Advertisment

அமைச்சர் கையில் டாஸ்மாக்! வீணாகும் அரசு வருவாய்!

ss

மிழகத்தில் தனியார் மதுபானக் கடைகளாக இருந்த மதுக்கடைகளை, கடந்த 2003 நவம்பர் 23-ஆம் தேதி முதல், அரசு மதுபானக் கடையாக மாற்றியமைத்தது அப்போதைய அ.தி.மு.க. அரசு. அப்போது பெரும்பான்மையான பார் உரிமையாளர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே அ.தி.மு.க.வினரின் கை ஓங்க, சில விதிமுறைகளைக் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர்.

Advertisment

tasmac

அரசு டாஸ்மாக் பார் நடத்துமிடம் சொந்த இடமாக இருக்கவேண்டும். வாடகை இடமாக இருந்தால், கட்டட உரிமையாளரிடம் என்.ஓ.சி. சான்றிதழ் பெற்று பார் நடத்த விண்ணப்பிக்கவேண்டும். அந்த இடத்தில் 300 முதல் 600 சதுர அடியை அரசு டாஸ்மாக் கடை நடத்த ஒதுக்கவேண்டும். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் தொகையில் டாஸ்மார்க் பார் நடத்துபவர் -நகரப் பகுதி என்றால் 1.8%, பேரூர் பகுதி என்றால் 1.6%, ஊராட்சி பகுதி என்றால் 1.4% வீதம் அரசுக்கு செலுத்த வேண்டும். இப்படி நிறைய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை ரூ.36ஆயிரம் கோடி டாஸ்மாக்கின் வருமானமாகச் சொல்லப்படுகிறது. டாஸ்மாக் வருவாய் அரசு பட்ஜெட்டுக்கு பேருதவியாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இத்துறையின் அமைச்சரான செந்தில்பாலாஜியின் தலையீட்டால் ஏற்கனவே டாஸ்மாக் பார் நடத்தும் உரிமையாளர்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு தொழிலைவிட்டே ஓடும் அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் முணுமுணுக் கின்றனர்.

Advertisment

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பரசன், "தமிழகத்தில

மிழகத்தில் தனியார் மதுபானக் கடைகளாக இருந்த மதுக்கடைகளை, கடந்த 2003 நவம்பர் 23-ஆம் தேதி முதல், அரசு மதுபானக் கடையாக மாற்றியமைத்தது அப்போதைய அ.தி.மு.க. அரசு. அப்போது பெரும்பான்மையான பார் உரிமையாளர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே அ.தி.மு.க.வினரின் கை ஓங்க, சில விதிமுறைகளைக் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர்.

Advertisment

tasmac

அரசு டாஸ்மாக் பார் நடத்துமிடம் சொந்த இடமாக இருக்கவேண்டும். வாடகை இடமாக இருந்தால், கட்டட உரிமையாளரிடம் என்.ஓ.சி. சான்றிதழ் பெற்று பார் நடத்த விண்ணப்பிக்கவேண்டும். அந்த இடத்தில் 300 முதல் 600 சதுர அடியை அரசு டாஸ்மாக் கடை நடத்த ஒதுக்கவேண்டும். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் தொகையில் டாஸ்மார்க் பார் நடத்துபவர் -நகரப் பகுதி என்றால் 1.8%, பேரூர் பகுதி என்றால் 1.6%, ஊராட்சி பகுதி என்றால் 1.4% வீதம் அரசுக்கு செலுத்த வேண்டும். இப்படி நிறைய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை ரூ.36ஆயிரம் கோடி டாஸ்மாக்கின் வருமானமாகச் சொல்லப்படுகிறது. டாஸ்மாக் வருவாய் அரசு பட்ஜெட்டுக்கு பேருதவியாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இத்துறையின் அமைச்சரான செந்தில்பாலாஜியின் தலையீட்டால் ஏற்கனவே டாஸ்மாக் பார் நடத்தும் உரிமையாளர்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு தொழிலைவிட்டே ஓடும் அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் முணுமுணுக் கின்றனர்.

