Advertisment

உயிர் பயத்தில் ஆசிரியர்கள் -போதையில் தாக்கும் மாணவர்கள்

ss

மூகவிரோத சக்திகளின் பிடியில் மாணவர்கள் சிக்கி வருவது விழுப்புரம் மாவட்டத்தைப் பதட்டப்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு, கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவரத்தைப் பார்க்கலாம்.

Advertisment

இந்தப் பள்ளியில் ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே சேவியர் சந்திரகுமார் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

ss

அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலரும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தி வருவதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர், உடனடியாக அப்படிப் பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர், போலீசார் ஆகியோரை ஒருங்கிணைத்து, அவர்கள் ஒத்துழைப்புடன் போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதன்படி போதைக்கு அடிமையான சில மாணவர்களுக்கு, அ

மூகவிரோத சக்திகளின் பிடியில் மாணவர்கள் சிக்கி வருவது விழுப்புரம் மாவட்டத்தைப் பதட்டப்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு, கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவரத்தைப் பார்க்கலாம்.

Advertisment

இந்தப் பள்ளியில் ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே சேவியர் சந்திரகுமார் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

ss

அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலரும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தி வருவதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர், உடனடியாக அப்படிப் பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர், போலீசார் ஆகியோரை ஒருங்கிணைத்து, அவர்கள் ஒத்துழைப்புடன் போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதன்படி போதைக்கு அடிமையான சில மாணவர்களுக்கு, அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவர்களைப் போதைப் பழக்கத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்டார்.

Advertisment

இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப் படுவதாக நினைத்த கஞ்சா மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள், தலைமை ஆசிரியர் மீது கோபமடைந்தனர். அதனால் பள்ளி மாணவர்கள் சிலரை மூளைச் சலவை செய்து, அவர்களை தலைமை ஆசிரியருக்கு எதிராகக் கூர் சீவி விட்டனர். மேலும், கஞ்சா விற்பனையையும் ரகசியமாகச் செய்து வந்தனர்.

இந்த நிலையில், அண்மையில் பள்ளி அருகே ஒரு புதரில், மாணவன் ஒருவன் கஞ்சா போதையில் மயங்கிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர், அவனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

அன்று மதியம் மூன்று மணி அளவில், கஞ்சா போதையில் இருந்த இன்னொரு மாணவனை, சக மாணவர்கள் தலைமை யாசிரியரிடம் அழைத்துச் சென்று நிறுத்தினர். அந்த மாணவனுக்கும் அவர் அட்வைஸ் செய்தார். இன்னொரு மாணவன் தலைமை ஆசிரியரை நோக்கி ஓடிவந்தான். சற்று நேரத்திற்கு முன்தான், சக மாணவியை ஆபாசமாகத் திட்டியதற்காக அவனைத் தலைமை ஆசிரியர் கண்டித்திருந்தார். அவரை நோக்கி ஓடிவந்த அந்த மாணவன், திடீரென தலைமை ஆசிரியரை தன் கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடினான். இதனால் தலைமை ஆசிரியரின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையொட்டி, கண்டமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தத் தகவல் மற்ற பள்ளிகளுக்கும் பரவ, மாணவர் களிடமிருந்து ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும் என்று கூறி, மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தக் களமிறங்கி வருகின்றனர்.

ss

இது ஒருபக்கம் என்றால், கண்டமங்கலம் பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே, புதுச்சேரி மாநில எல்லை இருக்கிறது. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து இங்கே சப்ளை செய்யப்படுகிறது என்கிறார்கள் ஏரியாவாசிகள். இதேபோல், மாவட்டத்தில் இருக்கும் பல பள்ளிகளிலும் மாணவர்களிடையே போதைப் பழக்கம் பரவி வருவதாகக் கவலையுடன் சொல்கிறார்கள்.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய தாக்குதலுக்கு ஆளான தலைமை ஆசிரியர் சந்திரகுமார் "போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கப் பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். அதோடு அவர்களுக்கு மதுரை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் கவுன்சிலிங்கும் கொடுக்க வைத்தேன். அதோடு, பள்ளிப் பிள்ளைகள் பாடத்தில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளில் 135 பிள்ளைகளுக்கு அப்பாக்கள் இல்லை. 23 பிள்ளைகளுக்கு அம்மாக்கள் இல்லை. 10 பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இருவருமே இல்லை. இப்படி உள்ள பிள்ளை களுக்கு நல்ல வழிகாட்ட முடி யாததால்தான் அவர்கள் திசை மாறுகின்றனர். நிலைமையை மாற்ற முயன்றதால் சில பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது. எனினும், மாவட்டத்திலேயே சிறந்த ஒரு முன்மாதிரிப் பள்ளியாக எங்கள் பள்ளியை மாற்றுவோம்''’என்றார் நம்பிக்கையோடு.

ஊராட்சி மன்றத் தலைவி பிரியதர்ஷினி முருகன் நம்மிடம், "மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே கல்வியை மேம்படுத்துவதற்காக ஊராட்சி மன்றத்தின் மூலம் பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்து வருகிறோம். தலைமை ஆசிரியர் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு, நிறைய செய்துகொண்டு இருக்கிறார். ஒருசில மாணவர்களால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கப்படும்''’என்றார் அக்கறையாய்.

போதை, வன்முறைக் கலாச்சாரம் உள் ளிட்டவற்றில் சிக்கும் மாணவர்களை நல்வழிப் படுத்தவும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்தவும், அரசும் தன்னார்வ அமைப்புகளும் கைகோத்துச் செயல்படவேண்டும். இல்லையெனில் சீரழியும் மாணவர்கள், சமூகத்துக்கு எதிரான சக்திகளாக மாறுவார்கள்.

nkn031222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe