டார்கெட் நேரு! அடுத்தடுத்து சிக்கும் மந்திரிகள்!

ss

மிழகத்தைத் தீவிரமாகக் குறிவைத்திருக்கிறது டெல்லி. எப்படியாவது இங்கே காலடி பதித்துவிட வேண்டும் என்பதற்காக பல வித்தைகளையும் அது கையாண்டு வருகிறது.

2026 தேர்தலில் தமிழகத்தில் அதிகார ரீதியாக காலூன்றவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் பா.ஜ.க. தரப்பு, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவர, சகல சித்து வேலைகளையும் அரங்கேற்றிவருகிறது.

kk

அ.தி.மு.க.வின் துணை இல்லாமல் தமிழகத்தில் காலடி பதிக்க முடியாது என்று கருதும் பா.ஜ.க., முதலில் அ.தி.மு.க.விற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லிவந்த எடப்பாடியைப் படிய வைக்க, அ.தி.மு.க.வின் சீனியர்களில் ஒருவரான மாஜி மந்திரி செங்கோட்டையன் மூலம் காயை நகர்த்த ஆரம்பித்தது. இதனால் கட்சியில் செங்கோட்டையன் அணி, எடப்பாடி அணி எனப் பிரியும் சூழல் ஏற்பட்டது. இதனால் மிரண்டுபோன எடப்பாடி, வேறு வழியின்றி திடீரென டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் திரும்பி வந்தபிறகு நாட்டின் வளர்ச்சி தொடர்பாக அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்ததாக பேட்டியும் அளித்தார். இருந்தும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், செங்கோட்டையனை நிர்மலா சீதாராமன் மூலம் டெல்லிக்கு அழைத்து, மீண்டும் எடப்பாடி வயிற்றில் புளியைக் கரைத்தது பா.ஜ.க.

இப்படி அ.தி.மு.க.வைத் தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவர ஒரு மூவ் நடந்துவரும் நிலையில், இன்னொரு பக்கம், தனது அதிரடிப்பார்வையை தி.மு.க.வின் பக்கம் திரும்பியது டெல்லி.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷ

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மூலம், தி.மு.க. தரப்பிற்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை ஏவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. காரணம், தமிழகத்திலுள்ள தி.மு.க. அரசு, தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களை எகிறவிடாமல் செய்துவருகிறது.

kk

குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது தி.மு.க. அதேபோல் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங் கிணைத்து, டெல்லிக்கு அதிரடி காட்டியது.

மேலும், இருமொழிக் கொள்கைதான் எங்களுடைய கொள்கை. மும்மொழிப் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் முழக்கமிட்டார். அதேபோல் வக்ஃபு திருத்த சட்டத்தை ஏற்கமாட்டோம் என் றும் முதல்வர் அறிவித்து, நாடாளுமன்றத்திலும் எதிர்வினையாற்றச்செய்தார்.

தமிழக அரசு இப்படி தங்க ளுக்கு எதிராக எந்த நிலைப்பாட் டையும் எடுக்கக்கூடாது என்று மிரட்டுவதற்காகத்தான், ஏற்கனவே தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை மேனேஜ் செய்துவந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் பா.ஜ.க. பழி வாங்கியதோடு, அவருடைய எல்லா செயல்பாடுகளையும் முடக்கும்விதமாக அவரை ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்தது. சமீபத்தில் டாஸ்மாக் சென்னை தலைமை அலுவலகத்தில் புகுந்து அம லாக்கத்துறை ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒன்றிய பா.ஜ.க.வின் சகல அஸ்திரங்களையும் தி.மு.க. அரசு முறியடித்தபடியே இருக் கிறது. எனவே மீண்டும் பவர் ஃபுல்லான தி.மு.க. அமைச்சர் களை ரெய்டுகளை ஏவி, அடக்கும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறது டெல்லி.

குறிப்பாக தென் தமிழகத்தில் அமைச்சர் மூர்த்தியை அது குறிவைத்திருப்பதோடு, வட தமிழகத்தில் பொன்முடி, ஜெகத்ரட்சகன், போன்றவர்கள் மீது தங்களுடைய கவனத்தை திருப்பியுள்ளது பா.ஜ.க. அதற்கு முன்னோட்டமாக டெல்டாவில் கோலோச்சும் அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகளில் தங்களுடைய சோதனையை தற்போது நடத்தியுள்ளது. அதற்கு காரணம், தமிழக பா.ஜ.க .மாநில தலைவர் தி.மு.க.வுடன் ரகசியமாக நட்பு வைத்திருந்ததுதானாம். அவருடன் தொடர்பில் இருக்கும் தி.மு.க .அமைச்சர்கள் பற்றி, பா.ஜ.க. நிர்வாகி மத்திய அமைச்சர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், சமீபத்தில் அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகியை டெல்லி மேலிடம் நேரில் அழைத்துக் கண்டித்தது. மேலும் அவரை மாநில பொறுப்பிலிருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

kk

இந்த பின்னணியில்தான் கடந்த 7ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் சகோ தரரான ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள டி.வி.ஹெச். என்னும் கட்டுமான நிறுவனத்திலும், அவரது வீட்டிலும், மற்றும் சென்னை அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும், அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண்நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த விவரங்களின்படி, கடந்த 2013ஆம் ஆண்டு கொப்பம்பட்டி தமிழ்மாறனின் மகன்கள் இளையராஜா, அறிவுநிதி ஆகியோர் இணைந்து தொடங்கிய ட்ரூடோம் இபிசி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் திரிஷே ரெனிவபிள் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின்படி காற்றாலை மின்சாரம் தயாரிப்புக்காக வங்கியில் 25 கோடி கடன் பெற்றது. இறுதியில் அந்த நிறுவனம் நட்டம் அடைந்துவிட்டதாக மஞ்சள் நோட்டீஸ் விட்டு திவாலானதாக கணக்கு காட்டியது. ஆனால் அந்நிறுவனத்தில் இருந்து பாலாஜி டிரேடர்ஸ்க்கு என்ற நிறுவனத்துக்கும், இகோடோம் பவர் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கும், மார்க் கிரீன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் கடனாக பெற்ற பணத்தை பிரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அமைச்சர் நேருவின் மகன் இயக்குநராக இருக்கும் இகோடோம் நிறுவன மும், மார்க் கிரீன் நிறுவனமும் திவாலானதாக கணக்கு காட்டி அவர்கள் பெற்ற பணத்தை கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக இருக்கும் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்க்கு மாற்றியுள்ளனர். இது தொடர் பாக வங்கி அவர்கள் மீது தொடர்ந்த பண மோசடி வழக்கை தான் தற்போது அமலாக்கத்துறை தூசு தட்டியுள்ளது. அதேபோல் வருமானவரித்துறையில் மட்டும் சுமார் 100 கோடிக்கு உரிய வரி செலுத்தப் படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆக, 2013ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சி.பி.ஐ. 2021-இல் ஒரு வழக்கு பதிந்து, அதன்பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சோதனைதான் இது என்று பதிலளித்திருக்கிறார்கள். அதிலும் வட மாநில அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.

தமிழக அதிகாரிகளை வைத்து நடத்தினால் சோதனைக்கான உண்மையான காரணம் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக பா.ஜ.க. திட்டமிட்டே இப்படி வட மாநில அதிகாரிகளை வைத்து இந்த சோதனையை நடத்தியுள்ளது.

காலை 6 மணிக்கெல்லாம் அமைச்சர் நேருவின் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 11 மணி நேரம் சோதனை யில் ஈடுபட்டதோடு, மாலை 5.30 மணிக்கு சோதனையை முடித் துள்ளனர். மேலும் அவருடைய வீட்டிலிருந்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒரு வெள்ளை நிற சூட்கேஸ்களில் எடுத்துச் சென்றனர். இந்த சோதனை நடவடிக் கைகள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்ட மிட்டபடி நடந்துமுடிந்துள்ளது என்கிறார்கள்.

அடுத்தடுத்து அமைச்சர்கள் இந்த சோதனை வட்டத்திலுள்ளதால், பா.ஜ.க.வின் இந்த ரெய்டு வியூகம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அவர்கள் ஆட்சி செய்ய நினைக்கும் மாநிலங்களில் வேறு ஆட்சியாளர்கள் இருந்தால் அவர்களை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றால் அச்சுறுத்துவது வழக்கம். ஏற்கனவே டெல்லியில் பா.ஜ.க.விற்கு சிம்மசொப்பனமாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட் டார். மீண்டும் அங்கு தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது தமிழ்நாடு. எனவே அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பா.ஜ.க. காய் நகர்த்துவதன் விளைவாகவே இந்த ரெய்டுகள் பாய்ந்திருக்கின்றன என்கிறார்கள்.

ரெய்டு நடவடிக்கைகளுக்கு நடுவே தமிழகத்தில் பா.ஜ.க. காணும் ஆட்சிக் கனவு பலிக்குமா?

nkn120425
இதையும் படியுங்கள்
Subscribe