Advertisment

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பரசன், "தமிழகத்தில் சுமார் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் சுமார் 3,520 டாஸ்மாக் கடைகளில் அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வந்தது. இதில் 80% பார், கட்டட உரிமையாளரிடம் இருந்து என்.ஓ.சி. பெற்று பார் உரிமம் வாங்கி நடத்திவருகின்றனர். 20% பார்கள் மட்டுமே சொந்தக் கட்டிடத்தில் அனுமதி பெற்று இயங்கிவருகின்றன.

rrகடந்த 2021 ஆண்டுவரை நன்றாகச் செயல்பட்டுவந்த டாஸ்மாக் பார்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் தம்பியான அசோக்குமார் தலையீட்டால் முடங்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. பார் நடத்த இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை டெண்டர் நடத்தப் படும். முந்தைய ஆட்சியில் முடிவான டெண்டர் 2021 அக் டோபர் மாதத்தோடு முடி வடைந்த நிலையில், 2021 டிசம்பர் மாதம் புதிய டெண்டர் அறிவிப்புகள் வெளியானது. டிசம்பர் 30-ஆம் தேதி டெண்டர் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் டெண்டர் விண்ணப்ப படிவம் வழங்கப் படவில்லை.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் 2021 டிசம்பர் 18-ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதியரசர் சரவணன், தமிழகம் முழுவதும் டெண்டர் நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும், அந்த ஆவணத்தை ஜனவரி 3-ஆம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி 36 டாஸ்மாக் மாவட்டத்தில், 30 டாஸ்மாக் மாவட்டத்திலுள்ள 2,520 டாஸ்மாக் பார்களின் உரிமம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும், மீதமுள்ள சென்னை உள்பட 8 டாஸ்மாக் மாவட்டத்தின் டெண்டர் நடக்கவில்லை என்றும், அந்த 8 டாஸ்மாக் மாவட்டத்திற்கான டெண்டர் தேதி ஆகஸ்டு 2-ல் அறிவிக்கப்படும் என்றும் கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் டெண்டர் நடைபெற்ற 2,520 டாஸ்மாக் பாரிலிருந்து சுமார் 500 பார்களில் இருந்து மட்டுமே முறையாக நிர்ணயத் தொகை கட்டிவந்தனர். மற்ற 2000 பார்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகையை சரியாகக் கட்டவில்லை. இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்தியும் வெளியிட்டோம். இதனால் அரசுக்கு 400 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு என்று தெரிவித்தோம். ஆகஸ்டு மாதம் வரை சென்னை உள்ளிட்ட எட்டு டாஸ்மாக் மாவட்ட பார்களின் உரிமத் தொகையை நாங்கள் முறையாகச் செலுத்திவந்தோம்.

டாஸ்மாக் நிர்வாகம், ஆகஸ்டு 2-ஆம் தேதி டெண்டர் தேதி அறிவித்தது. அதில் ஆகஸ்டு 18-ஆம் தேதி டெண்டர் நடக்காத டாஸ்மாக்கின் ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மற்றும் கிருஷ்ணகிரி, அரக்கோணம் உள்பட 8 டாஸ்மாக் மாவட் டத்திலுள்ள பார்களுக்கு புதியதாக டெண்டரும், ஏற்கனவே டெண்டர் அறிவித்ததாகக் கூறப்பட்டு சரியாக உரிமத் தொகை கட்டாத 30 டாஸ்மாக் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 டாஸ்மாக் பார்களுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி டெண்டர் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால் மீண்டும் எங்களுக்கு விண்ணப்ப படிவம் தரவில்லை. ஆகஸ்ட் 8-ஆம் தேதி மீண்டும் கோர்ட்டை நாடினோம். வழக்கை விசாரித்த நீதியரசர் அனிதா சுமந்த் விசாரணையில் எல்லாருக்கும் டெண்டர் படிவம் வழங்கவேண் டும் என்றும், ஆன்லைன் விண்ணப் பங்களில் சிறு தவறுகள் இருந் தாலும் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், நேர்மையாக டெண்டர் நடத்தி முழுவதையும் வீடியோ பதிவு செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

