சிரியர் இடமாறுதல் கலந்தாய்வு என்பது பணம் பொழியும் காமதேனு. நெல்லையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வையணனோ, ""கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பே, காலிப்பணியிடங்களின் பட்டியலை தயாரித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் எனும் பெயரில் உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. கண் துடைப்புக்காகவே ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. திருச்செந் தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வரும் நான், தினசரி சுமார் 52 கி.மீ. தொலைவிலிருந்து வர வேண்டியுள்ளது. ஐந்து வருடங்களாக இதே பள்ளி யில்தான் பணியாற்றி வருகின்றேன். இந்த வருட கலந்தாய்வில் நெல்லை பேட்டையிலும், மருதகுளத் திலும் இரு பணியிடங்கள் காலியாக இருக்க, அரசாணை விதிகளின் படி எனக்கு வர வேண்டிய இடமாறுதலை பணத்தை வாங்கிக் கொண்டு இன்னொருவருக்குக் கொடுத்துள்ளனர். இதனை எதிர்த்துதான் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றேன்'' என்கிறார் அவர்.

corruption

கடந்த 2017-2018-ம் ஆண்டுக்கான கலந்தாய் வில் இடமாறுதல் பெற்றவர்களில் 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 100 தலைமையாசிரியர்கள், 750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 2950. இந்த வருடமும் அதே எண்ணிக்கையில் இடமாறுதல் நடந்துள்ளது என்கின்றன புள்ளி விபரங்கள். ஒவ்வொரு இடமாறுதலுக்கும் தலா ரூ.6.50 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வாங்குகின்றனர் என்கின்றது சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்று. அப்படியெனில் ஆண்டுக்கு ரூ.100 கோடியை தாண்டுகின்றது ஊழல்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென் றான் அரசுப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் ராமசுப்பிரமணியனும், அதே தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எப்ரேமும் பேசிக் கொள்ளும் அந்த ஆடியோவிலிருந்து, ராமசுப்பிரமணியன்: அண்ணே நான் ராம சுப்பிரமணியன் பேசுகிறேன். அந்த கெமிஸ்ட்ரிக்கு அனுப்பி விடுங்கள், அடிஷனல் போஸ்டிங்கில் திங்கட்கிழமை ஆர்டர் தாரேன் சொல்லுறாங்க.

Advertisment

எதிர்முனை: அப்படியா, எவ்வளவாம்?

ரா.சு.: அதற்கு 7 ரூபாய் சொல்லுறாங்க.

எதிர்முனை: ஏ... அப்பா. நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.

Advertisment

ரா.சு.: அவங்க கிட்ட பேசுங்க. இப்ப நைட்ல அனுப்புங்க. காலைலையே அடிஷனலா இதை பண்ணி தாரேன்னு சொல்லியிருக்காங்க. திங்கட் கிழமை கிடைக்கும்.

corruption

எதிர்முனை: பேசுறேன். பைசா விஷயம். அவர் என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்.

ரா.சு.: அப்படினா, காலைலயே எனக்கு அனுப்பணும். நான் சொன்னேன்ல சென்னைக்குப் போவாங்கன்னு. அவங்க இருந்து ரெடி பண்ணி பார்த்து வாங்கிட்டுத்தான் வருவாங்க.

எதிர்முனை: 7 சொல்லுறாங்க அண்ணே. திருநெல்வேலி பி.டி.க்கு 7, 7.30 வரை போயிருக்கு.

எதிர்முனை: அப்படியா... ஏ அப்பா...

ரா.சு.: விருதுநகருக்கு 6 ரூபாய். தஞ்சாவூரில் இருந்து விருதுநகருக்கு 6 ரூபாய்.

corruptionஎதிர்முனை: நான் நாளைக்கு காலைல ஸ்கூல்ல போய் அந்தம்மாட்ட பேசிட்டு'' என கூறும்போதே இடைமறிக்கும் ராமசுப்பிரமணியன், "மறுபடியும் மறுபடியும் போய் அவர்களிடம் கேட்க முடியாது' என கூறுகிறார். "நாம் செல்வது ஒரு ஐ.ஏ.எஸ். மூலமாக. சொன்னா கரெக்டா இருக்கும். நடுவுல யாரும் உருவ முடியாது என்கிறார். இது ஆபீஸ் மூலமாக ஐ.ஏ.எஸ். மூலமாக ஒரு ஆள் வாங்கி கொடுக்கிறார். அவங்க சொல்லும் போது தலைமைச் செயலகத்தில் அவங்க போட்டுதான் ஆவார்கள். வேறு வழியில்லை.

எதிர்முனை: நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போன உடனே அவங்ககிட்ட பேசு றேன். அந்தம்மா நம்பி நான் உங்ககிட்ட வாக்கு கொடுத் துட்டு அசிங்கமாகிவிடக் கூடாதே...' என முடிகின்றது அந்த ஆடியோ..!

திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யின் தலைமையாசிரியர் எப்ரேம் நம்மிடம், ""பள்ளிக் கல்வித்துறை ஊழலில் திளைத்துவிட்டது. விஜி லென்ஸ் விசாரணை வேண் டும் என நான் போராடாத நாட்களே இல்லை. இந்த நிலையில் மாவட்ட மீட்டிங்கின் பொழுது என்னை சந்தித்த எப்போதும் வென்றான் தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன், "சார்.! எதுனா டிரான்ஸ்பர் இருந்தால் சொல்லுங் கள் போட்டுவிடுவோம்' என்றார். நமக்கும் இதுதான் தருணம் என, இல்லாத வேதியியல் ஆசிரியைக்கு இடமாறுதல் தேவை என அவரிடம் போட்டு வைத்தேன். அவரோ, தஞ்சாவூரிலிருந்து விருதுநகர் வீரசோழத்திற்கு, செங்கோட்டையி லிருந்து மார்த்தாண்டத்திற்கு பணியிடங்கள் போட்டுக் கொடுத்திருக்கேன். நெல்லையில் இவ்வளவு ரேட் என்றெல்லாம் பேச்சுவாக்கில் ஒப்புக்கொண்டார். அந்த ஆடியோதான் நீங்க கேட்குறது'' என்றார் அவர். ""சார்.! அது நான் இல்லை'' என்றார் ஆடியோக்குரலுக்கு சொந்தக்காரரான ராமசுப்பிரமணியன்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது 3000த்திற்கும் அதிகமான இடமாறுதல் போடப்பட்டதாக அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்தவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவரேதான் இப்பொழுதும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர். அதே பிரச்சனை..? விசாரித்து நடவடிக்கை எடுக்குமா அரசு..?

- நாகேந்திரன்