நாட்டின் தலைநகரும் உச்சகட்ட பாதுகாப்புகள் அதிகமிருப்பதாக மார்தட் டிக் கொள்ளும் டெல்லியில் இந்த ஆண்டின் முதல் 2 வாரங்களில் மட்டும் 509 பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 807 பேர் மாயமாகியிருப்பதாக தகவல் கிடைத்திருக் கிறது. இத்தகவலின் அதிர்ச்சியே இன்னும் மாறாத நிலையில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள வடமாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 6,35,245 நபர்கள் காணாமல் போயிருப்பதாக கிறுகிறுக்க வைக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

Advertisment

கடந்த வாரம் எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் இடம்பெற்றது குறித்த விவா தங்கள் சூடுபிடித்துக்கொண்டிருந்த அதேவேளை யில், டெல்லியில் ஒவ்வொரு நாளும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாகவும், அதில், பெண்களும் குழந்தைகளுமே அதிகமெனவும் தகவல் வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியமைந்தபிறகு அங்கு காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை இது எழுப்பியுள்ளது. 

Advertisment

இந்தியா முழுக்க டிஜிட்டல்மயமாகியுள்ள நிலையில், காவல்துறையின் இணையதளங்களும் அதிலுள்ள தரவுகளும் பொதுமக்களின் பார்வைக்கு தற்போது எளிதாகக் கிடைக்கின்றன. அப்படி, கிடைத்த ஒரு தகவலின்படி, 2026 புத்தாண்டு துவங்கிய முதல் இரண்டு வாரங்களில் மட்டும்  807 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் அதாவது, 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனவும், அதில், 45 சிறுவர்களும், 145 சிறுமிகளும் அடக்கம் எனவும் கிடைத்த தகவல்கள் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்களில்  தற்போதுவரை வெறும் 235  நபர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.

தவிர, கடந்த 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,000-க்கும் மேற்பட்ட டீன்ஏஜ் வயதுள்ள இளம்பெண்களும், இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3,500 பெண் குழந்தைகள் காணாமல் போவதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை பெரியளவில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கி றார்கள் தலைநகரவாசிகள். 

Advertisment

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது, “"கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 3,970 சிறுமிகள் உட்பட 5,081 இளம்வயதினர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், 1,013 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என கைவிரிக்கிறது டெல்லி காவல்துறை.  இந்தப்போக்கு ஆண்டு தோறும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சென்ற 2025 ஆம் ஆண்டில் காணாமல்போன பெண்களின் எண்ணிக்கை 14,870. இந்த தரவுகளையெல்லாம் பார்க்கும்போது இளம்வயது ஆண் பெண்களுக்கு  பாதுகாப்பற்ற மாநிலமாக டெல்லி மாறிவருவதை அறியமுடிகிறது.

delhipolice1

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு கடந்த ஆண்டு மட்டும் 14,870 பெண்கள் மற்றும் 9,638 ஆண்கள் உட்பட மொத்தம் 24,508 பேர் காணவில்லை. 

இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால்,  ஒவ்வொரு நாளும் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் காணாமல்போனது தெரியவந்தாலும் கூட டெல்லியை ஆளும் பெண் முதல்வரான ரேகா குப்தா இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காதது பொறுப்பற்ற விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் டெல்லியில் மட்டும் சுமார் 2,32,737 பேர் காணாமல் போயுள்ளதாகவும்,  அவர்களில் சுமார் 52,000 பேரின் வழக்குகள் தீர்க் கப்படாமல் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின் றன. காணாமல்போன அனைவருமே எதற்காகக் காணாமல் போனார்கள் என்ற எந்த உருப்படியான தகவல்களும் இதுவரை கிடைக்காத நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாகவோ அல்லது குடும்ப பிரச்சனை காரணமாகவோகூட அவர்கள் அக்கம்பக்க மாநிலங்களுக்கு குடிபெயர்ந்திருக்க லாம் என அசால்டாகக் கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள். 

டெல்லி, ஹிமாச்சல்பிரதேசம், பஞ்சாப், சண்டிகார், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து ‘ஜிப்நெட்’ என்ற மண்டலவாரியான ஒருங்கிணைந்த காவல் வலையமைப்பு ஒன்றை டெல்லி காவல்துறை பராமரித்துவருகிறது. எனவே, டெல்லியில் மாயமானவர்கள் அக்கம்பக்க மாநிலங்களுக்குச் சென்றிருந்தால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு மீட்கமுடியும்.

இந்த டெல்லி, ஹரியானா, உ.பி. உட்பட டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘ஜிப்நெட்’ தரவுகளின் படி கடந்த 30.09.2018 முதல் 31 ஜனவரி 2026 வரை 6,35,246 பேர் மாயமாகி இருப்பதாக தெரிகிறது. நிலைமை இப்படி சீரியஸாக இருந்தாலும் டெல்லி காவல்துறையின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. தற்போது, தலைநகரில் மாயமாகும் மனிதர்கள் குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், "இதெல்லாம் சும்மா புரளிங்க. மீடியாகாரங்க எல்லாரும் காசை வாங்கிட்டு செய்திபரப்புறாங்க' என இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயல்கிறார் டெல்லி காவல்துறை இணை ஆணையரான சஞ்சய் தியாகி.

வெளிநாடுகளைச் சேர்ந்த ‘ஹியூமன் ட்ரா ஃபிக்கர்ஸ்’ எனப்படும் ஆட்கடத்தல் நெட் வொர்க் டீமைச் சேர்ந்த மாஃபியாக்களால் உடல் உறுப்புகளுக்காகவோ அல்லது பாலியல் தொழி லுக்காகவோ இவர்களைக் கடத்திச் செல்கிறார் களோ என்ற சந்தேகம் அதிகரித்துவருகிறது. காணாமல் போனவர் களின் பட்டியல் உச்சத்திலிருப்பதும், கண்டுபிடிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில்தான்” என வேத னையாகக் கூறுகின்றனர் அவர்கள்.