"விஜய்க்கு அடுத்தது நானே?' என ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் மல்லுக்கட்ட, உச்சக்கட்ட தகிப்பிலிருக்கின்றது த.வெ.க.வின் அதிகார மட்டம். "பணத்தால் ஆதவ் அர்ஜுனா கட்சியினை கண்ட்ரோல் எடுக்கின்றாரென்றால், நானும் பணம் தருகின்றேன் என ரூ 300 கோடியை டார்கெட்டாக வைத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளார் கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.

Advertisment

   சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வாங்கிச்சென்ற நிலையில், "இவர்கள் துவக்க காலத்திலிருந்து நம்முடன் நெருங்கிப் பயணிப்பவர்கள். அடுத்ததாக ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக உருமாற்றம் அடைந்தபோதும் நம்முடன் பயணித்து வருபவர்கள். ஆகையால் இதில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் உள்ளனர்'' என தன்னிடமுள்ள லிஸ்ட்டை விஜய்யிடம் நீட்டியிருக்கின்றார் புஸ்ஸி ஆனந்த். 

Advertisment

இதேவேளையில், தன் ஆதரவாளர்களைக் கொண்ட லிஸ்ட்டை ஆதவ் அர்ஜுனாவும் விஜய்யிடம் ஒப்படைத்திருக்கிறார். தங்களிடமிருந்த இரு தரப்பு லிஸ்ட் வேட்பாளர்கள் குறித்து தங்களுடைய தரப்பு வாதத்தை இருவரும் எடுத்துவைத்த நிலையில்... விஷ்ணுரெட்டி, செங்கோட்டையன், ஜான் ஆரோக்யசாமியை அழைத்த விஜய், இரு லிஸ்ட்டையும் ஒப்படைத்து "பரிசீலனை செய்யுங்கள்' என்றிருக்கிறார்.

"இந்த நிலையில் "நேற்று வந்தவங்க உங்க சார்பில் லிஸ்ட் கொடுக்கலாமா? கட்சியில் பொதுச்செயலாளர் என நான் இருக்கும்போது என்னிடம் கலக்காமல் எப்படி நேரடியாக தலைவரிடம் உங்க தரப்பு வேட்பாளர் லிஸ்ட்டைக் கொடுப்பீங்க?' என புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜுனாவிடம் கோபத்தை வெளிப்படுத்த, இருவருக்கும் இடையே கலகம் வெடித்தது, வார்த்தைகள் தடித்தது. 

Advertisment

"வாய்ஸ் ஆப் காமனுக்கு மாதச்செலவு ரூ3 கோடி. தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், கட்சி மாநாடு என அத்தனை நிகழ்வுகளுக்கும், கரூரில் நடந்த 41 நபர்கள் மரணத்தில் குடும்பங்களுக்கு கொடுத்த பணம் அத்தனையும் என்னுடையது. பொறுப்பிலிருக்கும் யாராவது ஒத்தைக் காசை கொடுத்திருக்கிறீர்களா...? பேச மட்டும் வருகிறீர்கள்'' என ஆதவ் அர்ஜுனா கத்த, அந்த இடமே போர்க்களமானது. அதற்கடுத்துதான் அந்த லிஸ்ட், விஜய்யின் மனசாட்சியியான விஷ்ணுரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது'' என்றார் பனையூர் நிர்வாகி ஒருவர்.

tvk2

ஆளாளுக்கு தங்கள் தரப்பு வேட்பாளர் லிஸ்ட்டை கொடுத்த நிலையில், பெயருக்கு கட்சியின் பொருளாளராக இருக்கும் வெங்கட்ராமன், மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்கும் ஆசையைத் தெரிவித்திருக்கிறார். அதுபோக தன்னுடைய தரப்பு வேட்பாளராக மூன்று நபர்கள் கொண்ட லிஸ்டை கொடுத்துள் ளார். 

இந்நிலையில், அருண்ராஜும் தன்னு டைய தரப்பாக 5 வேட்பாளர்கள் அடங்கிய லிஸ்ட்டை விஜய்யிடம் ஒப்படைத்திருக்கிறார். 

இதில் என்ன ஹைலைட் என்றால், தொகுதிக்கு ரூ. 25 கோடி செலவுசெய்யும் தகுதியுடைய 29 மேற்கு மண்டலத் தொகுதி வேட்பாளர்கள் அடங்கிய லிஸ்ட்டை தன்னுடைய தரப்பு சிபாரிசாக ஒப்படைத் திருக்கிறார் செங்கோட்டையன். ஒட்டுமொத்த லிஸ்ட்டையும் வாங்கிய விஜய், "ஏம்பா... இந்த லிஸ்டில் உள்ளவர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்களா?' என கேள்வியைக் கேட்டதும், அனைவரும் தலையை அசைத்தும், அசைக்காதது போலும் சமாளித் திருக்கின்றனர்.

tvk1

"இவ்வளவு பணம் செலவு செஞ்சேன், அவ்வளவு பணம் செலவு செஞ்சேன் என பணத்தை வைத்துதானே ஆடுகிறான் அவன். மொத்தமாக ஒரு தொகையை தலைவர் காலடியில் கொண்டுவந்து கொட்டினால்தான் அவன் அடங்குவான்போல'’என மாநிலம் முழுவதுமுள்ள 128 மாவட்டத் தலைவர் களை அழைத்த புஸ்ஸி ஆனந்த், "ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒன்றரைக் கோடி கொடுங்கள்' என்றிருக்கிறார். ஒருசிலர், "தலைவரே! அவ்வளவு எல்லாம் முடியாது' என நேரிடையாகக் கூற, "ஒன்றரை கோடிகூட ரெடி பண்ணமுடியாது என்றால் தேர்தலுக்கு எப்படி செலவழிப்பீர்கள்? குறைந்தது  10 கோடி ரூபாயாவது ஆகும். ஒவ்வொரு தொகுதிக்கும்'' என எகிற பலர் தங்களுக்கு வேட் பாளர் அந்தஸ்து கிடைத்து விடும் என்று வீடு, தோப்பு ஆகியவற்றை அடகு வைத்தும் கடனுக்கு வாங்கியும் புஸ்ஸி ஆனந்திற்கு கொடுத்து வருகின்றனர் என்கிறது த.வெ.க. வட்டாரம்.

