டெல்லியில் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு அரசு இல்லத்தில் நடக்கும் அக்கப்போர்கள் அதிகரித்தபடி இருக்கின்றன. இந்த நிலையில், உணவக டெண்டர் விவகாரம் மீண்டும் வெடித் திருக்கிறது.
டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசின் உயரதிகாரிகள் பலரும் தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்குவார்கள். மினி செக்ரட்டரியேட் போல தமிழ்நாடு இல்லம் இயங்கும். இந்த இல்லத்தினை நிர்வகிக்கும் பொறுப்பு ரெசிடென்சியல் கமிஷனர் எனும் பதவிக்கு கொடுக்கப்பட்டி ருக்கிறது. அந்த பதவியில் தற்போது ஆஷிஸ்குமார் ஐ.ஏ.எஸ். இருந்துவருகிறார்.
நீதிமன்ற வழக்கினை எதிர்கொண்டுவரும் தமிழகத்தின் பிரபல சமையல் கலைஞருக்கு தமிழ்நாடு இல்லத்தின் கேன்டீன் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவகாரம்... சர்ச்சையாகி வருகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, "தமிழ்நாடு இல்லத்திலுள்ள உணவகத்தை நடத்துவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. டெண்டரில் கலந்துகொள்ள பல்வேறு விதிகள் வகுக்கப் பட்டன. குறிப்பாக, ஹோட்டல் தொழிலை 5 வருடங்கள் நடத்திய அனுபவம் வேண்டும்; அந்த ஹோட்டல் 120 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடியதாக இருந்திருக்க வேண்டும். அரசாங்க டெண்டர்களை 5 வருடம் ஏற்கனவே எடுத்த அனுபவம் இருக்கவேண்டும் என்பது உள்பட பல விதிகள் டெண்டர் கண்டிஷனில் சொல்லப்பட்டிருந்தன.
ஹோட்டல் தொழிலில் அனுபவமுள்ள பலர் இந்த டெண்டரில் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய சமையல் கலைஞர் ஒருவரும் கலந்துகொள்ள, இறுதியில் இந்த டெண்டர் இவருக்கே கொடுக்கப் பட்டிருக்கிறது. டெண்டர் நிபந்தனைகளில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விதிகள் எதுவும் அந்த சமையல் கலைஞருக்குப் பொருந்த வில்லை. இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக அவருக்கு இந்த உணவக (கேண்டீன்) டெண்டரை ஒதுக்கித்தந்துள்ளது தமிழ்நாடு இல்லத்தின் நிர்வாகம். இந்த முறைகேடு குறித்த புகார்கள், தமிழக அரசுக்கு சென்றுள்ள நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்கின்றனர் அதிகாரிகள்.
மேலும் விசாரித்தபோது, ‘’"தமிழ்நாடு இல்லத்தின் ரெசிடென்சியல் கமிஷனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆஷிஸ்குமார், இவரது பெர்சனல் உதவியாளர் கார்த்திக்கேயன், கேட்டரிங் மேனேஜரும் சீனியர் ஹவுஸ் கீப்பரு மான கணேசன் ஆகிய மூவர் கூட்டணி வைத்தது தான் இங்கு சட்டம். அதேசமயம், கார்த்தி கேயனும், கணேசனும் ஆஷிஸ்குமாரை தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
சமையல் கலைஞருக்கு விதிகளை மீறி கேண்டீன் டெண்டர் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் கார்த்திகேயனும், கணேசனும் இருக்கின்றனர். இதற்காக கனமான மிகப்பெரிய தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், கமிஷனர் ஆஷிஸ்குமாருக்குத் தெரியும். அவரது அனுமதியுடன்தான் இந்த டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து அவரின் கவனத்துக்கு புகார்கள் வந்தன. ஆனாலும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/tender1-2025-11-21-10-09-37.jpg)
இந்த டெண்டர் விவகாரம் மட்டுமல்ல; தமிழ்நாடு இல்லத்தில் பல முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசிடமிருந்தும் தமிழக அரசிடமிருந்தும் ஆஷிஸ்குமாருக்கு வரக்கூடிய அலுவலக ரீதியிலான இ-மெயில்களை பார்வையிடும் பொறுப்பை கார்த்திகேயனுக்கு கொடுத் துள்ளனர். அதனடிப்படையில் மெயில்களை ஆராயும் கார்த்திகேயன், பல விசயங்களை ஆஷிஸ்குமாரின் கவனத்துக்கு கொண்டுசெல்வ தில்லை. இதனால், பல முக்கிய விசயங்கள் தமிழக அரசின் கவனத்துக்கே வருவதில்லை; பல விசயங்கள் காலதாமதமாக வருகின்றன.
மேலும், தமிழகத்திலுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு போன் செய்யும் கார்த்திகேயன், ஆஷிஸ்குமாரின் தனிச்செயலர் பேசுகிறேன் எனச்சொல்லி, தனக்கு வேண்டப்பட்டவர்களின் பிரச்சினைகளை விவரித்து, அதனை உடனடியாக முடித்துக் கொடுங்கள் என ஆர்டர் போடுகிறார். இவர், வெறும் உதவியாளர் மட்டும்தான்; ஆனால், தனிச் செயலர் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சொல்லிவருகிறார். இப்படி பல புகார்கள் இவர் மீது இருக்கிறது.
அதேபோல, அரசு பணிகள் நிமித்தமாக டெல்லிக்கு வரும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்குவார்கள். அவர்களை நெருங்கி நட்பை வளர்த்துக்கொள்ளும் கேண்டீன் மேனேஜர் கணேசன், அதிகாரிகள் விரும்பும் பல விசயங்களை செய்துகொடுத்து அவர்களை வளைத்து வைத்துக்கொள்கிறார். இதனால், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் என் பாக்கெட்டில் என்று சொல்லி கணேசன் போடும் ஆட்டம் தமிழ்நாடு இல்லத்தில் ஓவராக இருக்கிறது. விவரிக்க முடியாத பல வில்லங்கங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து தமிழக அரசு சீரியஸாக விசாரித்து ஆக்ஷன் எடுக்கவில்லை எனில், தமிழ்நாடு இல்லம் தமிழக அரசுக்குப் பெரிய தலைவலியைக் கொடுக்கும்''’என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
இத்தகைய புகார்கள் குறித்து ஆஷிஸ் குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’"தமிழ்நாடு இல்லத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. இருப்பினும், நீங்கள் சொல்லும் புகார்கள் குறித்து விசாரிக்கிறேன். தவறுகள் நடந்திருந்தால் ஆக்ஷன் எடுக்கப்படும்''’ என்கிறார் கூலாக.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/tender-2025-11-21-10-09-20.jpg)