மிழகத்தை மேம்படுத்த, 2030-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வை திட்டமாக, தமிழகத் திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து, "உங்க கனவைச் சொல்லுங்க” என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் தொடங்கிவைத்தார்.

Advertisment

2021-ல் தி.மு.க. ஆட்சியமைத்த பின் அரசு கொண்டுவந்த திட்டங்களின் பயன், பயனாளிகளுக் குச் சென்றடைந்ததா என்ற தரவுகளைச் சேகரிக்கவும்,  தமிழகத்தில் தற்போதுள்ள 1. 91 கோடி குடும்பங்களின் கனவுகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 

Advertisment

தமிழகம் முழுவதும் 50,000 தன்னார்வலர் களைத் தேர்வுசெய்து, அவர்கள் மூலமாக 30 நாட்களுக்குள், தமிழகத்தில் கிராமப்புறம், நகர்ப்புறத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரையும் சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள், அவர்களின் கனவுகளை கண்டறியும் களப்பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவத்தினை குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினரிடம் வழங்கி பூர்த்தி செய்து தரும்படி கூறுவர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட வடிவத்தை சரிபார்த்து கைபேசி செயலி மூலம் பதிவேற்றம்செய்து குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள அட்டை எண்ணுடன் கூடிய "உங்கள் கனவை சொல்லுங்க' அட்டையை வழங்குவார்கள். 

தன்னார்வலர்களுக்கு செல்போன் மற்றும் உபகரணங்களை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வர், "மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுத்தாலும், புறக்கணித்தாலும் அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழகம் தவிர்க்கமுடியாமல் முதலிடத்தில் இருக்கிறது. உங்கள் கனவை நீங்களே சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் "உங்கள் கனவைச் சொல்லுங்க' திட்டம். 2021-ல் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனைபுரிந்துள்ளது திராவிட மாடல் அரசு. இந்த திட்டத்தால் கிராமப்புற, நகர்ப்புற உட்கட்டமைப்புகள், மொழி, பண்பாடு, கல்வித் திறன் போன்றவை மேம்படும். சமூகம் வளர்ச்சியடையும், விவசாயம், மீன்பிடித் தொழில், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் ஆகிய  துறைகளில் தன்னிறைவு பெற்று தமிழ்நாடு வளர்ச்சிபெறும்''’என்றார். 

Advertisment

கூட்டத்தில் முதல்வர் நேரடியாக பொதுமக்க ளிடம் குறைகளைக் கேட்டறிந்தபோது, அமுதா என்ற பெண் பட்டியல் சமூகத்திற்கு வழங்குவதைப் போல மானியக் கடன் மற்ற சமூகத்தைச் சேர்ந் தவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுபோல் பலரும் தங்கள் கனவுகளை நேரிலும், காணொலி மூலமும் கூறினார்கள்.  "விரைவில் இவையனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்' என்று தெரிவித்தார் முதல்வர்.