பரபர பிரியங்கா!
குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் பிரியங்கா மோகன். இப்போது ஜெயம் ரவியுடன் ‘"பிரதர்'’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியா கிறது. இதையடுத்து தனுஷ் இயக் கத்தில் உருவாகிவரும் ‘"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'’ படத்தில் ’"கோல்டன் ஸ்பேரோ'’ பாடலுக்கு நடன மாடியிருக்கிறார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பிரியங்கா மோகன் அடுத்ததாக ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க வுள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘"பென்ஸ்'’ என்ற தலைப்பில் உரு வாகும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதி தயாரித்து வெளியிடவும் செய்கிறார்.
வேற ப்ளான்!
வளர்ந்துவரும் ஹீரோவாக இருந்த அதர்வா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால் சற்று வருத்தத்தில் இருக் கிறார். மேற்கொண்டு புது படங்கள் எதையும் கமிட் செய்யாமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம், வேறொரு பிளானில் இருக் கிறார் அதர்வா. அதாவது கடந்த சில மாதங்களாக ஒரு படம் இயக்க வேண்டும் என்ற விருப்பம் அவரை தூங்க விடாமல் செய்ய, அதற்கான பணிகளில் கவனம்செலுத்தி வந்திருக்கிறார். இயக்குநர் அவதாரம் எடுக்க முடிவெடுத்த அதர்வா, தற்போது தனது படத்திற்கான அசிஸ்டண்ட் டைரக்டர்களைத் தேர்ந்தெடுத்து திரைக்கதை எழுதும் பணியில் முழு வீச்சுடன் இறங்கியிருக்கிறார். இந்தப் படம் ஆரம்பித்து முடிக்கும் வரை வேறு எந்த படங்களிலும் நடிப்பதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார்.
சூர்யா ஓ.கே!
"மூக்குத்தி அம்மன்' படம் மூலம் இயக்குநராக உருமாறிய நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தொடர்ந்து இயக்குவதில் ஆர்வம்காட்டி வருகிறார். அந்த வகையில் விஜய்யிடம் ஏற்கனவே ஒரு ஒன் லைன் கூறியிருக்கிறார். அந்த ஒன்லைன் விஜய்க்கும் பிடித்துப்போக முழுக்கதை எழுத எவ்ளோ காலம் ஆகுமென கேட்டபோது ஒரு வருடம் ஆகும் என ஆர்.ஜே.பாலாஜி சொன்னதால் இந்தப் படம் டேக் ஆஃப் ஆகாமல் போனது. இந்த நிலையில் தற்போது சூர்யாவிடம் கதை கூறியுள்ளார் பாலாஜி. சூர்யாவுக்கும் இந்த கதை பிடித்துப்போனது. அதனால் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படம் சூர்யாவின் 45வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருவதால் இந்தப் படத்தை முடித்தவுடன் உடனே ஆர்.ஜே.பாலாஜி படத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார்.
அற்புத அக்கா!
கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. பின்பு கதாநாயகி வாய்ப்பு வராததால் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடித்துவந்தார். இருப்பினும் தமிழை தவிர்த்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவந்தார். கடைசியாக உதயநிதி நடிப் பில் கடந்த ஆண்டு வெளியான "கண்ணை நம்பாதே' படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி -ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள "பிரதர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஜெயம் ரவி இந்த படத்தில் எனது தம்பியாக நடித்திருக்கிறார். தமிழில் நான் அதிக படங்களில் நடிக்கவில்லை. அதிகபட்சமாக ஏழு படங்களில் நடித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு படத் திலும் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தது'” என்றார். இந்த படம் தன்னை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும் என நம்புகிறார்.
-கவிதாசன் ஜெ.