பாராரி
"நீயும் கூலி, நானும் கூலி... நம்ம ஏன்டா அடிச்சிக்கிட்டு அம்மணமா நிக்கணும்?''
இந்த வசனம் மிகப்பெரிய அரசியலை, அரசியல் செய்வோரின் வஞ்சகத்தை ஒரு வரியில் சொல்கிறது. வரலாற்றின் எந்த கட்டத்திலும் பதிவாவது அரசர்களாகவும், பலியாவது பொதுமக்களாகவும்தான் இருந்திருக் கிறது. நவீன காலகட்டத்திலும் அதுதான் தொடர்கிறது. குறிக்கோளையோ, கொள்கையையோ, விளைவுகளையோ முழுதாக அறியாத கோடிக்கணக் கானோர் வெறுப்பரசியலின் வாகனங் களாக தங்கள் தலைமைகளைச் சுமந்து திரிகின்றனர். தலைவர்கள் பதவிகளை யும், வசதிகளையும் அனுபவிக்க, தொண்டர்கள் களத்தில் பலியாக்கப் படுகின்றனர். படிப்பிலும், தொழில் முன் னேற்றத்திலும் பெருமை கொள்ள வேண்டியவர்கள், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, எந்த விதத்திலும் தங்களால் தீர்மானிக்கப்படாத சாதி யிலும், மதத்தி லும் பெருமை கொள்கின்ற னர். இந்த நிலையை புதிய களத் தில் புழுதி கலந்து சொல்லியிருக்கிறது இயக்குனர் எழில் பெரியவேடியின் "பராரி'.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்... ஒரு சாமியை கும்பிட்டாலும் இரு வேறு சமூகமாய் பிரிந்து நிற்கும் மக்கள்... அவர்களுக்குள் பகையை வளர்த்துவிடும் பணக்காரர்கள்... இப்படி இருக்கும் சூழ்நிலையில் கூலி வேலையை நம்பியிருக்கும் இரு தரப்பையும் சேர்ந்த மக்கள், கர்நாடகாவில் ஜூஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஆண்டுதோறும் செல்லும் சீசன் வேலைக்கு செல்கின்றனர். அங்கு இவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள், அங்கு நடக்கும் சம்பவம் இவர்களை எப்படி மாற்றுகிறது என்பதுதான் 'பராரி' படத்தின் கதை. திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலமும் மக்களும், மொழியும் கறியும் திரையில் புதிதாகப் பதிவாகிறது. சமீபத்தில் வெளியான பாரி இளவழகனின் "ஜமா' திரைப்படம் அம்மண்ணின் ஒரு பரிமாணத்தை காட்டியிருந்தது. 'பராரி' வேறொரு பரிமாணத்தை காட்டுகிறது.
திரைப்படங்களில் எது அழகியல், எது சுவாரசியம் என்பதையெல்லாம் தாண்டிய திரைப்படங்கள் அவ்வப்போது வரும். பன்றி விரட்டும் காட்சியை ஒரு தமிழ்ப் படத்தில் பார்ப்பது அடிக்கடி நிகழ்வதில்லை. நாயகன், நாயகி என்பதைத் தாண்டி பல கதாபாத்திரங்களுடன் ஒரு ஊராகவே படம் நம் மனதில் பதிகிறது. கர்நாடகாவின் மொழி அரசியல் எப்படி செயல்படுத்தப்படுகிறது, அடித்தட்டு இளைஞர்கள் எப்படி கருவியாக்கப்படுகிறார்கள் என்பதும் பேசப்பட்டிருக் கிறது. பல கருத்துக்களை சொல்லிவிட வேண்டும் என்ற பதற்றமும் ஆங் காங்கே தெரிகிறது. திரைப்படங்களுக்குரிய வழக்கமான கவர்ச்சி, அழகு, ஃபார்முலா இல் லாமல் இந்தக் கதையை சொல்ல எவையெல்லாம் அத்தியாவசியமோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டி ருக்கிறது இப்படம். இயக்குனர் ராஜூமுருகன் இத்திரைப்படத்தை வழங்கியுள்ளார். எத்தனை ஆயிரம் படங்கள் வந்திருந்தாலும் காட்டப்படாத வாழ்க்கைகள், சொல்லப்படாத கதைகள் இன்னும் இருக்கின்றன என்பதை மீண்டும் சொல்லியிருக்கிறது "பராரி.'
-வசந்த்
வரலட்சுமி பராக்!
விஜய்யின் 69வது படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் வினோத். ஏற்கனவே நடிகர் நடிகைகள் பட்டியலை அறிவித்த அவர் சில ஆர்டிஸ்டுகளை சஸ்பென்ஸாக இறக்க முடிவெடுத்தார். அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வரவழைக்க முயற்சி எடுத்தார். அது சரியாக அமையாததால் அதில் இருந்து பின்வாங்கிவிட்டார். இதையடுத்து வரலட்சுமி சரத்குமாரை உள்ளே இழுக்க முயற்சி எடுத்தார். இது தற்போது கைகூடிவிட்டது. இப்போது நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் வரலட்சுமி கலந்து கொண்டு நடித்து வருகிறார். முன்ன தாக "சர்கார்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த வரலட்சுமி, வில்லியாக நடித்திருந்த நிலையில் விஜய் 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லக்கி மீனாட்சி!
இந்தியில் தனது கரியரை தொடங்கியிருந் தாலும் தெலுங்கில் நடித்து பின்பு தமிழில் விஜய்யின் ‘"கோட்'’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. இப்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான "லக்கி பாஸ்கர்' பெரும் ஹிட்டடித்ததால் பட வாய்ப்பு அவருக்கு குவிந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு தெலுங்குப் படங்களை கைவசம் வைத்துள்ள அவர், புதிதாக இன்னொரு படத்தை கமிட் செய்துள் ளார். அதாவது பிரபல நடிகரான நாகசைதன்யா வுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். கார்த்திக் வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில் முதலில் கதாநாயகி பாத்திரத்துக்கு பூஜா ஹெக்டேதான் நடிப்பதாக பேச்சுகள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
வில்லனாகும் ஹீரோ!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கவுள்ள "புறநானூறு' படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையாக பவர்ஃபுல்லாக எழுதப்பட்டுள்ளதால் அதற்கு பெரிய பெரிய நடிகர்களை அணுகியது படக்குழு. மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில், நிவின் பாலி என ஆரம்பித்து தமிழில் விஷால், ஜெயம் ரவி என தொடர்ந்தது. இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லன் ரோலில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே "ஆதி பகவான்' மற்றும் "நிமிர்ந்து நில்' போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படங்களில் அவரே ஹீரோவாக நடித்திருந்த நிலையில் முதல் முறையாக மற்றொரு நடிக ருக்கு வில்லனாக நடிக்கவுள் ளார். சமீபகாலமாக அவரது படங்கள் சரியாகப் போகாத தால் இந்த அதிரடி முடிவு என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.
-கவிதாசன் ஜெ.