Advertisment

இளம்பெண் கூட்டு பாலியல் வீடியோ! பொள்ளாச்சி ஆனதா விருதுநகர்?

ff

பொள்ளாச்சி சம்பவம் போன்ற கூட்டு பாலியல் பலாத்காரம் விருதுநகரிலும் நடந்திருக்கிறதே!’ எனப் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக, தமிழகமே கொந்தளிக்கிறது.

Advertisment

‘நடந்தது என்ன என்ற பதற்றம் பரவியுள்ள நிலையில், காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அந்த வட்டாரத்திலிருந்தே விவரங்களைத் தெரிவித்தனர்.

Advertisment

vv

காதலிப்பதாக அந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழகிய ஹரிஹரன், பாலியல் உறவு வைத்திருந் தபோது மறைமுகமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தான். அந்த வீடியோவை, தனது நண்பர்களான பிரவீன், ஜுனத் அகமது ஆகியோர் செல்போன் களுக்கும் அனுப்பி னான். அது, ‘மொபைல் கேம்’ நட்புகளான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேரின் பார்வைக்கும் போனது. ஹரிஹரன் உள்ளிட்ட அந்த 7 பேரும், கடந்த 6 மாதங்களாக அந்த வீடியோவை வைத்து பிளாக்-மெயில் செய்து, தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் உறவு கொண்டனர். காதலன் ஹரிஹரன் ஏமாற்றி விட, அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும், பள்ளி மாணவர்கள் நால்வரின் தொந்தரவு தொடர்ந்தது. அதனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமியின் உதவியை அந்தப் பெண் நாட, அவனும் மிரட்டி பாலியல் உறவுகொண்டான். தொடர்ந்து இத்தனைபேரை எப்படி சமாளிப்பது என நொந்துபோன பெண், விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் எழுத்து மூலமாக 20-ஆம் தேதி புகாரளிக்க, 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட, ‘சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தை கள்’ எனக் கருதப்படும் பள்ளி

பொள்ளாச்சி சம்பவம் போன்ற கூட்டு பாலியல் பலாத்காரம் விருதுநகரிலும் நடந்திருக்கிறதே!’ எனப் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக, தமிழகமே கொந்தளிக்கிறது.

Advertisment

‘நடந்தது என்ன என்ற பதற்றம் பரவியுள்ள நிலையில், காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அந்த வட்டாரத்திலிருந்தே விவரங்களைத் தெரிவித்தனர்.

Advertisment

vv

காதலிப்பதாக அந்தப் பெண்ணிடம் நெருங்கிப் பழகிய ஹரிஹரன், பாலியல் உறவு வைத்திருந் தபோது மறைமுகமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தான். அந்த வீடியோவை, தனது நண்பர்களான பிரவீன், ஜுனத் அகமது ஆகியோர் செல்போன் களுக்கும் அனுப்பி னான். அது, ‘மொபைல் கேம்’ நட்புகளான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேரின் பார்வைக்கும் போனது. ஹரிஹரன் உள்ளிட்ட அந்த 7 பேரும், கடந்த 6 மாதங்களாக அந்த வீடியோவை வைத்து பிளாக்-மெயில் செய்து, தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் உறவு கொண்டனர். காதலன் ஹரிஹரன் ஏமாற்றி விட, அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும், பள்ளி மாணவர்கள் நால்வரின் தொந்தரவு தொடர்ந்தது. அதனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமியின் உதவியை அந்தப் பெண் நாட, அவனும் மிரட்டி பாலியல் உறவுகொண்டான். தொடர்ந்து இத்தனைபேரை எப்படி சமாளிப்பது என நொந்துபோன பெண், விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் எழுத்து மூலமாக 20-ஆம் தேதி புகாரளிக்க, 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட, ‘சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தை கள்’ எனக் கருதப்படும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் இளைஞர் நீதிமன்றக் குழுமம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தென் மண்டல டி.ஐ.ஜி. பொன்னி, "பெண்கள் யாரிடம் பழகினாலும் கவனமாகப் பழக வேண்டும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது, சென்சிடிவான விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வது?''’என்று இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசத் தயங்கினார்.

