Advertisment

டூரிங் டாக்கீஸ்! சண்முகப்பாண்டியனை இயக்கும் பொன்ராம்

ss

சண்முகப்பாண்டியனை இயக்கும் பொன்ராம்!

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "ரஜினி முருகன்' என வெற்றிப் படங்களை கொடுத்த பொன்ராம், "சீமராஜா', "எம்.ஜி.ஆர் மகன்', "டி.எஸ்.பி.' என அடுத்தடுத்து தோல்வி படங்களையும் கொடுத்துள் ளார். இதனால் அடுத்த பட வாய்ப்பில்லாமல் தவித்த பொன்ராம், மீண்டும் விஜய்சேதுபதிக்கு கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருந்தார். ஆனால் விஜய்சேதிபதியால் கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல். இதனிடையே சூரியையும் சந்தித்து கதை கூற, அவரும் அடுத்தடுத்து படங்கள் கமிட்செய்து வைத்திருந்த தால் அதுவும் கைகொடுக்கவில்லை. அதனால் வேறொரு புது ஹீரோவை தேடி வந்த பொன் ராம் விஜய காந்த்தின் மகன் சண்முகப்பாண்டியனை கமிட் செய்துள்ளார் பொன்ராம். சண்முகப்பாண்டியன் தற்போது "படைத்தலைவன்' படத்தில் நடித்து வருவதால், அதை முடித்துவிட்ட

சண்முகப்பாண்டியனை இயக்கும் பொன்ராம்!

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "ரஜினி முருகன்' என வெற்றிப் படங்களை கொடுத்த பொன்ராம், "சீமராஜா', "எம்.ஜி.ஆர் மகன்', "டி.எஸ்.பி.' என அடுத்தடுத்து தோல்வி படங்களையும் கொடுத்துள் ளார். இதனால் அடுத்த பட வாய்ப்பில்லாமல் தவித்த பொன்ராம், மீண்டும் விஜய்சேதுபதிக்கு கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருந்தார். ஆனால் விஜய்சேதிபதியால் கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல். இதனிடையே சூரியையும் சந்தித்து கதை கூற, அவரும் அடுத்தடுத்து படங்கள் கமிட்செய்து வைத்திருந்த தால் அதுவும் கைகொடுக்கவில்லை. அதனால் வேறொரு புது ஹீரோவை தேடி வந்த பொன் ராம் விஜய காந்த்தின் மகன் சண்முகப்பாண்டியனை கமிட் செய்துள்ளார் பொன்ராம். சண்முகப்பாண்டியன் தற்போது "படைத்தலைவன்' படத்தில் நடித்து வருவதால், அதை முடித்துவிட்டு பொன்ராம் படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment

பாலிவுட்டில் பா.ரஞ்சித்!

"தங்கலான்' பட இறுதிப் பணிகளில் பிஸியாகவுள்ளார் பா.ரஞ்சித். இதை முடித்துவிட்டு "அட்டகத்தி' தினேஷை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குகிறார். இந்த படம் கேங்க்ஸ்டர் ஜானரில் உருவாகுவதால், தாடி வளர்த்து ஒரு புது தோற்றத்தில் தயாராகியுள்ளார் "அட்டகத்தி' தினேஷ். மொத்தம் 45 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி ஒரே மூச்சில் அதை முடித்துவிடவும் பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இதை முடித்துவிட்டு பாலிவுட்டுக்கு செல்கிறார். அங்கு ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கவுள்ளார்.

Advertisment

வெப் சீரிஸில் மஞ்சிமா மோகன்!

dd

தமிழ், மலையாளம், தெலுங்கு என கவனம் செலுத்தி வந்த மஞ்சிமா மோகன், கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான "பூ' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்த அவர் தற்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார். இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி கதையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான "சுழல்' சீரிஸின் இரண்டாம் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கும் இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சீரிஸ் மூலம் வெப் சீரிஸில் அறிமுகமாகும் மஞ்சிமா மோகன், சீரிஸ் குறித்து பேசுகையில், இந்த கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும், இந்த சீரிஸ் நிச்சயம் என் இதயத்திற்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.

மூன்று கெட்டப்!

கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்' படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடந்துவந்த நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கமல் பிஸியாகயிருப்பதால் அது முடிந்த பிறகு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் கதைக்களம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போல் இருக்கிறதாம். அதனால் கமல் மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் பல்வேறு கெட் டப்பு களில் கமல் தோன்றவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் ஜெயம் ரவி, சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக் கின்றனர் என்பது நினைவுகூரத் தக்கது.

மாளவிகா கணக்கு!

cc

மாளவிகா மோகனன் தற்போது தமிழில் "தங்கலான்', தெலுங்கில் "தி ராஜா சாப்', உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இரண்டு படங் களுமே இந்தாண்டு ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ளது."தங்கலான்' போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன. "தி ராஜா சாப்' படப்பிடிப்பில் உள்ளது. இந்த நிலையில் அவர் இந்தியில் "யுத்ரா' என்ற தலைப்பில் ஒரு படம் நடிப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. 2022ஆம் ஆண்டு சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது அந்த படமும் ரிலீஸுக்கு தயாராகவுள் ளது. இந்தப் படம் இந்தியில் தனது இமேஜை உயர்த்தும் என நம்புகிறார் மாளவிகா மோகனன். ஒரே ஆண்டில் தான் நடித்த மூன்று படங்களும் வெளியாக வுள்ளதால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளில் ஒரு ரவுண்டு வரு வோம் என கணக்கு போட்டுள் ளார் மாளவிகா மோகனன்.

-கவிதாசன் ஜெ.

nkn270324
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe