ஸ்டார்ட் கேமரா!
"ரெமோ', "சுல்தான்' ஆகிய இரு படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன். லாரன்ஸை வைத்து ‘"பென்ஸ்'’ என்ற தலைப் பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியிருந்தார். இப்படத்திற்கான கதையை எழுதி லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். அவரது எல்.சி.யு. பாணியில் இப்படம் உருவாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டை கடந்த நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்பட வில்லை. மாதவனிடம் பேசி ஓ.கே. வாங்கியிருந்தனர். இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை ஒப்பந்தம் செய்தனர். பின்பு எந்த அப்டேட்டும் வராத நிலை நீடித்தது. ஆனால் இப்போது பணிகள் வேகமெடுத் துள்ளது. மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி இப்படத்தில் இணைந்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt_114.jpg)
உறுதியான உறவு!
ரவிமோகன் (ஜெயம் ரவி) ஆர்த்தி என்பவரை 2009ஆம் ஆண்டு கரம் பிடித்த நிலையில் 15 வருடம் கழித்து ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். இவரது முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆர்த்தி, ரவி மோகனின் இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவென்றும், முழுக்க முழுக்க என் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் வராமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந் தார். இருப்பினும் ரவிமோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார். வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க ரவிமோகனின் இந்த விவாகரத்து முடிவிற்கு பெங்களூரூவைச் சேர்ந்த பாடகி கெனிஷாதான் காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் ஆதாரத்துடன் பல்வேறு திடுக்கிடும் விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதன் பிறகே இந்த விஷயம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்ப.... பின்பு பூதாகரமானது. ஆனால் ரவிமோகன், “"நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க'” என செய்தியாளர்களி டம் கூறினார். கெனிஷாவும் "ரவிமோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணம் இல்லை' என கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்த வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரிகணேஷ் மகளின் திருமண நிகழ்ச்சி யில் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டனர். இதன் மூலம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உறுதியாகியுள்ளது.
டைரக்டர் ரெடி!
ரஜினியை வைத்து "கூலி' படப் பணிகளை கவனித்துவரும் லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியை வைத்து "கைதி 2' படத்தை இயக்க வுள்ளார். இயக்கத்தில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனக ராஜை நடிகராக்கும் முயற்சியில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இறங்கினர். ஆனால் அது கைகூடவில்லை. பின்பு ஸ்ருதிஹாசன் இசையமைத்து நடித்த ‘"இனிமேல்'’ ஆல்பம் மூலம் நடிகரானார். பின்பு சுதாகொங்கரா இயக்கும் "பராசக்தி' படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந் தது. பின்பு அதுவும் சரியாக அமையவில்லை. இருப்பினும் அவரை சன் பிக்சர்ஸ் நிறு வனம் ஹீரோவாக நடிக்க ஓ.கே. வாங்கி வைத்திருந்தது. இதற்காக பல இயக்குநர் களை தேடிவந்தது. இப்போது இயக்குநரை லாக் செய்துள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி, இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. இப்படத்தில் நடித்து முடித்துவிட்டு "கைதி 2' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ரியல் ஜோடி!
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா இருவரும் சமீபகாலமாக காதலில் இருந்து வரும் நிலையில் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இருவரும் ஒன்றாகவே சுற்றிவருகின்றனர். இந்தச் சூழலில் இருவரும் இணைந்து ஒரு தெலுங்கு படம் நடிக்க கமிட்டாகியுள்ளனர். ‘"ஷாம் சிங்காராய்'’ பட இயக்குநர் ராகுல் சங்கராட்டியான் இப்படத்தை இயக்க, பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. காத லுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படத்தில் நிறைய இருப்பதால் ரியல் ஜோடி களான விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா இருவரையும் டிக் செய்துள்ளனர். இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இரு வரும் இணைந்து நடிக்கவுள்ள னர். முன்னதாக "கீத கோவிந்தம்', "டியர் காம்ரேட்' படங்களில் இவர் கள் ஜோடியாக நடித்திருந்தனர்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/tt-t_1.jpg)