2.16 கோடி ரூபாய் ரொக்கம் 13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. இவை தவிர, ஏராளமான பினாமி சொத்துக்களும் மற்றும் வெளிநாட்டில் கிரிப்டோகரன்சியில் செய்யப் பட்ட முதலீடுகளும் கிடைத் திருக்கிறது. சசிகலாவுக்கு சொந்தமான 180 இடங்களில் இன்கம்டாக்ஸ் நடத்திய ரெய்டுக்கு அடுத்தபடியாக நடத்தப்பட்ட பெரிய ரெய்டு (69 இடம்) இது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வர்ணிக்கின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், வீரமணி, வேலுமணி, இளங்கோவன், மாசுக் கட்டுப்பாட்டுத்துறை தலைவராக இருந்த வெங்கடாச்சலம் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதையடுத்து சிக்கியிருப்பவர் தங்கமணி. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்த அ.தி.மு.க திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்த மெகா ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

thangamani

Advertisment

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் தங்கமணியின் மகன் வசிக்கிறார். அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள வீடுதான் எடப்பாடியின் வீடு. அவரை சந்திக்க வரும் கட்சிப் பிரமுகர்களுக்காக பிரம்மாண்டமான கார் செட் அமைக்கப்பட்டுள்ளது. தனது பக்கத்து வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்துவது எடப்பாடியை அதிர வைத்தது. உடனடியாக கட்சிக்காரர்களை வரவழைத்து அவர்களுக்கு சாப்பாடு போட்டு தங்கமணிக்கு ஆதரவாக எடப்பாடி நிற்க வைத்தார். கூடவே ரெய்டுக்கு எதிராக அறிக்கையும் கொடுத்தார்.

எப்படி இவ்வளவு துல்லியமாக தங்க மணியை குறிவைத்தீர்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டோம். "தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரது சொத்து விவரங்களையும் நாங்கள் சேகரித்து வந்தோம். தங்கமணி மீது அவர் மின்வாரிய அமைச்சராக இருந்தபோது பல்லாயிரம் கோடி ரூபாய் நிலக்கரி வாங்கியதில் ஊழல், மத்திய அரசுக்கு நெருக்கமான அதானியுடன் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல், அத்துடன் அவர் வேட்பாளராக தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை காட்டிலும் அதிகமாக 4.35 கோடிக்கு சொத்துகளை வாங்கியுள்ளார்'' என அறப்போர் இயக்கம் புகார் கொடுத்திருந்தது. அதனடிப்படையில் கண்காணித்தோம். போலீஸ் தரப்பில் உயரதிகாரி ராதிகா, மாஜி மந்திரிகளுக்கு தகவல் தருவது பற்றி ஆட்சி மேலிடத்திற்குத் தெரிய வந்ததால், சமீபத்தில் அவரை டம்மி போஸ்டிங்கிற்கு மாற்றிவிட்டது.

பவானி ஈஸ்வரி என்கிற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தலைமையில் தங்கமணி வீட்டில் புகுந்த போலீசார், மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களின் வீட்டில் நடந்த ரெய்டை விட அதிகமான சொத்து விவரங்களை அள்ளிக்கொண்டு வந்தனர்'' என்கிறார்கள்.

இதில் முக்கியமானது தங்கமணியின் வெளிநாட்டு முதலீடுகள். அதுவும் கிரிப்டோ கரன்சியில் செய்யப்பட்ட இந்த முதலீடுகள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை ஆராய்ந்து வருகிறது. இவர்கள் வழக்கமாக வைத்துள்ள வங்கிக் கணக்குகளிலிருந்து கிரிப்டோகரன்சி வாங்குவதற்கு பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறது. அதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

tt

Advertisment

தங்கமணியைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான தொழிலதிபரான அதானியின் பிசினஸ் கூட்டாளியாகவே செயல்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்தவரை தமிழகத்தில் முதலீடு செய்து வந்த அதானி சமீபத்தில் ஆந்திர அரசுடன் 7000 கோடி ரூபாய்க்கு சூரிய சக்தி மின்சாரம் கொண்டு வரும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்தளவுக்கு அதானியின் விசுவாசியாகவே தங்கமணி திகழ்ந்துள்ளார். அதானிக்கும் தங்கமணிக்கும் உள்ள தொடர்பு, தங்கமணி வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு உதவியுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

"தங்கமணி வீட்டில் நடத்திய ரெய்டுகளில் சிறப்பம்சமே அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருக்கும் கம்பெனிகள் அனைத்தும் போலி கம்பெனிகள். லஞ்ச பணத்தை வெள்ளையாக்க தங்கமணி போலி கம்பெனிகள் தொடங்கியிருக்கிறார்.

tt

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் குன்கா அளித்த தீர்ப்பில் இதுபோன்ற போலி கம்பெனிகளை அடையாளம் காட்டி யிருக்கிறார். ஜெ.வைப் போலவே போலி கம்பெனி ஆரம்பித்து தனது ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செய்துள்ளார். தங்கமணி. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்றுவரை தப்பித்தே வரும் டி.டி.வி. தினகரன் போல, வெளிநாடுகளில் முதலீடு செய்து தப்பித்துவிடலாம் எனக் கணக்குப் போட்டு செயல்பட்டுள்ளார். தினகரன் வழியில் வேலுமணி, எடப்பாடி, இளங்கோவன் ஆகியோர் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கிரிப்டோகரன்சி என்கிற ஆன்லைன் கரன்சியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். தங்கமணியின் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரூ.4 கோடியைக் காட்டினாலும் ரெய்டுக்குப் பிறகு அவரிடம் உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் 100 கோடியை தாண்டும். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை சேர்த்தால் தங்கமணியின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரும்'' என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.