கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வந்த ஆசிரியர்கள் போராட்டம் தமிழக அளவில் கவனம்பெற்ற நிலையில் அவர்கள் கோரிக்கை களுக்கு வரும் ஜனவரிக்குள் தீர்வு காணப்படும் என் கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை யில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இங்கு இடைநிலை ஆசிரியர் கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் எனும் கோரிக்கை வைத்தும், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கைவைத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் பணி வழங்கசொல்லியும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த போராட்டத்தில் மூன்று தரப் பினர் தனித்தனியாக போராட்டத்தைக் கையிலெடுத்தனர். ஒருபுறம் "சமவேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கையுடனும், மற்றொருபுறம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரப்படுத்தக் கோரியும், மூன்றாவ தாக, தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர் களுக்கு தற
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வந்த ஆசிரியர்கள் போராட்டம் தமிழக அளவில் கவனம்பெற்ற நிலையில் அவர்கள் கோரிக்கை களுக்கு வரும் ஜனவரிக்குள் தீர்வு காணப்படும் என் கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை யில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இங்கு இடைநிலை ஆசிரியர் கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் எனும் கோரிக்கை வைத்தும், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கைவைத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் பணி வழங்கசொல்லியும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த போராட்டத்தில் மூன்று தரப் பினர் தனித்தனியாக போராட்டத்தைக் கையிலெடுத்தனர். ஒருபுறம் "சமவேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கையுடனும், மற்றொருபுறம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரப்படுத்தக் கோரியும், மூன்றாவ தாக, தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர் களுக்கு தற்காலிகப் பணியாவது வழங்கச் சொல்லியும், கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமானதால் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றனர்.
இதையடுத்து அரசு சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. நான்கு கட்டமாக பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மூன்று மாதத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் சரிசெய்து தரப்படும். அதற்கான அனைத் துப் பணிகளும் முக்கால்வாசி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணியும் மூன்று மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனும் தீர்வை இடைநிலை ஆசிரி யர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கோரிக் கைகள் பரிசீலனை செய்யப்படுவதற்கா நாங்கள் உண்ணவிரதமிருந்து சாகிறோம்? எங்களுக்கு இறுதி முடிவு வேண்டும் என மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். பகுதிநேர ஆசிரியர்களிடம், சம்பள உயர்வு மற்றும் இன்ஸுரன்ஸ் செய்து கொடுக்கப்படும் எனவும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 57 வயது வரையிலும் பணி வழங்கலாம் என அரசு சலுகைகள் தர முன்வர, பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் டெட் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில் போலீசார் அவர்களைக் கைதுசெய்து திருவல்லிகேணி, ராயபுரம் பகுதி மண்டபங்களுக்குக் கொண்டுசென்றனர். அங்கு இயக்குநர் அறிவொளி, அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட் டத்தை வாபஸ் பெற்றனர். பேச்சுவார்த்தையில் கமிட்டி அமைத்து, அதில் மொத்தமாக 22 ஆசிரி யர்கள் சங்கங்களை அழைத்து, இரண்டு சிட்டிங் அமைத்து, அதன்மூலமாக ஜனவரிக்குள் உங்க ளுக்கான தீர்வு கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 56 லட்சம். இதில் தொடக்கப்பள்ளிக்கு 1-30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையிலும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு 1-40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையிலும் நியமனம் இருக்கும் பட்சத்தில், தொடக்கப்பள்ளிக்கு 1,17,000 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு 1,19,000, பணியிடங்களுக்கும் சேர்த்து தற்போது 2,15,000 ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் பகுதிநேர ஆசிரியர் கள் 12,000 பேர், டெட் தேர்ச்சி பெற்றவர்கள் 60,000 பேரில் யாரை நியமனம் செய்வது என் பதில் எழுந்த சிக்கலால் ஆசிரியர் சங்கத்தையே வரவழைத்து, அவர்களின் மூலமாகவே கமிட்டி அமைத்து அதனடிப்படையில் நியமனம்செய்ய முடிவெடுத்துள் ளார்களாம்.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், சமவேலைக்கு சம ஊதியம் என்பதன் அடிப்படை யில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்தால், இருக்கும் நிதி நெருக்கடிக்கிடையில் 20,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் இவர்களுக்கு ஊதிய உயர்வு எப்படி கொடுப்பது என்பதாகும். இதனால் எழுந்த சிக்கலே இந்த போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. டெட் தேர்வு குறித்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் சிலர் 149 ஜி.ஓ.வை ரத்து செய்யக்கூடாது எனவும் பேசுகிறார் கள். இந்த சூழ்நிலையில் சமவேலைக்கு சம ஊதியம் என்பது எல்லாத்துறையிலும் இருக்கின்ற பிரச்சனை. 1.6.2001-க்கு முன்பும், பின்பும் பணிக்கு வந்த முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது.
மற்ற துறைகளிலும் இதுபோன்ற பிரச்சனை எழுந்தால் அரசுக்கு சிக்கலையே உண்டாக்கும். ஆகையால் தான் இதற்குத் தீர்வுகாண அரசு மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத் துள்ளது. இதன்மூலமாக ஆசிரியர் கள் சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வளிக்கவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷிடம் கேட்ட போது, "குழுவின் பரிந்துரைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம். நிதி நிலைமைக்கு ஏற்றாற்போல ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஆர்வமாக உள்ளார். அவரின் ஆலோ சனைப்படிதான் 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தனது பிறந்தநாளில்கூட ஆசிரியர்களுக்கான நலத் திட் டங்களை அறிவித்தவர் முதல்வர். தற்போதைய பிரச்சனைக்கும் நல்ல தீர்வு சொல்வார்'' என்றார்.