவிரோதிகள் ஆக்கிக்கொண்டிருக்கிறது. அந்த லிஸ்ட்டில், 22 வயதேயான திஷா ரவியும் இப்போது தேச விரோதியாகி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

disha

வேளாண் போராட்டத்தை முடக்க மும்முரம் காட்டிவரும் மத்திய அரசு, அப்போராட் டத்துக்கு ஆதரவாக டவிட்டரில் பதிவிட்ட வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக சிடுமூஞ்சியைக் காட்டியதுடன், பதிலுக்கு இந்தியப் பிரபலங்களின் மூலம், "வேளாண் போராட்ட விவகாரம் உள்ளூர் பிரச்சனை. அதை இந்தியா கவனித்துக்கொள் ளும்'’என பதில் ட்வீட் போடவைத்தது.

சுற்றுச்சூழல் போராளியான கிரேட்டா தன்பெர்க், வேளாண் போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்ததுடன், டூல்கிட் ஒன்றையும் வெளியிட்டார் என அவர்மீது குற்றம்சாட்டி டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. எனினும் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் காவல் துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.

தற்போது ஸ்வீடன் நாட் டின் கிரேட்டா தன்பெர்க்கின் டூல்கிட்டை உருவாக்கியவர் என பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வல ரான திஷா ரவியைக் கைதுசெய்துள்ளது. டூல்கிட்டை உரு வாக்க உதவியதாக மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்டும் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி, கல்லூரி மாணவி. கிரேட்டா தன்பர்க்கின் மீதான ஈர்ப்பால் அவருடன் இணைந்து "ப்ரைடேஸ் பார் ஃப்யூச்சர்' என்ற சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்பை நடத்திவருபவர்.

கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டில் விவ சாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பேராதரவு திரட்டுவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவது, அரசின் பிரதிநிதிகளுக்கு போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி, மின்னஞ்சலில் கோரிக்கைவிடுப்பது போன்ற திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த டூல்கிட்டுக்குப் பின்னால் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி இருக்கிறது என்கிறது அரசுத் தரப்பு. பழைய டூல்கிட்டில் திஷாவின் பெயர் இருந்தது, அதை மறைப்பதற்காக பகிர்ந்த டூல்கிட்டை நீக்கிவிட்டு புதிய டூல்கிட் ஒன்றை கிரேட்டா பகிர்ந்தார் என புலனாய்வு செய்திருக்கிறது டெல்லி போலீஸ். வேளாண் போராட்ட விவகாரம் வரை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்பது வழக்கொழிந்த சொல்லாடலாக இருந்தது. விவசாயிகள் போராட்டத்தில் மதரீதி யான துருவப்படுத்தலுக்கு வழியில்லாததால், விவசாயிகளுக்கு நடுவில் காலிஸ்தான் தீவிரவாதிகள், தேசத்துக்கு ஆபத்து என்ற வழக்கமான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க. தரப்பிலிருந்து கிளம்பியது. பின் மத்திய அரசே அதே குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்தது. 80 நாட்களைத் தாண்டி மத்திய அரசின் முகத்தில் கரிபூசிக்கொண்டிருக்கும் வேளாண் போராட்ட விவசாயிகளின் மீதான ஆத்திரத்தை, அதன் ஆதரவாளர்கள்மேல் திருப்பியிருக்கிறது என திஷா ரவியின் கைதை விமர்சிக்கின்றனர் ஆதரவாளர்கள். விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளை இடது கையால் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, பிப்ரவரி 15-ஆம் தேதி பெங்களூருவில் திஷா ரவியைக் கைதுசெய்துள்ளது டெல்லி போலீஸ்.

oviya

""குடியரசு தின வன்முறைக்கு முன்பே இந்த டூல்கிட் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த வன்முறையில் இந்த டூல்கிட்டின் பங்கையும் ஆராய்வோமென'' டெல்லி போலீஸ் குறிப்பிடுகிறது. திஷாவுடன் இணைந்து இந்த டூல்கிட்டை உருவாக்கியதாக சாந்தனு என்பவரையும், எடிட்டிங் செய்ததாக நிகிதா என்பவரையும் இணைத்திருக்கும் டெல்லி போலீஸ் அவர்களுக்கு பிடிவாரண்டையும் அனுப்பியுள்ளது. மேலும் "பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்' எனும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ஒன்றுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்துகொண்டதாக பிடியை இறுக்கி வருகிறது. இந்நிலையில் நிகிதா ஜேக்கப், சாந்தனு இருவரும் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஐந்துநாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள திஷா ரவி 22 வயதான மாணவி என்பதால் இத்தகைய போலீஸ் கெடுபிடிகள் அவரை பெரிதும் அச்சுறுத்தும் எனக் கூறுகின்றனர் திஷா ரவி ஆதரவாளர்கள். 80-க்கும் அதிகமான சமூக ஆர்வலர்களும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல்காந்தி போன்றோரும் திஷாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ளனர். எங்கு கொண்டுசெல்லப் படுகிறார் என டெல்லி போலீஸ் தகவல் தெரிவிக்காததால், "இது கைதல்ல கடத்தல்' என விமர்சனமும் எழுந்துள்ளது.

