துரையில் ஜூலை 23-ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் முப்பெரும் விழாவில், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், "வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வரிஏய்ப்பு செய்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனு மதிக்கக்கூடாது. தமிழ் நாட்டில் 3 லட்சம் வணி கர்கள் வரி செலுத்துவ தில்லை. இதில் 90 சத விகிதத்தினர் வட நாட்டவர்கள். அரசுத் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வடமாநில வணிகர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி நம் தமிழ்நாடு வணிகர்கள் வளர்ச்சி அடையவேண்டும். இதற்கு முன் எப்படியோ, இந்த அரசு தமிழருக்கான அரசு. அவர்களுக்கு என்றும் துணை நிற்கும்''’என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

ff

தமிழ்நாடு அரசின் வருவாயில் 45 சதவீதம் வருவாய் வணிக வரி வழியாகக் கிடைக்கிறது. யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டார். வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்றெல்லாம் தமிழக அமைச்சரே தடாலடியாக, வடமாநில வணிகர்களின் சுரண்டல்களை, வரி ஏய்ப்பின் மோசடியை தடுத்து நிறுத்த வேண்டும், உடன்பட மறுப்பவர்களை அப்புறப்படுத்தவேண்டும்'' என்றெல்லாம் பேசியிருப்பத பரபரப்பாகியுள்ளது.

”மதுரை மார்வாடிகள் வெல்ஃபேர் அசோஸியேசன்” சங்கத் தலைவர் சி.ஆர்.பட்டேலைச் சந்தித்து இதுகுறித்து கேட்டோம். "அமைச்சரின் இந்த கருத்து தவறானது. குஜராத் ஹார்பரில் வரி கட்டித்தான் சரக்கு இங்கே வருகிறது. இங்கு மக்களிடம் விற்பனை செய்வதற்கும் ஒழுங்காக வரி செலுத்துகிறோம். சந்தேகமிருந்தால் தமிழக வணிக வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துகொள்ளலாம். நாங்கள் ஒழுங்காக வரி கட்டினாலும் தமிழக வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு மாதம் எவ்வளவு கப்பம் கட்டுகிறோம் தெரியுமா உங்களுக்கு?

ஒன்றிய அரசின் வருமானவரித்துறை என்றாவது எங்கள் நிறுவனங்களில் ஏதாவது ரெய்டு செய்திருக்கிறார் களா? இல்லை. ஏனென்றால் நாங்கள் ஒழுங்கான முறையில் ஜி.எஸ்.டி. கட்டுகிறோம். தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமென்றாலும் தொழில்செய்யலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. அமைச்சர், வடநாட்டு வணிகர் களை அப்புறப்படுத்தவேண்டும் என்று சொல் வது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சருக்கும் அமித்ஷாவுக்கும் மோடிக் கும் மெயிலில் புகார் அனுப்பியிருக்கிறோம். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட் டோம்''’என்று பதிலுக்கு ஆவேசப்பட்டார்.

Advertisment

dd

அமைச்சரின் பேச்சு குறித்தும் வடநாட்ட வர்களின் வரி ஏய்ப்பு குறித்தும் தமிழ்நாடு வணிக வரி இணை ஆணையாளர் இந்திரா விடம் கேட்டோம். "நானும் அமைச்சரின் பேச்சைக் கேட்டேன். நான் வியாபாரிகளை பிரித்துப் பார்ப்பதில்லை. யார் வரி கட்டவில்லை என்றாலும் தண்டனை ஒன்றுதான். மற்றபடி அரசியலுக்குள் போக விரும்பவில்லை''’என்று முடித்துக்கொண்டார்.

மதுரை சிம்மக்கல் வியாபாரிகள் சங்கத் தலைவரான வி.டி.ராமையா, "தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சிவகாசி என்று முக்கிய நகரங்களின் வணிகத்தை கைப்பற்றிய வட இந்தியர்கள் படிப்படியாக குக்கிராமங்களுக்கும் இடம் பெயரத் தொடங்கியிருக்கிறார்கள். நகை அடகுக் கடையில் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல், செல்போன், கட்டிடப் பொருட் கள், இருசக்கர, நான்கு சக்கர ஸ்பேர் பார்ட்ஸ் கடை, துணிக்கடை மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம், பலசரக்கு கடை, பேன்ஸி வியாபாரம் என்று ரவுண்டு கட்டி தமிழகமெங்கும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

இதில் போலி பிராண்டடு பொருட்களே அதிகம். இவை எதற்குமே வணிக வரி கட்டுவதில்லை. குஜராத், மும்பை போன்ற துறைமுகங்களில் இவர்களுக்கு எந்தவித எக்ஸைஸ் டூட்டியும் கட்டா மல் ஒன்றிய அரசின் முழு ஆதரவோடு பொருட் கள் இங்கு வந்துசேருகின்றன. அனைத்துமே ”டபுள் பில்” மோசடிக் கணக்கில்தான் எடுத்துவரப்படுகிறது. ஒரு கோடி பொருட்களுக்கு 10 லட்சம்தான் பில். இங்கு சில்லரை விற்பனையில் யாருக்கும் பில் போட்டு விற்பதில்லை. இதை யாரும் ddகண்டுகொள்வதும் இல்லை. ஒன்றிய அரசின் வருமானவரித்துறை அதிகாரிகள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் என்பதால் இவர்களிடம் கெடுபிடி காட்டுவது இல்லை. ஆனால் தமிழக வியாபாரிகளிடம் மட்டும் அதிக கெடுபிடி செய்து ஒழுங்காக வரிகட்ட வைக்கிறார்கள்''’என்ற குற்றச்சாட்டை வைக்கின்றார்.

குஜராத், இராஜஸ்தானின் பெருமுதலாளிகள் தங்களது கருப்புப் பணத்தில் இங்கிருக்கும் மார்வாடிகளுக்கு சரக்குகளைக் கொடுத்து தொழில் செய்யவைத்து தமிழகத்தின் தொழில் வணிகத்தை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டனர் என்றே சொல்லலாம். தொழிலில் மட்டுமின்றி தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பணியாளர்களிலும் வடவர் ஆதிக்கம் பெருகிவிட்டது.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராசன் தமிழகத்தில் கடந்த காலங்களில் எதன் அடிப்படையில் தமிழரல்லாத வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டது என்பது குறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார், வெளிமாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக எத்தகைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டது என்பதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறி, வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் உறுதியளித்துள்ளார்.

Advertisment