சென்னையில் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று டீ, காபி கடைகளுக்கான சங்கம் திடீரென டீ, காபி விலையை உயர்த்துவதாக அறிவித்தனர். டீ ரூ.12-லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15-லிருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்குக் காபி போன்றவை ரூ.15-லிருந்து ரூ.20 ஆகவும், பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும் விலையுயர்ந்துள்ளது. ஆனால் கிளாஸ் பால் ரூ.15, லெமன் டீ ரூ.15 என்றும் பழைய விலையிலேயே விற்கப்படுகிறது.

Advertisment

இதேபோல ஒரு கப் டீ, பால் பார்சல் ரூ.45 ஆகவும், கப் காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்குக் காபி பார்சல் ரூ.60 ஆகவும், பூஸ்ட், ஹார்லிக்ஸ் பார்சல் ரூ.70 என்றும் விலையுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர். 

பால், டீ, காபி தூள் விலை உயர்வுக்கு என்ன காரணமாம்? டீ, காபி கடைகளின் சங்கத்தின் தரப்பில், "போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, சமையல் சிலிண்டர் உயர்வு, கட்டட வாடகை, தொழிலாளிக்களுக்கான கூலி உயர்வு போன்ற காரணங்களாலே இந்த விலையுயர்வு எனச் சொல்லப்படுகிறது. மிக முக்கியமாக டீத்தூள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர், ஏ.வி.டி, மற்றும் பேரி நிறுவனங்களின் டீத்தூள் ரூ.320-க்கு விற்கப்பட்டது 340 முதல் 540 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 

கொழுப்பு செறிவூட்டப்பட்ட பால்தான் இவர்களால் வாங்கப்படுகிறது. ஆவின் பால் வாங்குவதில்லை. ஆவின் பால் 24 மணிநேரம் மட்டுமே தாங்கும். அதிலும் பால் கெட்டித்தன்மை இருக்காது. 100 சதவீதத்திற்கு 90 சதவீதம் பசும்பாலாகவே இருக்கும். ஆனால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த நந்தினி, ஜெர்சி, திருமலா போன்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் பால் கெட்டித்தன்மையுடனும் 48 மணி நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும். அதற்குக் காரணம் 60 சதவீதம் பசும்பால், மீதமுள்ள 40 சதவீதம் எருமை மாட்டுப் பால் என்பதுதான்.

Advertisment

tea1

நந்தினி பால் ஒரு லிட்டர் 65 ரூபாய், ஜெர்சி, திருமலா 72 ரூபாய், ஆரோக்கியா ரூ.75, ஆவின் 60 ரூபாய். 60 ரூபாய்க்கு இருந்த பாலின் விலை தற்போது 75 வரை உயர்ந்துள்ளது. இதுபோக சென்னை மாநகராட்சியின் கீழுள்ள கடைகளுக்கு வருடத்திற்கு 2,000 வருமான வரியாகக் கட்டிவரு      கிறோம். இதுபோக புட் சேல் 2000, மாதம்தோறும் குப்பை 1 கிலோவிற்கு 500 அபராதம் கட்டுகிறோம். இதுபோக தவிர்க்கமுடி யாத, சொல்ல முடியாத கார ணங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் கணக்கு போட்டால், மூன்று ரூபாய் விலையுயர்வு மிகக் குறைவான ஒன்று''’ என்கிறார்கள்.

அதேவேளையில் டீ, காபி விரும்பிகள் 10, 12 ரூபாய் இருந்ததை தற்போது 15 ரூபாய் என உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் சக்திதாஸ் கூறுகையில், "ஒரு நாளைக்கு வண்டியை எடுத்தால் காலையில் தொடங்கி இரவுவரை குறைந்தபட்சமாக  10 டீ குடித்துவிடுவேன். ஆனால் தற்போது விலையுயர்வால் டீ குடிக்க தயக்கம் வருகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வாடகை, வண்டி ட்யூ, குழந்தைகள் படிப்புக் கட்டணம் இவற்றால் சில நாட்களில் உணவுக்குப் பதிலாக டீ குடித்தே சமாளித்து விடுவேன். கூடுதலாக ஒரு ரூபாய் ஏற்றினால்கூட பரவாயில்லை இப்படி 5 ரூபாய் ஏற்றியது அநியாயம்''” என்கிறார். 

Advertisment

கொத்தனார் ராஜாவோ, “"வண்டிக்கு பெட்ரோல் மாதிரி, கட்டுமான வேலையில் வேலைபார்ப்ப வர்களுக்கு நடுநடுவுல போடுற பெட்ரோல்தான் டீ. வேலைக்கு நடுவில் இரண்டு, மூன்று முறை டீ குடித்தாக வேண்டும். சில இடங்களில் அவர்களே வாங்கித் தந்துவிடுவார்கள். சில இடங்களில் எங்கள் தலையில்தான் அந்தச் செலவு விடியும்''’என்கிறார்.

tea2

தெருவில் வசிக்கும் மக்கள், தினக்கூலிக்கு செல்பவர், வயதானவர்கள் என ஐ.டி. நிறுவனம் தொடங்கி பல தனியார் நிறுவனங்கள் வேலைக்கிடையே உற்சாகத்துக்கு டீ, காபியை நம்பியே உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த விலையுயர்வு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக பேசிய சென்னை பெருநகர டீ, காபி உரிமையாளர் சங்கச் செயலாளர் சந்திரன், "எங்களுக்கும் மக்களின் வலி தெரியும். ஆகையாலே, சென்னையில் ஒருசில டீக்கடைகளில்தான் இந்த விலையுயர்வை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். ஆனால் சில கடைக்காரர்கள் விலையுயர்வை உடனடியாக அமல்படுத்தப்போவது இல்லை. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் படிப்படியாகவே விலையை உயர்த்துவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை இழக்காமலிருக்க, மற்ற பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் இழப்பை ஈடுசெய்ய முடிவு செய்துள்ளனர்''’என்றார்.

விலைவாசி உயர்வால டீக்கிளாஸ்கூட உதட்டைப் பொசுக்க ஆரம்பிச்சுடுச்சு!

-சே
படங்கள்: ஸ்டாலின்