வெவ்வேறு பிரச்சினைகளில் மோதிக்கொண்டவர்கள், பின்னர் அந்த மோதலுக்கு சாதிச் சாயத்தைக் கொண்டுவந்து பூச முனைகிறார்கள். இவர்களை நம்பி அரசியல் புள்ளிகளும் அவசரகதியில் கண்டன அறிக்கை வெளியிட்டு பல்பு வாங்கி வருகிறார்கள். இதனால், பதட்டப் பரபரப்பிலும் பகீரிலும் இருக்கிறது சிவகங்கை மாவட்டம்.

சம்பவம் 1:

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு. "உன்னுடைய யூனிஃபார்மை கழற்றாம விடமாட்டேன் என்றபடி என்னை தாக்க வந்தார்கள்' -என மூச்சுவாங் கிய நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார் சிவகங்கை மாவட்ட சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் எஸ்.ஐ. பிரணிதா. உடனிருந்த அவ ருடைய அம்மா உள்ளிட்ட அவரது உறவினர்களோ செய்தியாளர்களை அழைத்து, "இப்பொழுது என்னுடைய மகளை மிரட்டியவர் வி.சி.க. மாவட்டச் செயலாளர் இளையகவுதமன். ஏற்கனவே அவருக்கும் என்னுடைய மகளுக்கும் முன்விரோதம் இருக்கிறது'' என்றார்கள்.

ss

சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு காக்கிகளோ, "சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமராவதி புதூர் கிராமத்தில், சடையாண்டி கோயில் நாடக மேடையை இடித்து, அறிவுசார் மையம் கட்டுவதற்கான பணி தொடங்கி யது. அப்போது ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் இரு தரப்பினராகப் பிரிந்து நின்றார்கள். அவர்களில் ஒரு தரப்பினர், மேற்படி அறிவுசார் மையத்திற்காக ஒதுக் கப்பட்ட இடம் தங்களுக்குச் சொந்த மானது என்று கூறியதோடு, நீதிமன்றத் தில் வழக்கு இருப்பதாகவும் கூறி, அந்த வேலையை நிறுத்தினார்கள். மற்றொரு தரப்பினர், அதையெல்லாம் பொருட் படுத்தாமல் அறிவுசார் மையத்தைக் கட்டுங்கள் என்று குரல்கொடுத்தனர்.

வேலையைத் தடுத்தவர்களோ, "வேலையைத் தொடர்ந்தால் எல்லோரையும் வெட்டிக் கொன்றுவிடுவோம்' என்று கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எதிர்த்தரப்பு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தது. இந்த புகார் மனு தொடர்பாக விசாரணையை எஸ்.ஐ. முத்து கிருஷ்ணன் துவக்கியிருக்கின்றார். அப்பொழுது அங்கு வந்த எஸ்.ஐ. பிரணிதா இதில் தலையிட்டி ருக்கின்றார். அப்பொழுது அங்கிருந்த வி.சி.க. மாவட்டச் செயலாளர் இளையகவுதமன், "ஊர் பிரச்சினையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? உங்களால்தான் ஊர் கெட்டுவிட்டது. அதனால் இந்த விவகாரத்தை நீங்கள் விசாரிக்க வேண்டாம். மீறி விசாரித்தால் உங்கள் யூனிஃபார்மை கழற்றாமல் விடமாட்டேன்'' என்றிருக்கின்றார். அதன்பிறகு காவலர்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்த எஸ்.ஐ.க்கு மூச்சுவாங்கியதால், ஆய்வாளர் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளார்''’என்று தங்கள் கவனத்துக்கு வந்த அந்த விவகாரம் பற்றி விவரித்தனர்.

Advertisment

இதற்கிடையே, மருத்துவமனையில் அட் மிட்டான பெண் எஸ்.ஐ. பிரணிதாவின் கணவரும், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவருமான கென்னடி, இந்த விவகாரம் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி. யிடம் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில்... ’தனது மனைவி பிரணிதா, சோமநாதபுரம் காவல் நிலையத் தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருவ தாகவும், அவர் சோமநாதபுரம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட மனோஜ் குமார் என்பவ ரிடம் தவறான முறையில் பழகி வருவதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் மனு கொடுத்திருந்தார். அதன்பேரில் வடக்கு காவல் நிலையத்தில் மனு எண்:300/24 பதியப்பட்டு எதிரி மனோஜ்குமார், காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, இருவரையும் காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் கண்டித்து அனுப்பி வைத்தார்.

அந்த மனோஜ்குமாருக்கு ஆதரவாகத்தான் இந்த பிரச்சனை நடந்துள்ளது என அதற்கடுத்த நாட்களில் எஸ்.பி. வந்தவுடன் அவரிடம் விளக்கம் கொடுத்தது எதிர்த்தரப்பு. உடனே, எஸ்.ஐ. பிரணிதாவை சஸ்பெண்ட் செய்து, சாதி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

ss

Advertisment

சம்பவம் 2:

பிப்ரவரி 12ம் தேதி மாலை, "அந்த சாதியில் பொறந்த நீ எப்படி இந்த வண்டியை ஓட்டலாம்? கை இருந்தால்தானே புல்லட் ஓட்டுவ?'' என்றபடி, மானாமதுரை கல்லூரி மாணவன் அய்யாசாமி யை மாற்று சாதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அரிவாளால் வெட்டினர். அதனால் மாணவரின் கை துண்டாகி விட்டது'' என தனியார் தொலைக் காட்சிகள் செய்தியினை ஒளிபரப்ப, தென் மண் டல ஐ.ஜி. அலுவலகத்திற்கே வியர்த்துவிட்டது.

இதில் வெட்டுப்பட்ட மாணவன் மானா மதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மக்கள் போராட்டத்தை தூண்டாதே! வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்! என சிவகங்கை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் போஸ்டர் ஒட்டி பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ’"நாங்கள் வளர்வதே அந்த சாதிக்கு பிடிக்காது''’என வெட்டப் பட்ட மாணவன் அய்யாச்சாமியின் சித்தப்பா குரல் எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த காவல்துறையோ, "மானா மதுரை மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி எனும் கல்லூரி மாணவன், தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி முடித்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மேலப்பிடாவூர் சமுதாயக்கூடம் அருகே குடிபோதையில் இருந்த வினோத்குமார், ஆதீஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூவரும் அங்கு இருந்துள்ளனர். அய்யாச்சாமியும் வினோத்குமாரும் நண்பர்கள். ஆதீஸ்வரன் அவரது பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் வாகனத்தை நிறுத்த, வினோத்தின் பட்டப் பெயரை கூப்பிட்டு அழைத்திருக் கின்றார் அய்யாச்சாமி. இதில் பட்டப் பெயரான "அலர்ட்' என கூப்பிட்டதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் வினோத்குமார் தான் வைத்திருந்த வாளால் அய்யாச்சாமியை வலது மற்றும் இடது கைகளில் வெட்டி யதில் அவருக்கு இடது மணிக்கட்டில் ஒரு வெட்டுக்காயமும், வலது முழங்கை உட்புறம் ஒரு வெட்டுக்காயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக எதிரிகள் மூவரும் இரவிற்குள் கைது செய்யப் பட்டனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கைகள் வெட்டித் துண்டாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டி ருக்கிறது'' என்றது எரிச்சலாய்.

ss

"வெட்டுப்பட்ட தரப்பும், வெட்டிய தரப்பும் நட்பாக வும் நெருக்கமாகவும் பழகியவர்களே. இந்த கிராமத்தினை பொறுத்தவரை மொத்தமுள்ள 120 குடும்பங்களில் 20 குடும்பங்கள் நாடார் சமூகம், 80 குடும்பங்கள் அகமுடையார் சமூகம் மற்றும் ஒற்றை எண்ணிக்கையில் பட்டியலின குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தப் பகுதிகளில் சாதி பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த கிராமத்தில் அது இல்லை. ஆனால் இப்போது இந்த பிரச்சினையில் சாதியைக் கொண்டு வந்துள்ளனர். அதுபோல் வழக்கும் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எங்குபோய் முடியுமோ?'' என கவலை தெரிவிக்கின்றார் மேல்பிடா வூரைச் சேர்ந்த ஒருவர்.

இந்நிலையில் அவர் புல்லட் வாகனம் வாங்கி ஓட்டியதாகவும், அதனை ஜாதிப் பெயரை சொல்லி இழிவாகப் பேசி மூவரும் வெட்டியதாக தகவல் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து காவல்துறை தரப்பிலும் புல்லட் வாகனம் வாங்கி பயன்படுத்தியதால் எழுந்த பிரச்சினை அல்ல என்று காவல்துறை தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று வகுப்பினர் வெட்டப்பட்ட அய்யாசாமியின் அண்ணன் முனியசாமி மற்றும் வெட்டியதாகக் கூறப்படும் ஆதீஸ்வரன், வினோத்குமார் அண்ணன் மருது மற்றும் மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிறுவயது முதலாகவே நட்புடன் பழகி வருவதாகவும் தங்கள் கிராமத்தில் எந்த ஜாதிப் பாகுபாடும் இல்லை என்றும் கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் அய்யாச்சாமி மற்றும் வினோத்குமார் சகோதரருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தங்களது விளக்கங்களை தெரிவித்துள்ளனர். இது அந்த சம்பவத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

"எந்தெந்த பிரச்சினைக்காகவோ முட்டி மோதிக்கொள் கிறவர்கள், கடைசியில் அதை சாதிப் பிரச்சினையாக ஆக்கப் பார்ப்பதும், தேவையிலாமல் சாதிச்சாயம் பூச முனைவதும் ஆபத்தானது' என்கிறார்கள் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தும், அவர் சார்ந்த காவல்துறையும்.

படங்கள்: விவேக்