கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு, காங்கிரஸ் -த.வெ.க. கூட்டணி பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், அது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருமனை கிறிஸ்தவ இளைஞர் இயக்கம் சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழாவில், இதற்கு முன்னர், மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு 23ஆம் தேதி நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. கிறிஸ்துமஸ் விழா செயலாளரான ஸ்டீபன், வி.சி.க. மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். இவருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ள நிலையில், மனோ தங்கராஜ் இல்லாமலேயே உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விழாவுக்கு அழைத்துள்ளார் ஸ்டீபன். உதயநிதியும் வருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், ஸ்டீபன் இளம்பெண் ஒருவரோடு நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ வெளியானது. அதேபோல் ஸ்டீபன்மீது குலசேகரம், அருமனை, திருவட்டார் காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கும் விவரமும் தெரியவரவே, உதயநிதி அந்த விழாவில் கலந்துகொள்வதை தவிர்த்திருக்கிறார். இந்த ஸ்டீபனுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் ஏற்கனவே நட்பிருந்த நிலையில், விழாவுக்கு விஜயை அழைக்க, விஜய்க்கு பதிலாக ஆதவ் அர்ஜுனாவும் அருண்ராஜும் கலந்துகொண்டி ருக்கிறார்கள் என்கிறார்கள்.
அதே விழாவுக்கு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், நெல்லை எம்.பி. ராபர்ட்புரூஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, அழைப்பிதழில் பெயரே போடப்படாத திருச்சி வேலுச்சாமியும், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங்கும் கலந்துகொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், "இந்த ஆண்டு அங்கு நடந்தது கிறிஸ்துமஸ் விழாவேயல்ல, த.வெ.க. கூட்டம் தான். அங்கு ஸ்டார் பலூன்களுக்கு பதிலாக த.வெ.க. கொடிகள் தான் பறந்தன. எனவே காங்கிரஸ் தலைவர்கள் அக்கூட்டத்தை புறக்கணித்த நிலையில், திருச்சி வேலுச்சாமியும், பினுலால் சிங்கும் முன்கூட்டியே வந்து ஆதவ் அர்ஜுனாவை யும், அருண்ராஜையும் வரவேற்று சால்வை அணிவித்ததோடு மட்டுமல்லாமல், பினுலால்சிங் அந்த இருவரையும் வீட்டிற்கு அழைத்துச்சென்று தேநீர் விருந்தும் கொடுத்திருக்கிறார்'' என்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய வேலுச்சாமி, விஜய்யை தனது இளவல் எனச் சொன்னதோடு, "பாவிகளை ரட்சிக்கவும், ஏழைகளை மேம்படுத்தவும் இயேசு வந்ததைப்போல் தற்போது ஒருவர் வந்திருக்கிறார்'' என்று விஜய்யை பெயர் குறிப்பிடாமல் பேசியவர், "நாம் இணைந்திருக்கிறோம். நல்வர்கள் இணைந்தால் நல்லதே நடக்கும். அது விரைவில் நடக்கும். இது அரசியலின் அணி மாற்றத்தின் தொடக்கம்'' என்று பேசியது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுப்பவ ரான திருச்சி வேலுச்சாமியின் இந்த பேச்சு, பல்வேறு யூகங்களை எழுப்பியிருக்கிறது. விஜய்யின் தந்தை சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பி லிருக்கும் திருச்சி வேலுச்சாமி, த.வெ.க. -காங்கிரஸ் இணைப்பில் இறங்கியிருப்பதன் மூலம், மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி, பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி குளிர்காய நினைப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளாதபோது, நீங்கள் மட்டும் ஏன் கலந்து கொண்டீர்களென்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங்கிடம் கேட்ட போது, "அது த.வெ.க. கூட்டம் அல்ல, கிறிஸ் துமஸ் விழா என்பதால் தான் கலந்துகொண்டேன். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேறு நிகழ்ச்சிகளில் இருந்ததால் அவர்களால் கலந்துகொள்ள முடிய வில்லை. திருச்சி வேலுச் சாமி பேசியது அவ ருடைய கருத்து'' என்றவ ரிடம், த.வெ.க. நிர்வாகி களுக்கு வீட்டில் தேநீர் விருந்து கொடுத்தது குறித்து கேட்டதற்கு பதில் கூறவில்லை. ஆக, காங்கிரஸின் திரு விளையாடலால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
____________
இறுதிச் சுற்று! கோர விபத்து!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/box-2025-12-26-10-59-29.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதன்கிழமை (24-12-2025) இரவு திருச்சியி-ருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்திசையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த 2 கார்களின் மீது மோதியது. இதில் கார்களில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள். விபத்தைக் கேள்விப்பட்ட முதல்வர், பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் 3 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
கரூர் பலி தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் டிசம்பர் 29-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேருக்கு உத்தரவு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/chirstmasmeet-2025-12-26-10-59-10.jpg)