கோவில் நிலங்கள் -சிலைகள் கொள்ளை போவதாக கடந்த ஆட்சியில் குமுறிய பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும், "தி.மு.க. ஆட்சி வந்தால் இந்து கோவில்களுக்கு பாதுகாப்பே இருக்காது' என்றனர். ஆனால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் படு சுறுசுறுப்பாக இயங்குகிறது அறநிலையத்துறை. அதன் பொறுப்பிலுள்ள கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதில் துரிதம் காட்டிவருகிறது.

dd

தி.மு.க. ஆட்சியில் உளமார உறுதியேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாதந்தோறும் சபரிமலை செல்லும் தீவிர பக்தர். கோவில்கள் மீது பயபக்தி கொண்டவர். பதவியேற்ற வேகத்தில், கோவில் சொத்து குறித்த ஆவணங்களை இணையதளத்தில் வெளியிட வழிவகுத்தார். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்போம் என சொடக்குப் போட்டுச் சொன்னார். சிவகங்கை கௌரி விநாயகர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.

அதேபோல காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் இயங்கி வந்த சென்னை சேத்துப்பட்டு சீதா கிங்ஸ்டன் பள்ளி, கோவில் நிர்வாகம் நிலத்துக்கான வாடகையை மிக அதிகளவில் உயர்த்தியதால் நடத்தமுடியாமல் தடுமாறியது. 1500 மாணவர்கள் பயிலும் இப்பள்ளி வாடகை கட்டமுடியாமல் பள்ளியை மூடும் முடிவுக்கு வந்தது. இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு நக்கீரன் கொண்டுவந்தது.

Advertisment

dd

இதனையடுத்து இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பலர் அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதில் தலையிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியையான நிர்மலாவிடம் சாவியை ஒப்படைத்து, ஏகாம்பரேஸ்வரர் பெயரிலேயே அறநிலையத்துறையின் கீழ் பள்ளி தொடர்ந்து இயங்க வகை செய்தார்.

அந்தப் பள்ளிக்கு அருகில், அதே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக் குச் சொந்தமான நிலம் இந்து மகாசபை என்ற அமைப்பின்கீழ் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. அமைப்பை நடத்திய கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற அதிரடி பார்ட்டி, அ.தி.மு.க. பிரமுகர்களின் துணையோடு ஆக்கிரமித்திருந்தார். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

Advertisment

அறநிலையத்துறை பராமரிப்புக்குப் பதிலாக கோவில்களையும் அதற்குரிய நிலங்களையும் பக்தர்களின் நிர்வாகத்தில் ஒப்படைக்கவேண்டும் என்ற பா.ஜ.க. கோஷ்டியில் இந்து மகாசபையும் உண்டு. ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததே அதன் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீதான் என்பதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிரடியாக நிரூபித்திருக்கிறார் அமைச்சர். இந்த கோடம்பாக்கம் ஸ்ரீ, ஆட்கடத்தல் -கொலை மிரட்டல் வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.