dd

அமைச்சர் தரப்பு மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டது. மீண்டும் நீதிமன்றத்தை நாடினோம். வழக்கை விசாரித்த நீதியரசர் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பில் டெண்டர் முழுவதையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இனிவரும் காலத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கட்டட உரிமையாளரிடம் உரிய அனுமதி பெற்று டெண்டர் வழங்கவேண்டும். கட்டட உரிமையாளருக்குத் தெரியாமல் டெண்டர் விடக்கூடாது, அதேபோல, விண்ணப்பத்தில் நிபந்தனைகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த 18 ஆண்டுகளாக எந்த ஓர் இடையூறும் இல்லாமல் நடந்துவந்த தொழில் தற்போது சீரழிந்துவிட்டது. அரசுக்குச் சேரவேண்டிய உரிமத் தொகையும் அரசைச் சென்றடையாமல் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துவருகின்றது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மைத்துனர் என்று கூறப்படும் கார்த்திக் ஆகியோரின் டீம் சொல்வதுதான் இன்று டாஸ்மாக்கில் சட்டம். அரசுக்குச் செலுத்தவேண்டிய உரிமத் தொகை எவ்வளவோ அதை அவர்களுக்கும் கட்டவேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். மீறினால் பார் நடத்த முடியாது. எதிர்த்து பார் நடத்த முடியாதவர்கள் எல்லாம் அவர்களிடம் பாரை ஒப்படைத்து விட்டனர். சென்னை மண்டலத்தில் அண்ணா நகர் சிந்தாமணியில் செயல்பட்டு வரும் கடை எண் 450, அண்ணா நகர் சாந்தி காலனியில் இயங் கும் கடை எண் 524 ஆகிய கடை கள் மட்டும் 24 மணி நேரமும் அமோகமாக விற்பனை செய் கின்றனர். மற்றவர்கள் எல்லாம் மறைந்து தொழில் செய்கின்றனர். கடந்த பத்து மாதமாக அரசுக்கு வரவேண்டிய உரிமத் தொகை சரியாகச் செல்லவில்லை. இதில் பல கோடிகள் முறைகேடாகச் சென்றுள்ளது, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு.

rr

அடுத்த டெண்டர் வரும்வரை, பழைய நிலையிலேயே உரிமத் தொகையை டாஸ்மாக் நிர்வாகம் கட்ட அனுமதித்தால், அரசுக்கும் இழப்பு வராது. நாங்களும் பிழைப்பை நடத்துவோம். நாள்தோறும் இந்த எட்டு மாவட்டத்தின் வருவாய் பதினோரு கோடி ரூபாயை யாரோ எடுத்துச் செல்கின்றனர். தற்போதுள்ள சூழலில் சாமி பெயர் கொண்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும் பைனான்ஸ் நிறுவன அதிபருக்கு முதல் கட்டமாக சென்னை மண்டலத்தின் மொத்த பார்களையும் ஒப்படைத்துவிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்தை சாக்காகக் காட்டி எப்.எல்.டூ லைசென்ஸ் (ரெஸ்டாரெண்டுடன் கூடிய பார்) நடத்த இந்த டீம் ஆய்வுக்காக ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது''’என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சங்கத்தின் செயலாளர் பாலமுருகன், "கரூர் டீமுக்கு கட்டுப்படாவிட்டால் போலீஸை ஏவிவிட்டு மிரட்டுறாங்க. இதுவரைக்கும் எங்க ஆட்கள் 40 பேர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டி ருக்காங்க. சென்னை, திருச்சி, கோவை, மதுரைன்னு நாலு மண்டலமா பிரிச்சி மாவட்ட வாரியா வசூல்செய்ய ஆட்கள போட்டிருக்காங்க''’என்றார் வருத்தமாய்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை யும், டாஸ்மாக் எம்.டி. சுப்ரமணியனை யும் கருத்துக்கேட்க பலமுறை தொடர்புகொண்டோம். அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்

nkn221022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe