உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிறப்புபெற்ற ஆயிரங்கால் மண்டபமான ராஜசபையில்தான் சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றினார். இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது, சிவகாமி அம்மனும், நடராஜ பெருமானும் ஒன்றாக காட்சிதருவார்கள். இதனைக் காண பல லட்சம் மக்கள் கூடுவார்கள்.
சிதம்பரத்தில் சிவனை கனகசபையில் ஏறி வழிபடவேண்டும் என்றால், நாட்டின் ஜனாதிபதியே ஆயினும் சட்டை அணியாமல்தான் செல்லமுடியும். அதேபோல், அங்கு தமிழில் தேவாரம் பாடமுடியாது; வேதச்சொல் மட்டுமே ஒலிக்கும். சபையின் கீழிருந்து மட்டுமே தமிழில் பாடமுடியும். "சைவத் தமிழ் அறிஞர்களான தேவார மூவர் பாடிய பாடல்களுக்கு அனுமதி இல்லையா' என ஓதுவார் ஆறுமுகசாமி நடத் திய போராட்டம் இன்னும் கண்முன் நிழலாடுகிறது. இப்படி பல்வேறு மரபுகளைக் கடைப்பிடித்துவரும் இந்தக் கோயிலில், ஆன்மிக நிகழ்ச்சி கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தந்ததில்லை. அப்படி இருக்கையில், கடந்த 11-ந் தேதி சிவகாசி பட்டாசு தொழிலதிபரின் மகள் சிவகாமி மற்றும் சென்னை ரத்தினா ஸ்டோர் உரிமையாளரின் மகன் சித்தார்த்தின் திருமணம் நடந்துள்ளது.
நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக ஆயிரங்கால் மண்டபத்தை மாற்றி நடைபெற்ற இந்தத் திருமணத்தால், கொந்தளிக்கும் சிவ பக்தர்கள் ஆகமவிதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து சிதம்பரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளருமான கே.பால கிருஷ்ணன், “""சிதம்பரம் கோயிலில் நடை பெற்ற பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கலைஞர் ஆட்சியில் கோயிலை அரசே நிர்வகித்தது. அடுத்துவந்த ஜெ.அரசு, வழக்கை சரியாக நடத்தாததால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தீட்சிதர்களுக்கு சாதக மாக வந்தது. இதைப் பயன் படுத்திக்கொண்ட தீட்சிதர்கள் கோயிலில் செய்யும் அட்ட காசங்களை சொல்லிமாளாது. தீட்சிதர்களின் வருமானத் திற்கு கணக்குக் காட்டுவ தில்லை. தற்போது மரபு வாய்ந்த ஆயிரங்கால் மண்ட பத்தை திருமணஹாலாக ஆக்கிவிட்டார்கள். காசு கொடுத்தால் எதற்கு வேண்டு மானாலும் அனுமதி கொடுப் பார்களா?''’என கேள்வியெழுப் பினார்.
இந்து ஆலய பாதுகாப் புக்குழு தலைவர் செங்குட்டு வன் பேசுகையில், ""இரவு 11 மணிக்குமேல் நடை சாத்தி விட்டால், யாருக்கும் கோயி லுக்குள்ளே அனுமதி கிடை யாது. ஆனால், இரவு முழு வதும் 50-க்கும் மேற்பட்டவர் கள் பூ அலங்காரம் என்ற பெயரில் புகழ் மிக்க -புனிதம் நிறைந்த பொற்கூரை மீது ஏறியுள்ளனர். திருமணத்தின் போது சிலர் செருப்பு அணிந்துசென்ற படமும் கிடைத்துள்ளது. இதெல்லாம் தீட்சிதர்களுக்குத் தெரியவில் லையா?''’என்றார் ஆதங்கத்துடன்.
""கோயிலில் பூஜைசெய்ய உரிமையுள்ள 440 தீட்சிதர்களின் குடும்பங்களுக்கு பட்டுப்புடவை, தலா ரூ.1 லட்சம், நிகழ்ச்சியை நடத் திய தீட்சிதருக்கு பத்து மடங்கு கூடுதல் சலுகைகள், கோயிலுக் கென்று தனியாக சலுகைகள் என வாங்கிவிட்டே திருமணத்திற்கு அனுமதி தந்துள்ள தாக தகவல் வருகிறது. தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற ஆணவத்தில் தீட்சிதர்கள் ஆடுகிறார்கள்''’என்கிறார் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன்.
ஸ்டேண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இயக்குனர் களில் ஒருவரும், மணப்பெண்ணின் தந்தையுமான ராஜரத்தினத்திடம் கேட்டபோது, ""நாங்க சிவ பக்தர்கள். நடராஜர் சிவகாம சுந்தரி சமேதமாக பக்தர்களுக்கு தரிசனம்தரும் ஆயிரம்கால் மண்டபத்தில் பெண்ணுக்கு திருமணம் நடத்த ஆசை. கோயில் தீட்சிதர்களிடம் இதைத் தெரி வித்தபோது, நிர்வாகக் கமிட்டியைக் கூட்டி குடவோலை முறையில் சீட்டுக்குலுக்கி, நடராஜரே அனுமதி கொடுத்துள்ளதாக சொன்னாங்க. தீட்சிதர்களுக்கும், கோயிலுக்கும் உதவிசெய்தது உண்மைதான்''’என்றார் நம்மிடம். இந்தத் திருமணத்தை நடத்திவைத்த பட்டு தீட்சிதர், ""நடராஜரே இங்கு திருமணம் நடத்த முடிவு செய்தார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. இனி யாருக்கும் அனுமதி கிடையாது''’என்றார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடந்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், 13-ந் தேதி கோயில் நிர்வாகம் சார்பில் தீட்சிதர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பட்டு தீட்சிதர், ""என்மேல் தவறு இருந்தா எந்த நட வடிக்கைக்கும் கட்டுப்படுறேன்'' எனச் சொல்ல, "இது தீட்சிதர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத் தியது' எனச் சொல்லி கோபம் காட்டினர் மணிவாசகம், குஞ்சிதபாதம் தீட்சிதர்கள்.
அப்போது பிரஸுக்கு போட்டோ கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது. இதையறிந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்களிடம், நவமணி, ஐயப்பா தீட்சிதர்கள் பட்டு தீட்சிதரை சஸ்பெண்ட் செய்ததாக சொன்னார்கள்.
ஹெச்.ராஜா போன்றவர்கள் இந்து அற நிலையத்துறையை கலைத்துவிட்டு, கோயில்களை பழைய தர்மகர்த்தா முறைக்கே மாற்றவேண்டும் என்கிறார்கள். அறநிலையத்துறை அநியாயத்தை விட பெரிய அயோக்கியத்தனமாக இருக்கிறது தீட்சிதர்கள் கல்லா கட்டும் சிதம்பரம் கோயில் நிர்வாகம்.
-காளிதாஸ்