அந்தப் பெண் வசிக்கும் ஏரியாவிலிருந்து ஒருவர், "கைதான 8 பேரும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், இது காதல் விவகாரமாகத் தெரியவில்லை. அதனால், உண்மைகள் மறைக்கப்பட்டு, அவசர கதியில் அரசியலாக்கப்பட்டு விட்டன''’எனக் குமுறலாகச் சொல்லிவிட்டு, "ஆண்-பெண் பேதம் பார்க்காமல், சாதி ஏற்ற-இறக்கத்தை கருத்தில் கொள்ளாமல், குற்றமிழைத்தது யாரென்றாலும் அம்பலப்படுத்துங்கள்''’என்று பீடிகையோடு பேசினார்.

நாம் களமிறங்கினோம்.

படிக்க வைத்த பா.ஜ.க. பிரமுகர்!

விருதுநகரில் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில், நான்கு வீடுகளை உள்ளடக்கிய ஒரு காம்பவுன்ட் வீட்டில் தன் தாயுடன் அந்தப் பெண் வசித்து வருகிறார். விருதுநகர் தனியார் கல்லூரியில் அவள் கார்மென்ட் டெக்னாலஜி படித்தபோது, அவளுக்கு தந்தை இல்லை எனக் கூறி அக்கல்லூரி தரப்பிலிருந்து உதவி கேட்க, விருதுநகர் பா.ஜ.க. பிரமுகர் பாண்டுரங்கன், தனது பென்டகன் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் படிக்க வைத் துள்ளார். படிப்பை முடித்ததும் அந்த நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது. நான்கு மாதங்களுக்கு முன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டாள்.

வீட்டுக்கே வந்த பள்ளி மாணவர்கள்!

அந்தக் காம்பவுண்ட் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், "அந்தப் பெண்ணின் அம்மா எங்கே வேலைக்கு போறாங்க, எப்ப வீட்டுக்கு வருவாங்கன்னு யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்ணும் காலையிலேயே வேலைக்குன்னு கிளம்பிருவா. எங்கே என்ன வேலை பார்க்குதுன்னு ஒருத்தருக்கும் தெரியாது. எந்த நேரமும் போனும் கையுமாத்தான் இருக்கும். எங்ககிட்ட நாலு வீட்டுக்கும் பொதுவான காம்பவுண்ட் கேட் சாவி இருக்கு. அன்னைக்கு ராத்திரி கேட்டை பூட்டின பிறகு, அந்த வீட்டுக்குள்ள இருந்து ரெண்டு (ஸ்கூல்) பசங்க வெளியவந்தாங்க. அப்ப எதிர்வீட்டு மாடசாமி பார்த்துட்டு, "யாருடா நீங்க?'ன்னு சத்தம் போட, அவனுங்க மொட்டை மாடிக்கு ஏறி, தாவிக் குதிச்சு ஓடிட்டாங்க. அப்பவே மாடசாமி அவளைத் திட்டினாரு.

நாலு குடும்பம் குடியிருக்கிற இடத்துல இந்த மாதிரி வேலை வச்சிக்கிடாதன்னு புத்திமதி சொன்னாரு. மாடசாமி புள்ளைகளுக்கு அந்தப் பொண்ணுதான் டியூசன் சொல்லிக் கொடுத்தது. இப்ப என்னடான்னா, அவரும் தப்பா நடந் துக்கிட்ட புகாரில் ஜெயிலுக்கு போயிட்டாரு'' என்றார்.

ஏமாற்றிய காதலன் எனக் காவல்துறை சுட்டிக்காட்டும் ஹரிஹரனின் தந்தை மகேந்திரன் நம்மிடம், "என்ன நடந்துச்சுன்னே தெரியல. என் மகன் எப்படி போயி சிக்கினான்னு ஒண்ணும் புரியல...''’என்று கூற, அந்த ஏரியாவாசி ஒருவர், "ஹரிஹரனுக்கு கல்யாணமாயிருச்சு. மூணு மாசம்கூட பொண்டாட்டிகூட வாழல. விவகாரத்து வரைக்கும் போயிருச்சு. நல்ல வசதியான வீட்டுப் பையன். தி.மு.க. இளைஞரணியில வேற இருக்கான். இவன்கூட அரெஸ்ட்டான ஜுனத் அகமதுவும் தி.மு.க. இளைஞரணி லோக்கல் பொறுப்புல இருக்கான். உண்மையா. காதலிக்கிறவன், ஃப்ரண்ட்ஸ்கிட்ட வீடியோவ காட்டுவானா? தப்பா நடந்துக்க அனுமதிப்பானா? காமத்தைப் போய் காதல்ன்னு சொல்லிக்கிட்டு.. எல்லாம் பணம் படுத்துற பாடு''’என்று மீசையை முறுக்கினார்.

vv

பிஞ்சில் பழுக்கவைத்த கொரோனா விடுமுறை!

போலீஸ் சோர்ஸ் ஒருவர் “"மொதல்ல அந்தப் பெண் புகாரே கொடுக்கல. ஒரு விசாரணைல எக்குத்தப்பா ஒருத்தரோட செல்போனில் இருந்த வீடியோ-கால் ஆபாச ஸ்க்ரீன்-ஷாட் போலீஸ் கண்ணுல பட்டுருச்சு. அப்புறம்தான், அந்தப் பொண்ணை விசாரிச்சு புகார் வாங்கிருக்காங்க. அப்புறம் ஒரு விஷயம். அந்த ஸ்கூல் பசங்கதான் போட்டி போட்டுக்கிட்டு அந்தப் பெண் வீட்டுக்கு மாறி மாறிப் போயிருக்காங்க. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கன்னு அந்தப் பொண்ணு கெஞ்சியும் விடல. கல்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும் நாங்க வரத்தான் செய்வோம்னு மிரட்டியே தப்பு பண்ணிருக்காங்க. ஆறு மாசமா இல்ல.. ஒரு வருஷமா இந்தக் கூத்து நடந்திருக்கு. அந்த வீடியோ இன்னும் யார் யார் கையில் இருக்கோ? மாட்டாதவங்க எத்தனை பேரோ?'' என்று கேள்வி எழுப்பினார்.

சம்பந்தப்பட்ட நான்கு பள்ளி மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியில் அழுது பரிதவிக்க, அவர்கள் வசிக்கும் மேலத்தெருவைச் சேர்ந்த ஒருவர் “"கொரோனா லீவு விட்டாலும் விட் டாங்க. கடந்த ரெண்டு வருஷத்துல, இந்தப் பசங்க எப்ப பார்த் தாலும் செல்போனை நோண்டிட்டே இருந்தானுக. பிஞ்சுல பழுத்தவனுக. இப்ப மாட்டிக்கிட்டாங்க''’என்றார் யதார்த்தமாக.

இதிலும் அரசியல்!

விருதுநகர் தி.மு.க. பிரமுகர் ஒரு வர் “தி.மு.க. இளைஞ ரணி பொறுப்புல இருந்த ஜுனத் அகமது, எம். எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கார் முன்னால நின்னு போட்டோ எடுத்திருக்கான், உடனே, எம்.எல்.ஏ. கார்லதான் அந்தப் பெண்ணைப் பார்க்க ஜுனத் அகமது போனான்னு கதை கட்டிட்டாங்க. கட்சிக்கும் இந்த தப்பான சோலிக்கும் என்ன சம்பந்தம்? இவனுக ரெண்டு பேரும் எப்படி கட்சில சேர்ந்தாங்கன்னே தெரியல. கட்சி நடவடிக்கை எதுலயும் கலந்துக்காத டம்மி பீஸுங்க. ஆனாலும், விவகாரம் கைதுவரை சென்றுவிட்டதால், ஜுனத் அகமது மீது தி.மு.க. பொதுச்செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியிருக்கிறார். விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வோ, கைதான ஜுனத் அகமது முஸ்லீம் என்பதாலும், அவர் தி.மு.க.வைச் சேர்ந்த வர் என்பதாலும், ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்கா’ என்ற கணக்கில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத் திருக்கு. நமது வலிமையைக் காட்டுவோம் என அண்ணாமலையை விருதுநகருக்கு அழைத்துவந்து, அரசியல் பண்ணுகிறது''’என்றார். விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு சமூகநலத் துறையினர் ‘கவுன்சிலிங்’ அளித்து வருகின்றனர்.

போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்த நிலை யில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியிருக் கிறார் முதல்வர். அது மட்டுமின்றி, "60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வழக்கை நடத்தும் விதம், இந்தியாவுக்கே மாடலாக அமை யும். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போல நிச்சயம் இது இருக்காது'’என உறுதியளித்திருக் கிறார். அதே உறுதியுடன் உண்மைகள் அனைத்தும் விசாரணையில் வெளிவரவேண்டும்.

nkn260322
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe