"ஹலோ சார்... வணக்கம். நான்தான் பேசறேன்.'' (டெண் டர் கோருபவர்)

""வணக்கம் சொல் லுங்க...'' (நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம்)

""அப்புறம் சார்... ப்ளட் ஃபண்ட் வொர்க் ஏதாச்சும் வந்துச்சா?''

""ஒரே வொர்க்தான்... பாலம் கட்ட வந்துச்சு.''

Advertisment

""எந்தப் பாலம் சார்.?''

""உலியம் பாறை.''

""இல்ல சார். நான் ஒண்ணு கேட்கறேன். ஒண்ணுமே இல்லாத ரெண்டரை லட்சம் வொர்க் ஒண்ணுக்கு நாலு தடவை போஸ்டர் ஒட்டி டெண்டர் விட்டீங்க. ஆனா உலியம் பாறை பாலம்...''

Advertisment

d

""இல்லைங்க... சொல்றத கேளுங்க. நீங்க எல்லாம் காம்ப்ரமைஸ் பேசி கொடுக்கச் சொன்னதாலதான் அவருக்கு கொடுத்தோம்.''

""சார்... நாங்க எல்லாம்ன்னு எல்லாம் சொல்லாதீங்க.''

""சரி விடுங்க... அடுத்து வரக் கூடிய வேலையில பாத்துக்கலாம். சரீங்களா?''

""இல்லைங்க சார்... 10 லட்சம் ரூபாய் வேலைய நஸ்ருதீனுக்கு கொடுத்துட்டு 2 லட்ச ரூபாய் வேலைய மட்டும் எங்களுக்கு கொடுத்தா என்ன நியாயம் சார்?''

""இல்லைங்க... அது கமிஷனர் எடுத்த முடிவுங்க. அதைய நான் முடிவு பண்ண முடியாதில்ல..?''

""அப்ப... இது கமிஷனர் பண்ணின வேலைதானா இது?''

""எதுங்க?''

""இல்ல... கமிஷனர் பண்ணின வேலைதானா இது?''

""நாம என்னங்க பண்ண முடியும்? கமிஷனருக்கு வேண்டப் பட்டவரு நஸ்ருதீன்.''

""கமிஷனர் என்ன டெஸிஸன் எடுக்கிறாரோ... அதைத்தானே செய்ய முடியும்.''

""சரி சார்... வருத்தப்படாதீங்க. நான் இப்படி எல்லாம் பேசறேன்னு? அதிமுக மாவட்ட செயலாளர்க்கு என்ன மரியாதை இருக்குதோ... அதே மரியாதை திமுககாரனான எனக்கும் இருக்கு. நீங்க ரகசியமா டெண்டர் விஷயத்துல பண்ணக் கூடாதுன்னுதான் பேசிட்டு இருக்கேன்.''

""என்ன சார் ரகசியம்?''

""சார்... சொல்றத கேளுங்க... மொதல்ல நீங்க ஓர் அதிகாரி. அதிமுகதான் எப்போதுமே தமிழ் நாட்டை ஆளும்னு மனசுக்குள்ள நெனச்சுக்காதீங்க.''

""அய்யய்யோ... அப்படி நெனச்சிருந்தா இத்தனை நாளா ஒரே இடத்துல போஸ்டிங்ல இருக்க முடியுமா? நான் உங்களுக்கு எதுவுமே பண்ணிக் கொடுத்தது இல்லையா?''

""சார்... 5 லட்சம், 10 லட்சம்னு என்னைக்கோ நாங்க சண்டை போட்டுத்தான் உங்ககிட்ட இருந்து வேலை எடுத்துருக்கறோம். ஆனா அவுங்க பல கோடிக் கணக்குல வேலை செய்யறாங்க சார்.''

""சரி வுடுங்க... இந்தப் பிரச்சினையை. அடுத்த வேலையில எல்லாமே சரி பண்ணிக்க லாம். பிரச்சினை வேணாம்...'' என பதை பதைப்பாய் லைனை கட் செய்கிறார் நீலகிரி கூடலூர் நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம்.

""வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டர் என்பதே நெல்லியாளம் நகராட்சியில் அப்பட்டமாக நடக்கிறது... என்கிற புகார் பரவலாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணி புரிய சட்டத்தில் இடமில்லை. ஆனால் வெங்கடாசலம் 6 ஆண்டுகளுக்கு மேல் இதே நெல்லியாளம் நகராட்சியில் இருந்து கொண்டு பல கோடிகளை கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்...'' என்கிற குற்றச்சாட்டும் சேர்ந்துள்ளது. இதற்கெல்லாம், ""ஆமாம்... உண்மைதான்'' என இந்த ஆடியோ ரெக்கார்டு மூலம் உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் அரசு அதிகாரியான வெங்கடாசலம்.

ரகசியமாய் டெண்டர் கொடுக்கப்பட்டி ருக்கும் நஸ்ருதீன் கொடநாடு புகழ் சஜீவனால் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு கொண்டு வரப்பட்டவர். சஜீவனின் சிபாரிசு மூலமாகவே நஸ்ருதீனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டி ருக்கிறது.

இந்த நிலையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்தை தொடர்பு கொண்டோம். ""சார்... சஜீவனுக்கு வேண்டப்பட்டவருங் கறதுக்காக எல்லாம் கொடுக்கப்படலை சார். அதெல்லாம் சும்மாங்க சார். எனக்கு ட்ரான்ஸ்பர் போடவேயில்லை. ட்ரான்ஸ்பர் எங்கு போட்டாலும் அங்கே போய் வேலை செய்யத் தயாராகத்தான் இருக்கேன்...'' என லைனை கட் செய்து விட்டார்.

இந்த நிலையில்... கொட நாடு கொலை- கொள்ளை வழக்கில் சஜீவனைக் காப்பாற்ற போலீஸார் முயல்கின்றனர். இந்த வழக்கில் சஜீவனை சேர்க்க வேண்டும்... என சயான், மனோஜின் வழக்கறிஞர் ஆனந்த் ஊட்டி கோர்ட்டில் பெட்டிஷன் ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது சஜீவன் தரப்பை அதிர வைத்திருக்கிறது.

-அ.அருள்குமார்