மீபத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரத்துக்கு ஹேக் செய்யப்பட்டதல்லவா? அது, பிட்காயினுக்கு இந்தியா சட்ட பூர்வ அனுமதி கொடுத்ததாகவும், இந்திய அரசு பிட் காயினை வாங்கி பலருக்கும் விநியோகம் செய்வதாகவும் பொய்யான செய்தியைப் பரப்பத்தான்.

கிரிப்டோகரன்சி என்பது ஒரு விர்ச்சுவல் கரன்சி. இருக் காது ஆனா இருக்கும். உலக நாடுகளின் கரன்சியைப்போல் இந்த கரன்சி அச்சடிக்கப்படுவ தில்லை. கிரிப்டோகரன்சி தளத் துக்குச் சென்று பணம்செலுத்தி னால், உங்கள் கணக்குக்கு அதற்குச் சமமான கிரிப்டோ கரன்சியை அளிப்பார்கள். எல்லாம் கணக்கில் மட்டும்தான். கடைசிவரை இதைக் கையில் தொட்டே பார்க்கமுடியாது. அதாவது டிஜிட்டல் கரன்சி.

cc

Advertisment

பிட்காயினுக்கு எந்த அரசாங்கமும் பொறுப்பில்லை. இவற்றை விநியோகிப்பதற் கெனவே சில அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவற்றிடம் நீங்கள் பணம் செலுத்தியோ, செல்போன் செயலி மூலமோ வாங்கிக் கொள்ளலாம். அதன் பலவீனம் உலக அரசுகள் அங்கீகரிக்காதது. பலம் அதன் தினசரி சந்தை மதிப்பு. நீங்கள் வாங்கிய பிட்காயினை இணையம் மூலமாக உங்களுக்கு வேண்டி யவர் கணக்குக்கு அனுப்பிவிட லாம். வாங்கியவர் பெயரும் வெளியில் தெரியாது. கொடுத்த வர் பெயரும் தெரியாது. அத னால் சர்வதேச போதைக் கடத் தல் குழுக்கள், ஹேக்கர் குழுக்கள், சட்டவிரோத வர்த்தகங்களில் பிட்காயின் பிரபலம். கணினியை ஹேக்செய்து முடக்குபவர்கள், தங்களுக்கான பணத்தை பிட்காயி னாகத்தான் கேட்டுப்பெறு வார்கள்.

அதற்காக பிட்காயின் என்றாலே சட்டவிரோத பரி வர்த்தனையில் மட்டுமே பயனா கிறது என்றும் பொருளில்லை. நண்பருக்கு பரிசாக அனுப்பலாம். தங்கம், நிலத்தில் முதலீடு செய்வதுபோல பிட்காயினிலும் முதலீடு செய்யலாம். இன்றைய மதிப்பில் ஒரு பிட்காயின் வாங்க பல ஐந்து லட்ச ரூபாய் வேண்டும். ஆனால் நீங்கள் வாங்கிவைத்துப் பாதுகாத்து வைக்கும் பிட்காயினை, ஹேக் கர்கள் பிக்பாக்கெட் அடித்து விடும் அபாயம் இருக்கிறது. கர்நாடகாவில் அரசுத் தளங்கள் முதல் பிட்காயின் வரை ஹேக் செய்த ஸ்ரீகிருஷ்ணாவிடம் உலக அளவில் பல பிட்காயின் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பிட்காயின்களை பறிகொடு த்திருக்கின்றன.

Advertisment

இதில், யாருக்கும் தெரியா மல் பணம் அனுப்பலாம். கறுப்புப் பணப் புழக்கத்துக்கு வசதி, டீமானிடைசேஷன் பிரச்சினை கிடையாது. பணவீக்கம் பாதிக் காது என்பதால் நிறையபேர் இதனை வாங்கிச்சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 2095 வகையிலான கிரிப்டோ கரன்சிகள் தற்சமயம் புழக்கத்தில் இருக்கின்றன. பிட்காயின், எத்திரியம், பினான்ஸ், டெதர், சோலானா, கார்டனோ போன்ற வை அவற்றில் பிரபலமானவை.

தேக்கு வளர்க்கிறோம் பாக்கு வளர்க்கிறோம், ஈமு கோழி வளர்க்கிறோம் என்று சொல்லும் நிதி நிறுவனங்கள், இப்போது பிட்காயினில் முதலீடு செய் கிறோம் என்று சொல்லியும் கிளம்பிவிட்டன. முதலீட்டாளர் களே கொஞ்சம் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.