""ஒருவர் எங்கு கைதுசெய்யப்பட்டாரோ, அந்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டே கைதுசெய்யப்படவேண்டும். திஷா விவகாரத்தில் டெல்லி போலீஸ் அவரைக் கைதுசெய்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வோ, சட்ட உதவிகளை நாடவோ இடம் தரவில்லை'' என சட்ட நிபுணர்கள் டெல்லி போலீஸின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தாவும், "அந்த டூல்கிட்டில் வன்முறையைத் தூண்டும்படியோ, தேசவிரோத மாகவோ எதுவும் இல்லை' எனச் சொல்லியிருக்கிறார்.

இது ஒருபுறம் என்றால், நடிகை ஓவியா, பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி கோ பேக் மோடி என டுவிட்டரில் பதிவிட்டதற்காக அவர் மீது கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை மாநகர கமிஷனரிடம் பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகரன் புகார் செய்துள்ளார். நடிகை ஓவியா இந்திய இறை யாண்மைக்கு எதிராக வும்,பிரதமர் மோடி அரசுக்கு களங்கம் ஏற் படுத்தி, கலவரத்தைத் தூண்டும்விதமாகவும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் எனவும், இத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் டிவிட்டர் மீதும் நடவடிக்கை எடுக்கு மாறும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

""மோடி வருகைக்கு எதிராக தமிழகத்தில் ஒவ் வொரு முறையும் "கோ பேக் மோடி' ட்ரெண்ட் பிரபல மாகியிருக்க, ஓவியா மீது மட்டும் ஏன் புகார் கொடுத் தீர்கள்'' என அலெக்ஸிஸ் சுதாகரனிடம் கேட்டோம்.

“""தமிழகம் வந்த மோடி பிறகு கேரள மாநிலம் கொச்சின் சென்றார். கேரளாவைச் சேர்ந்த நடிகை ஓவியா எலன் அங்கு சென்றபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? தமிழகத்துக்கு வந்தபோது மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்?

dd

தமிழகத்திற்கு அதிக திட்டங்களைக் கொண்டு வந்தவர் மோடி. ஓவியா, தமிழர் விரோதப் போக்குள்ளவர்போல தெரிகிறது. புகாரில் ஓவியா எலன் இலங்கையைச் சேர்ந்தவரா? வேறு ஏதாவது பின்னணி இருக்கிறதா? என விசாரிக்க கோரியுள்ளோம்''’என்றார்.

""ஓவியா தரப்பில், அந்தப் பதிவை அவர் ட்வீட் செய்ய வில்லை என்று கூறியுள்ளாரே?'' என்று நாம் மேலும் கேட்ட போது…

“""ட்விட்டர் நிறுவனம் சமீபமாக பா.ஜ.க. அரசுமீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பு பவர்களுக்கு உதவிவருகின் றது. ஆர்டிகிள் 19-ன் படி பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் எல்லாருக்கும் உள்ளது. ஆனால் ஓவியா எலன் டிவிட் செய்யவில்லை என்றால் அதைச் செய்தது யார்? யார் வேண்டுமென்றாலும் சமூக வலைத்தளம் என்ற பெயரில் அவதூறு பரப்பலாமா?

dd

ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டால் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கலாம். இதுபோல சமூக வலைத் தளத்தில் பொறுப்பில் லாமல் யார் வேண்டு மானாலும், எதை வேண்டு மென்றாலும் பதிவிடலாமா? சமூகவலைத்தளங் களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அரசால் நெறிப்படுத்தப்படவேண்டும்''’என்றார்.

""கோ பேக் மோடி என ட்வீட் செய்வது ஒரு குத்தமாய்யா''… என்ற கேள்வியை கடைசிவரை அவர் தவிர்த்துவிட்டார்.

ஓவியாவின் தரப்பை அறிய அவரை தொடர்புகொள்ள முயன்றோம். ஓவியாவின் மேனேஜர் ஹரிஷ் நம்மிடம் பேசினார். ""இந்த விவகாரத்துக்கும் ஓவியாவுக்கும் எந்தத் தொடர்பு மில்லை''’’ என்று தொடர்பைத் துண்டித்தார்.

அச்சுறுத்தல் அரசியலால் பிரிட்டிஷ் காலத்தை நினைவு படுத்திக்கொண்டிருக்கிறது பி.ஜே.பி. அரசு.

_____________

டூல்கிட் என்பது என்ன?

"டூல்கிட்' என்பது ஒன்றும் அணுகுண்டோ... சர்வதேச சதித்திட்ட வரைபடமோ அல்ல. போராட்டங்கள் நடத்துபவர்கள், என்ன பிரச்சனை, எதனால் இந்தப் போராட்டம் என விளக்கி, அது தொய்வடையாமல் எந்தத் திசையில் செல்ல வேண்டும், எங்கிருந்து ஆதரவு திரட்டவேண்டும் என வகுத்துக்கொள்ளும் திட்டம்தான். அதையே சமூக ஊடகங்களுக்கான ஆவணமாகத் தயார்செய்தால், அது "டூல்கிட்' எனப்படுகிறது. திஷா ரவி விஷயத்தில் அதைத்தான் பெரிய குற்றமாக மத்திய அரசு சொல்கிறது.

nkn200221
இதையும் படியுங்கள்
Subscribe