தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான 17,000 ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்குவதற் காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையம் அக்டோபர் 20-ஆம் தேதி, டெண்டரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தது.
"இந்த டெண்டரின் நிபந் தனைகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்துகொள்ள முடியாதபடிக் கும், யாரோ குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்வு பெற வசதியாகவும் வகுக்கப் பட்டிருக்கிறது' என்கிறார்கள் டெண் டரில் ஆர்வம் காட்டியவர்கள்.
டெண்டரில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிய சிலர், "தங்கள் பெயர் வேண்டாம்' என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார்கள்.
"2019 கோவிட்டுக்கு அப்புறம் விளையாட்டுத் துறையில் தமிழக அரசு அறிவிக்கிற பெரிய டெண்டர் இதுதான். 2019-ல் இதேபோல கிராமங் கள்தோறும் அப்போதைய அரசால் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கப்பட்டது. அந்த டெண்டரில் வருடத்துக்கு 3 கோடி டேர்ன் ஓவர்தான் கேட்டிருந்தாங்க. இப்ப ஆண்டுக்கு 30 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்கு வியாபாரம் மேற் கொண்டிருக்கவேண்டும் என்கிறார்கள்.
டெண்டரில் பங்குபெற்ற பலரும், இந்த முப்பது கோடி டேர்ன் ஓவரை மூணு வருஷத்துக்கும் சேர்த்துப் போடுங்க. அதாவது வரு ஷத்துக்கு 10 கோடின்னு அறிவிச்சா நிறைய பேர் இந்த டெண்டர்ல கலந்துக்கிட வாய்ப்பிருக்குன்னு சொன் னோம்.
டெண்டரின் இன் னொரு முக்கிய விதி, கமர்சியல் டாக்ஸ், ஜி.எஸ்.டி. தமிழ் நாட்டில் பதிவுசெய்திருக்க வேண்டும். நல்ல விதி. ஆனால் 30 கோடி டேர்ன் ஓவர்ன்னு போட் டால் தமிழகத்தைச் சேர்ந்த யாரா லும் கலந்துக்கமுடியாதுன்னு டெண் டரில் பங்குபெறுபவர்களின் குறை நிவர்த்திக் கூட்டத்தில் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ்.ஸிடம் சொன்னோம். ஆனால் அவர் அதை பொருட் படுத்தவே இல்லை. அதனால் எந்தத் தளர்வும் அறிவிக்கலை.
மற்றொரு நிபந்தனை, இந்த டெண்டரிலுள்ள அதே 33 ஐட்டம்க ளை மூன்று வருடத்துக்குள் 20 கோடிக்கு சப்ளை பண்ணியிருக்க வேண்டும். அப்படி யாரும் சப்ளை செய்திருக்க வாய்ப்பே இல்லை. அதே பொருட்களை என்பதற்குப் பதில் அதுபோன்ற பொருட்களை எனக் கொண்டுவரச் சொன்னோம். அதற்கும் இறங்கிவரவில்லை. மாறாக, 33 பொருட்களுக்குப் பதில் 18 பொருட்களை 20 கோடிக்கு சப்ளை பண்ணியிருக்கவேண்டும் என நிபந்தனைகளை இன்னும் கடினமாக மாற்றிவிட்டார்கள்.
2022-ல தெலுங்கானாவில் ஒரு டெண்டர் விட்டாங்க. அதுவும் ஸ்போர்ட்ஸ் கிட் டெண்டர்தான். அதற்கும் தமிழக டெண்டருக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. சில வார்த்தைகளை மட்டும் மாற்றி டிட்டோவா அதேபோல டெண்டர் அறிவிப்புச் செய்திருக்காங்க.
தெலுங்கானா டெண்டர்ல அனிதா டெக்ஸ்டைல்ஸ்னு ஒரு நிறுவனம் கலந்துக்கிட்டது. அவங்ககிட்ட மட்டும்தான், தமிழக அரசு அறிவிச்ச டெண்டர் நிபந்தனைகளை மீட் பண்றதுக்கான வாய்ப்பு இருக்குது.
அந்த அனிதா டெக்ஸ்டைலும்கூட தெலுங்கானாவுக்கு கிட்ஸ் சப்ளை செய்யலை. ஏன்னா 11,000 ரூபாய்க்குள்ள சப்ளை செய்யக்கூடிய கிட்ஸ்களை, 31,000 வரைக்கும் விலை குறிச்சிருந்தாங்க. அதனால அவங்ககிட்டயிருந்து தெலுங்கானா அரசு பொருட்களை வாங்கலைன்னு தகவல் கிடைச்சது. ஆனா தெலுங்கானா அரசு அந்த ஜி.ஓ.வை ரத்து செய்யலை. ஆக, தமிழகத்தின் டெண்டர், குறிப்பா அனிதா டெக்ஸ்டைலுக்குச் சாதகமாத்தான் இருக்கு.
அந்த தெலுங்கானா டெண்டரோட தொகை 100 கோடி. அந்த 100 கோடி டெண்டருக்குக்கூட 8.75 கோடிதான் பிரிவியஸ் சப்ளை காபி கேட் டாங்க. அதைவிட குறைந்த தொகையுள்ள தமிழகத் தின் டெண்டருக்கு 20 கோடி பிரிவியஸ் சப்ளை காபி கேட்கிறாங்க'' என்கிறார்கள்.
மற்றுமொருவரோ, "குறை நிவர்த்திக் கூட்டத்துல விளை யாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் செயலாளர் மேகநாதரெட்டி ஐ.ஏ.எஸ்.ஸிடம், எவ்வளவோ கேட்டுக்கிட்ட போதும் பங்குபெற்றவங்களோட குறைகளைக் கேட்டு நிவர்த்தி பண்ணுவதில் ஆர்வமே காட் டலை. எதுக்குமே அவர் இறங்கி வரலை. நாங்க சொல்றத காதுலயே வாங்கல. ஒரு விஷயத் திலும் தளர்வு தரலை. இந்த டெண்டரால தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பயனடைய முடியாது. இன்னொரு விஷயம் இரண்டு பேர் சேர்ந்தும் பொருட்களை சப்ளை பண்ணலாம்னு விதிமுறை இருக்கு. அதன் படி, இரண்டு பேரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் போதும். தமிழகத்தில் இருக்கிறதெல்லாம் சின்ன கம்பெனிகள். அதனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கம்பெனிகளின் துணை யில்லாமல் டெண்டரில் பங்கு பெறவே முடியாது.
அப்படி கூட்டுச் சேர்ந்து பண்ணும்போது, அவங்களைச் சார்ந்திருக்கிற மாதிரியா ஆயிடும். நம்ம டாகுமெண்ட் எல்லாம், அந்த இன்னொரு கம்பெனிகிட்ட இருக்கும். அந்த இன்னொரு கம் பெனி சொன்னபடி சப்ளை பண்ணலைன்னா அவங்களோட சேர்ந்து பண்றவங்களும் பாதிக் கப்படுவாங்க. அப்புறம் நாங்க தடைசெய்யப்பட்டு எந்த டெண்டரிலும் கலந்துகொள்ள முடியாம போயிடுமோங்கிற பயம் வருது''’என்கிறார்.
"தமிழக டெண்டரில் தமிழர்களே பயனடைய முடியாமல் இருக்கும் அவலத்தை மாற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி முன்வரவேண்டும்' என கோரிக்கை வைக்கிறார்கள் டெண்டரில் ஆர்வம் காட்டுபவர்கள்.
ஆவன செய்வாரா அமைச்சர்?