இதுபற்றி தகவ லறிந்த ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் வசூல் வேட்டையில் வெற்றிபெற்றுவிட்டால் நம்முடைய கதி அதோ கதிதான் என்றெண்ணி, ஜான் ஆரோக்கிய சாமியை அழைத்து, "புஸ்ஸி ஆனந்த் இஷ்டத்துக்கு வசூல் பண்றார். இது உங்க ளுக்கு தெரியும் என நினைக்கின்றேன். இதை தலைவரிடம் நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க'' என்றிருக் கிறாராம். 

இது அப்படியே வார்த்தைமாறாமல் விஜய்க்கு சென்றி ருக்கின்றது. புஸ்ஸி ஆனந்தை அழைத்து வசூல் விவரம் கேட்க, "தலைவரே, இது புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி நிதி இல்லை. கட்சியின் வளர்ச்சி நிதி. ஒவ்வொரு பணத்தையும் கணக்கு பார்த்துதான் வாங்குகின் றேன். வேலை முடிந்ததும் கட்சிக்கு நிதி என ஒரு பெரும் தொகை இருக்கும். யாரையும் நாம் நம்பவேண்டாம். இது என்னுடைய பணி மட்டுமே. நான் கொடுத்தேன், நான் தான் செலவு செய்தேன் என யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது கட்சி நிதி மட்டுமே'' எனக்கூற... "என்னமோ... போங் கப்பா'’என விஜய் பேசியிருப்பது ஆதவ் அர்ஜுனாவை எரிச்சலயடைய வைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜான் ஆரோக்கியசாமியின் டீமை சேர்ந்த ஒருவரோ, "புஸ்ஸி ஆனந்த் கடைந் தெடுத்த அரசியல் வாதி. விஜய்யின் அத் தனை நாடித்துடிப்பு களும் அவருக்குத் தெரி யும். எது சொன்னால் விஜய் கூலாவார், எரிச்ச லடைவார் என அத்த னையும் அத்துப்படி அவருக்கு. எம்.எல். ஏ.வாக இருந்தவர் வேறு. இத்தனை வருஷ மாக விஜய் கூடவே இருந்தவர். அறுவடை நேரத்தில் விட்டுக் கொடுத்திடுவாரா என்ன? இனி ஆதவ் அர்ஜுனாவுக்கு கெட்ட காலம்தான்'' என்றார் அவர்.

tvk3

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்த மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில், "சட்டமன்றத் தொகு திக்கு மூன்று வேட் பாளர்களை நீங்கள் பரிந்துரைக்கவும். கூடிய விரைவில் லிஸ்ட்டை அனுப்பி வைக்கவும்'' என புஸ்ஸி ஆனந்த் பேசியிருக்கிறார்.  சட்ட மன்றத் தேர்தலின்பொழுது மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த நபர்களுக்கு சீட் கிடைக்கவில்லையென்றால், "இது செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா கொடுத்த லிஸ்ட்டில்தான் எடுத்துள்ளார் கள். ஆதலால் அந்த தொகுதியில் நீங்கள் வேலை பார்க்கவேண்டாம்'' என்று புஸ்ஸி ஆனந்த்  கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் த.வெ.க.வை காலி செய்ய த.வெ.க. நிர்வாகிகளே முன் நிற்பார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர் கள்.              

_________________
யார் அந்த விஷ்ணுரெட்டி?

tvkbox

சமீபத்தில் சென் னையில் சாஹில்ரெட்டி என்பவரின் திருமணம் நடந்தேறியது. இத் திருமணத்தில் ஆந்திரா வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண் டார். இதே நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கலந்துகொண்டனர். ஒரே மேடையில் தமிழ்நாட்டு அரசியலின் எதிரெதிர் துருவங்கள் கலந்துகொண்டது எப்படி? யாருடைய திருமணம்? என அனைவரின் மத்தியில் கேள்விகள் எழுந்தன. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஜார்ஜ் ரெட்டியின் மகன்வழிப் பேரன் சாஹில் ரெட்டி. அதாவது ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரர் மகன். அரசியல்ரீதியாக முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் கலந்துகொள்ள, பிஸினஸ் பார்ட்னர் மற்றும் நெருங்கிய நண்பன் என்ற வகையில் அதே குடும்பத்திலுள்ள விஷ்ணு ரெட்டிக்காக விஜய் கலந்துகொண்டார். கனிம வள பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கும் விஷ்ணுரெட்டி மற்றும் சுஜய் ரெட்டியின் நெருங்கிய நண்பரான விஜய்க்கு விஷ்ணுரெட்டி ஏனோ ஸ்பெஷல். அத னால்தான் விஜய்க்கு மனசாட்சியாக உள்ளார் விஷ்ணுரெட்டி. ஆனால் அவர் த.வெ.க.வில் உறுப் பினர்கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.