Advertisment

குழந்தைகளை எழுத்தாளராக்கிய ஆசிரியர்! திருவண்ணாமலை அரசுப் பள்ளி ஆச்சரியம்!

sc

திருவண்ணாமலை மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 196 மாணவ- மாணவி கள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு குழந்தைகளால் சொல் லப்பட்ட கதைகள், “"திராட்சை தோட்டம்'’என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நூலை தொகுத்து புத்தகமாக வெளிவரச்செய்த அப்பள்ளி ஆசிரியர் பூர்ணிமா பார்த்தசாரதி நம்மிடம், "நான் வகுப்பாசிரியராக

திருவண்ணாமலை மாவட்டம், கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 196 மாணவ- மாணவி கள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு குழந்தைகளால் சொல் லப்பட்ட கதைகள், “"திராட்சை தோட்டம்'’என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நூலை தொகுத்து புத்தகமாக வெளிவரச்செய்த அப்பள்ளி ஆசிரியர் பூர்ணிமா பார்த்தசாரதி நம்மிடம், "நான் வகுப்பாசிரியராக உள்ள மூன்றாம் வகுப்பில் 22 மாணவ- மாண விகள் படித்துவருகிறார்கள். பள்ளியில் அறம் செய்வோம் அமைப்பு உருவாக்கித் தந்த நூல கம் உள்ளது, அதேபோல் அரசு வழங்கும் கதைப் புத்தகங்கள் உள்ளன. என்னுடைய மூன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் நூலகத்திலிருந்து தினமும்ஏதா வது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கச்சொல்வேன். அவர்கள் எழுத்துக்கூட்டி படிக்கச் சிரமப்படுவதால், அதிலுள்ள கதைகளை வாசிப்பேன். அப் போது குழந்தைகள் அபிநயாவும், காவியாபிரியாவும் நாங்களும் கதை எழுதலாமா டீச்சர் என என்னிடம் வந்து கேட்டது ஆச் சர்யமாக இருந்தது, நானும் சரியென்றென். அவர்கள் தினமும் என்னிடம் விதவிதமாகக் கதை சொல்வார்கள். இதனைப் பார்த்து மற்ற குழந்தைகளும் கதை சொன்னார்கள். அவர் கள் சொன்ன கதைகளில் 11 குழந் தைகளின் கதைகளை மட்டும் தொகுத்து "திராட்சை தோட் டம்' என்கிற தலைப்பில் புத்தக மாக்கினேன்.

Advertisment

scc

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றியபின் கதை சொன்ன குழந்தைகளுக்கு புத்தகத்தை வழங்கினோம்.

ஒவ்வொரு கதையின் கீழும் யார் அந்தக் கதையைச் சொன்னது, அவர்கள் பெயர், புகைப்படம் போன்றவற்றையும் அச்சிட்டிருந்தோம். அதைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. என்னிடம் மூன்றாம் வகுப்பு படித்து இப்போது 7, 8-ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் வந்து, எங்களையெல்லாம் இப்படி ஊக்குவிக்கலையே டீச்சர் என சண்டைபோட்டார்கள். அப்போது எனக்கு இவ்வளவு நாளாக இதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என சங்கட மாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. அந்த திறமையை கண்டறிந்து ஊக்கு விக்க வேண்டியது ஆசிரியர் களின் கடமை. இனி குழந் தைகளைக் கதை சொல்ல வைத்தும், ஓவியங்கள் வரைய வைத்தும் சிறந்ததைத் தொகுத்து புத்தகமாக்கலாம் என முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

அரசுப் பள்ளியில் படித் தால் அவர்களை யாரும் ஊக்கு விக்கமாட்டார்கள் என்கிற எண்ணத்தை உடைத்து தமிழ் நாட்டில் முதல்முறையாக பள்ளிக் குழந்தைகள் சொன்ன கதைகளை புத்தகமாக்கிய ஆசிரியரை, பலரும் பாராட்டி வருகிறார்கள்.

nkn150223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe