இம்முறை தமிழகத்தை பெய்து கெடுத்துக்கொண்டிருக்கிறது பேய்மழை. தலைநகரம் சென்னை முதல் கடைக்கோடி யான குமரி வரைக்கும் மட்டு மீறிப் பெய்துள்ள மழையால், பல்வேறு இடங்களில் வெள்ளநீர், சுவர், வீடு இடிதல், மின்சாரம் தாக்கிப் பலி, குடியிருப்புகளில் மழை, பாலங்கள் சேதம் என பல்வேறு மழைசார்ந்த இன்னல் களை எதிர்கொண்டுவரு கின்றனர். தமிழகத்தின் கொங்கு மற்றும் மத்திய மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன. அரசு இயந்திரம் என்னதான் வரிந்துகட்டிக்கொண்டு நிவாரணப் பணிகளில் இறங்கினாலும், அதையும் தாண்டி மழையின் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஏரிக்கால்வாய் ஓரம் 50-க்கும் மேற்பட்டோர் குடிசைபோட்டு குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இங்கு மழைநீர் அதிகரித்து ஓடியதால் அங்கிருந்தவர்களை அரசு முகாம்களில் தங்கச்சொல்லி அறிவுறுத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகள். கொட்டாங்கரை பகுதியில் ஹபீப் என்பவரின் பழைய வீட்டில் நவம்பர் 18-ஆம் தேதி இரண்டு குடும்பங்கள் சென்று தங்கின.
மறுநாளும் மழை பெய்துகொண்டே இருந்தது, காலை 7.30 மணியளவில் திடீரென அவர்கள் தங்கியிருந்த வீடு இடிந்துவிழ, மிஸ்பா பாத்திமா, மன்னுல்லா, ருஹி, கவுசீர், தன்சீலா, உட்பட குழந்தைகளான அப்ரா, தஹா மில், அபிரா என 9 பேர் இவ்விபத்தில் பலியாகினர். ஹன்னா, அன்சாரி, தவுபீக், தவுசீப், ஹபீப், நஜீரா, ஹஜீரா, குழந்தைகள் மொய்தீன், ஹஜீரா போன்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்ற அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமுலு, கார்த்திகேயன், எம்.பி கதிர்ஆனந்த் போன்றோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினர். "ஏரி குடிமராமத்துப் பணிகளை சரியாகச் செய்யாததுதான் இழப்புக்கு காரணம்'' என்றார் அமைச்சர் துரைமுருகன்.
வேலூரை அடுத்த பசுமாத்தூரில் பாலாற்றங்கரையோரம் இளங்கோ என்பவருக்கு சொந்தமான இரண்டு அடுக்க

வேலூரை அடுத்த பசுமாத்தூரில் பாலாற்றங்கரையோரம் இளங்கோ என்பவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு இருந்தது. பாலாற்றில் வெள்ளம் அதிகமாக வந்ததால் அந்தப் பகுதியில் வசித்தவர்கள் முகாமுக்கு மாற்றப்பட்டனர். பாலாற்றில் வந்த மழைநீர், இளங்கோ வீட்டை ஆற்றுக்குள் இழுத்துச்செல்ல, அந்த வீடு உடைந்து ஆற்றில் கரைந்தது.
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இப்போதுதான் பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலாற்றின் குறுக்கே இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில், 1903-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2021 நவம்பர் 19-ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, 1,04,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இது முன்னெப்போதுமில்லாத ரெக்கார்ட்.
பாலாற்றில் வரும் நீரை தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்த, பாலாற்றின் குறுக்கே வாலாஜாவில் 1854-களில் அணைக்கட்டு கட்டப்பட்டது. 1903-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூர் மாகாணத்தின் கோலார் ஜில்லா பகுதிகளில் பெய்த பலத்த மழையால், கோலார் ஏரி, ஹொலையல் ஏரி, பேத்தமங்கலம் ஏரி, புக்க சமுத்திரம், பங்காநத்தம் ஏரி, பங்காருப்பேட்டை ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகள் உடைந்து பெருவெள்ளம் பாலாற்றில் வந்து கலந்து, அன்றைய வாணியம்பாடி நகரையே மூழ்கடித்தது. இதனால் 200 பொதுமக்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் காணாமல் போயின. உடைமைகளை இழந்த மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.
இந்த துயர சம்பவம் குறித்து அப்போதைய சென்னை மாகாண கவர்னரும், இந்தியா வின் வைஸ்ராயுமான லார்டு கர்சன், இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவுக்கு தந்திமூலமாக தெரிவித்தார். இந்த பெருவெள்ள நிகழ்வை நினைவுகூரும் வகையில் வாணியம்பாடி நகரில் இத்தகவல் பொறிக்கப்பட்ட கல் தூண் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிறகு இந்தாண்டு பாலாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பாலாற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது மக்களுக்கு பல வழிகளில் எச்சரித்து பாலாற்றங்கரையில் இருப்பவர்களை அரசு இயந் திரம் அப்புறப்படுத்தினாலும் பாலாற்றில் நீரை காணப்போகி றோம் என்றும், அதில் குளிக்கப் போகிறோம் எனச் சென்று, இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.
தமிழகம் முழுவதும் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் மாநில நெடுஞ்சாலை கள், மாவட்ட சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. திரு வண்ணாமலை மாவட்டத்தில் மழைவெள்ளம் குறித்து ஆய்வுசெய்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழகம் முழுவதுமுள்ள 49 கோட்ட அதிகாரிகளையும் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்புகொண்டு விவரம் கேட்டுவருகிறேன். அரிக்கப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் ஜல்லி, மொரம்பு மண் கொண்டு சரி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மழை விட்ட பிறகு அந்த சாலைகள் மீண்டும் தார்ச்சாலைகளாக அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்''’ என்றார்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பின. ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விழுப்புரம் நகரிலுள்ள பஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்தது.
திண்டிவனம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் தண்ணீரில் சிக்கிக்கொள்ள, பொக்லைன் எந்திரம் கொண்டு பஸ்சை மீட்டனர். மணிமுத்தாறு, வெள்ளாறு, பெண்ணையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரி -விழுப்புரம் இடையே பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சங்கராபரணி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தை கடந்து வெள்ளம் சென்றதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள களமருதூர், செங்குறிச்சி, பிள்ளையார்பாளையம் பகுதிகளில் வெள்ள நீரினால் சுமார் 1000 ஏக்கர் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் - அகரம் சித்தாமூர் - எடப் பாளையம் ஆகிய ஊர்களுக்கு இடையே ஓடிய கோரையாறு ஓடைகளில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
திருவெண்ணைநல்லூர் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும் அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. பெரியசெவலை, துறவி, சிறுகலாபட்டு ஆகிய ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்துவந்த பழங்குடி இருளர் இன மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பலரது வீடுகள் இடிந்து விழுந்தன. அவர்களை அந்தந்த கிராம, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று தங்கவைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகளை ஏற்பாடுசெய்து கொடுத்தனர்
விழுப்புரம் அருகேயுள்ள பம்பை ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றின் ஓரமிருந்த முத்தம்பாளையம் கிராமத்தில் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அதிகாரிகள் அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உணவு உடை கொடுத்து தங்க வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
அதேபோல், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிகண்ணன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதய சூரியன் ஆகியோர் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விரைந்துசெய்தனர். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மஸ்தான், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி, விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தின் அருகே ஓடும் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அங்கு மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, அந்த ஊரைச் சேர்ந்த பாய் என்ற முருகன் வெள்ள நீரில் குதித்து மீட்கச் சென்றார். மாடுகளை தேடிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் கரைக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து முருகனைத் தேடினர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகளுடன் முருகன் பாதுகாப்பாக கரைக்கு வந்து சேர்ந்தார்.
தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பு, சேத விவரங்களை மதிப்பிட ஒன்றிய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு வந்துள்ளது. பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு குழுவாகப் பிரிந்துசென்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியமாகுமரி, டெல்டா மாவட்டங்களை நவம்பர் 22, 23-ஆம் தேதிகளில் பார்வையிட்டனர். புளியந்தோப்பு வீராசெட்டி பகுதியில் மத்தியக் குழு ஆய்வுக்கு வந்தபோது, அப்பகுதியின் பாதிக்கப்பட்ட இடங்களையும், தீவிரத்தையும் புகைப்படங்களாக ஆய்வுக்குழுவுக்கு அதிகாரிகள் காட்டினர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், “வெள்ளப் பாதிப்பின்போது ஆய்வுக்கு வராமல், வெள்ளம் வடிந்தபின் ஆய்வுக்கு வந்ததற்காக” எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை யடுத்து போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் முதற்கட்டமாக ரூ 2,629.29 கோடி நிவாரண உதவி கோரியுள்ளது. இதில் ரூ 549.69 கோடியை உடனடியாக வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
மழை சேத பாதிப்புகளைப் பார்வையிட்டு முடிந்தபின், நவம்பர் 24-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுப் பணிகள் மற்றும் தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதி கோரிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.