வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளை வேட்டையாடும் கொடூரச் செயல்கள், பகீரூட்டும் வகையில் தற்போது அதிகரித்து வருகின்றன.

உதாரணத்துக்கு, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் அரங்கேறி, பொதுமக்களைப் பதட்டமடைய வைத்திருக்கின்றன.

கொடுமுடியை அடுத்த பனங்காட்டுப் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகள், பாசூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாள். மகன்கள் இருவரும் தொடக்கப் பள்ளியில் படிக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கு காலையில் சென்று மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.

Advertisment

tb

இந்த நிலையில், திடீரென அவர்களின் மகளான அந்த மாணவி வாந்தி எடுத்துள்ளாள். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், "வா மருத்துவமனைக்குப் போகலாம்' என அழைத்தபோது அந்த மாணவி, மருத்துவமனைக்கு வர மறுத்திருக்கிறாள்.

அவளது தாயார், மகளைத் தனியாகக் கூட்டிச் சென்று கேட்டபோது, "அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன்''’என அவர் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள். இதனால் அந்தக் குடும்பமே துடித்துப்போயிருக் கிறது.

இந்த கொடு மைக்கு யார் காரணம்? என விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த இவர்களின் உறவினர் மகனான 22 வயது தாமோதரன் என்பவன் தான், அவளைச் சீரழித்தான் என்பது தெரிய வந்திருக்கிறது.

கொரோனா கால கட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அந்த மாணவியை கண்காணித் திருக்கிறான் அந்த தாமோதரன். பிறகு மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்துப் பழக்கத்தை ஏற் படுத்திக் கொண்டிருக்கிறான். மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்றபின், அந்த மாணவியின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கியவன், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவளுடன் நெருங்கிப் பழகியதோடு, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவளை தன் விருப்பத்திற்குப் படிய வைத்திருக்கிறான். இந்தத் தசை வேட்டை தொடர்ந்த நிலையில்தான்... மாணவியின் வாந்தி, அனைத்தையும் அம்பலமாக்கி இருக்கிறது.

இவ்வளவையும் அறிந்து மனம் பதைத்த அவளது பெற்றோர், கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, அதன் பேரில் போக்சோ சட்டத்தில் தாமோதரன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அடுத்தது,

ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பாபுராஜ். கூலித் தொழிலாளியான இவன் அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமி ஒருத்தியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

ஒரு கட்டத்தில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்ததைக் கூற, அதிர்ந்து போன அவளது பெற்றோர், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்து காமுகன் பாபுவைக் கைது செய்திருக்கிறார்கள்.

இவன் மீது ஏற்கனவே ஈரோடு டவுன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என் கிறார்கள். இவன் கடந்த 2020-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தவன், இப்போது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பமும் ஏழ்மையானது. பெற்றோர் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி அப்பாவிச் சிறுமியை வேட்டையாடி இருக்கிறான்.

தனிமையில் இருக்கும் சிறுமி களைக் குறிவைக்கும் மன்மத மிருகங்கள் மீது, உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அப்பாவிச் சிறுமிகளும், மாணவிகளும் தொடர்ந்து சிதைக் கப்படுவது நெஞ்சை பதைபதைக் கச் செய்கிறது. பெண் குழந்தை களுக்கு பாலியல் குறித்த போது மான விழிப்புணர்வையும், தற்காப் புப் பயிற்சிகளையும் கொடுக்காத வரை, இதுபோன்ற சம்பவங் களைத் தடுக்க முடியாது என் கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

கல்வித்துறையும் அரசும் கவனிக்குமா?

Advertisment