Advertisment

வரிவிலக்கு, அரைநாள் விடுப்பு! பட புரமோஷனில் பா.ஜ.க. மாநில அரசுகள்!

ff

மார்ச் 11-ஆம் தேதி விவேக் அக்னிஹோத்ரி தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான "தி காஷ்மீரி பைல்' படம்தான் இன்றைய இந்தியாவின் ஹாட் டாபிக். பல்லவி ஜோஷி. அனுபம் கெர், அமான் இக்பால் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித் திருக்கும் இப்படம் ஒருபக்கம் வசூலைக் குவிக்க, மறுபக்கம் சர்ச்சைகளில் முக்குளிக்கிறது.

Advertisment

காஷ்மீர் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமல்லவா,… படம் பரபரப்பாக பேசப்படுவது நியாயம்தானே என கேட்கலாம். இந்தப் படத்தின் மையக்கரு காஷ்மீர் பிரச்சனையில், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் துரத்தப்பட்ட பிரச்சனையையே குறிப்பாகப் பேசுகிறது.

Advertisment

gg

சரி, காஷ்மீர் பண்டிட்டு கள் துரத்தப்பட்டதை ஒருவர் படமாக எடுக்கக்கூடாதா,… எடுக்கலாம். ஆனால் அப்படி எடுக்கப்பட்

மார்ச் 11-ஆம் தேதி விவேக் அக்னிஹோத்ரி தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான "தி காஷ்மீரி பைல்' படம்தான் இன்றைய இந்தியாவின் ஹாட் டாபிக். பல்லவி ஜோஷி. அனுபம் கெர், அமான் இக்பால் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித் திருக்கும் இப்படம் ஒருபக்கம் வசூலைக் குவிக்க, மறுபக்கம் சர்ச்சைகளில் முக்குளிக்கிறது.

Advertisment

காஷ்மீர் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமல்லவா,… படம் பரபரப்பாக பேசப்படுவது நியாயம்தானே என கேட்கலாம். இந்தப் படத்தின் மையக்கரு காஷ்மீர் பிரச்சனையில், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் துரத்தப்பட்ட பிரச்சனையையே குறிப்பாகப் பேசுகிறது.

Advertisment

gg

சரி, காஷ்மீர் பண்டிட்டு கள் துரத்தப்பட்டதை ஒருவர் படமாக எடுக்கக்கூடாதா,… எடுக்கலாம். ஆனால் அப்படி எடுக்கப்பட்ட படத்துக்கு இந்தியப் பிரதமர் மோடியே, “"நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் இத்தகைய படங்கள் நிறைய வரவேண்டும். இந்தப் படத்துக்கு எதிராக சதி நடக்கிறது'' என்பதும், பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் இந்தப் படத்தை அரசு ஊழியர்கள் பார்க்க அரைநாள் விடுப்புத் தருவதும்தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "தி காஷ்மீரி பைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சிறப்பு அனுமதி தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். அரசு ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டு மறுநாள் படம் பார்த்த டிக்கெட்டை அளித்தால் போதும்''’என்றிருக்கிறார்.

தவிரவும், இந்தப் படத்துக்கு உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, திரிபுரா போன்ற பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் வரிவிலக்கு அளித் திருக்கின்றன. கர்நாடக சட்டசபையில் இந்தப் படத்தால் பெரும் விவாதமே எழுந்திருக்கிறது. மார்ச் 15-ஆம் தேதி தி காஷ்மீரி பைல்ஸ் படத்தை சட்டசபையில் திரையிடப் போவதாக அறிவிக்க, காங்கிரஸ் இந்த அறிவிப்பைத் திரும்பப்பெறவேண்டுமெனக் கூறி சட்டசபைக்கு வெளியே போராட்டமே நடத்தியது.

பா.ஜ.க. தரப்பில், "இந்தப் படத்தை உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்' என்றபோதும், காங்கிரஸ் தரப்பிலிருந்து பட்ஜெட் விவாதக் கூட்டத்தைவிட இந்தப் படத்தைப் பார்ப்பது முக்கியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், "குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசும் பர்ஜானியா, வாரணாசி விதவைகளின் உண்மை நிலவரத்தைப் பேசிய வாட்டர் படத்தை சட்டசபையில் திரையிடுவீர் களா?'' என்றும் காங்கிரஸார் கேள்வியெழுப்பினர்.

ff

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜி வாலா, “"அப்போது வி.பி.சிங் அரசுதானே நடந்துகொண்டி ருந்தது. உங்கள் வசமிருந்த 85 எம்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? உங்களது தாய்க்கழகம் 1925 முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் காந்தியடிகளுக்கும் எதிராகத்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாள் முதலே அவ்வமைப்பு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையிலெடுத்துக்கொண்டது''’என சூடாக விமர்சித்திருக்கிறார். காஷ்மீரில் பண்டிட்டுகள் அடைந்த இக்கட்டை யாரும் மறுக்கவில்லை…. மாறாக, அதே மண்ணில் எத்தனை காஷ்மீரிகள் மரணமடைந்திருக்கின்றனர். எத்தனை அரைவிதவைகள் உருவாக்கப்பட்டனர், பல்லாண்டு ராணுவக் கெடுபிடி, சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பதையும் கணக்கில்கொள்ளவேண்டும். 2020-ல் விது விநோத் சோப்ரா இயக்கத்தில் "ஷிகாரா' என்றொரு படம் பண்டிட்டுகளின் பிரச்சினையைப் பற்றி வந்தது. அதனை பா.ஜ.க. எதிர்த்தது. காரணம், பிரச்சினையின் இரு தரப்பையும் பேசியதுதான்.

ஐ.எம்.டி.பி. என்னும் இன்டர்நெட் மூவி டேட்டா பேஸ் வலைத்தளம் சில நாட்களாக தி காஷ்மீரி பைல்ஸ் படத்துக்கு தாறுமாறாக பார்வையாளர்கள் தளத்துக்கு வந்து மதிப்பெண் அளித்ததையொட்டி, தனது ரேட்டிங் நடைமுறையை தற்காலிகமாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

சர்ச்சை ஒருபுறமிருக்க… ஊடகம், அர சியல், திரைத்துறை மூன்றும் கைகோர்த்தால் ஒரு புறம் வசூலுக்கு வசூல், இன்னொரு பக்கம் மெகா பிரச்சாரம் என்ற இந்த யுக்தியை கவலையுடன் நோக்குகின்றனர் ஜனநாயக ஆர்வலர்கள்.

nkn230322
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe