இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதை நிரூபித்தது கீழடி அதே போன்று உலகளவில் தமிழகத்திலிருந்துதான் இரும்புக்காலம் தொடங்கியது என்றும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்றும் தொல்பொருள் ஆய்வின் அடிப்படை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தும் பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாக, 2 லட்சம் ஆண்டு களுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம், சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல பகுதிகளுக்கு கடல் வழியாக புலம் பெயர்ந்தது என்று மரபணு ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவந்த நிலையில்... "2 லட்சம் ஆண்டு களுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றிய ஹோமோசேப்பியன் இன ஆதிமனிதனின் 'M 130Y' என்ற மரபணுவின் தொடர்ச்சி, தமிழ் நாட்டில், உசிலம்பட்டியில் வாழும் விருமாண்டி என்பவரிடம் இருக்கிறது என்றும், இதன்மூலம், தமிழர்களே முதன்முதலில் இந்தியாவில் தோன்றிய பூர்வகுடிகள் என்பதும் நிரூபண மாகிறது' என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் மரபணு விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானிகளான ஸ்பென்ஸர் வெல்ஸ், ஆர்ஹின் ஹில் ஆகியோர் அடங்கிய உலகின் 12 விஞ் ஞானிகள் குழுவால் அறிவிக்க பட்ட செய்தி அப்பகுதியிலுள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி யுள்ளது.
"ஆதிமனிதன்' மரபணுவின் தொடர்ச்சியான விருமாண்டியை, உசிலம்பட்டியிலுள்ள ஜோதி மாணிக்கம் கிராமத்தில் சந்தித்தோம்... "சார், விருமாண்டிங்கறது என் தாத்தாவின் பெயர். எங்கள் முன்னோர் வழி பாட்டு குல தெய்வத்தின் பெயர்தான் விருமாண்டி. வழிவழியாக முதல் பையனுக்கு விருமாண்டி
இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதை நிரூபித்தது கீழடி அதே போன்று உலகளவில் தமிழகத்திலிருந்துதான் இரும்புக்காலம் தொடங்கியது என்றும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்றும் தொல்பொருள் ஆய்வின் அடிப்படை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தும் பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாக, 2 லட்சம் ஆண்டு களுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம், சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல பகுதிகளுக்கு கடல் வழியாக புலம் பெயர்ந்தது என்று மரபணு ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவந்த நிலையில்... "2 லட்சம் ஆண்டு களுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றிய ஹோமோசேப்பியன் இன ஆதிமனிதனின் 'M 130Y' என்ற மரபணுவின் தொடர்ச்சி, தமிழ் நாட்டில், உசிலம்பட்டியில் வாழும் விருமாண்டி என்பவரிடம் இருக்கிறது என்றும், இதன்மூலம், தமிழர்களே முதன்முதலில் இந்தியாவில் தோன்றிய பூர்வகுடிகள் என்பதும் நிரூபண மாகிறது' என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் மரபணு விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானிகளான ஸ்பென்ஸர் வெல்ஸ், ஆர்ஹின் ஹில் ஆகியோர் அடங்கிய உலகின் 12 விஞ் ஞானிகள் குழுவால் அறிவிக்க பட்ட செய்தி அப்பகுதியிலுள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி யுள்ளது.
"ஆதிமனிதன்' மரபணுவின் தொடர்ச்சியான விருமாண்டியை, உசிலம்பட்டியிலுள்ள ஜோதி மாணிக்கம் கிராமத்தில் சந்தித்தோம்... "சார், விருமாண்டிங்கறது என் தாத்தாவின் பெயர். எங்கள் முன்னோர் வழி பாட்டு குல தெய்வத்தின் பெயர்தான் விருமாண்டி. வழிவழியாக முதல் பையனுக்கு விருமாண்டி என்று பெயர் வைப்போம். முதலில் நான் யாரென்று அறியவைத்தது காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணு பேராசிரியர் விஞ்ஞானி பிச்சப்பன்தான். அவர் என்னை ஒரு வருடமாக தேடியிருக்கிறார். ஒருநாள் இரவு எங்கள் வீடுதேடி 4 வெள்ளைக் காரர்களுடன் வந்திருக்கிறார். அப்போது நான் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமத்திலிருந்து எங்கப்பா இதுகுறித்த தகவலை தெரிவிக்கவும், உடனே மதுரைக்கு வந்து, பேராசிரியர் பிச்சப்பனை சந்திக்கையில், அவரோடிருந்த வெளிநாட்டினர் என்னை வரவேற்றனர். என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எனக்கு ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர் தான் விளக்கினார். 2002ஆம் ஆண்டு, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி யிலிருந்து விஞ்ஞானி ஸ்பென்சர் வெல்ஸ் தலைமை யில் மதுரைக்கு வந்த மனித மரபணு ஆராய்ச்சிக் குழுவினர், ஆய்வுக்காக இரத்த மாதிரிகளை எடுத்துச்சென்றதில், எனது இரத்தம், ஆப்ரிக்காவில் தோன்றிய ஹோமோசேப்பியன் இன ஆதிமனித னின் ங 130வ என்ற பழமையான மரபணுவோடு 100 சதம் ஒத்துப்போகிறது என்று கண்டறிந்து அறிவித்துள்ளனர். இதை தெரிவிக்கவே உங்களைத் தேடி வந்தோம் என்றனர். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் தொடர்ச்சியாக நான் உசிலம்பட்டியில் வாழ்கிறேன் என்பது எனக்கு ஆச்சர்யமாகவும் தமிழராக பெருமையாக வும் இருக்கிறது'' என்றார்.
"உங்களை எப்படி மரபணு சோதனைக்கு உட்படுத்தினார்கள்?'' எனக் கேட்டதும்... "2002ஆம் ஆண்டில் உசிலம்பட்டி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது உலக மரபணு ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பெல்ஜியம், கனடாவை சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள் குழுவினர், மதுரை காம ராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிச்சப்பன் தலைமையில் கருத்தரங்கத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் 12 குழுக்களாக பிரிந்து, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி வாழும் மக்களிடம் நேரடியாக சென்று இரத்த மாதிரிகளை எடுத்ததோடு, எங்கள் கல்லூரி மாணவர்களும் விருப்பமிருந்தால் இரத்த மாதிரிகளைத் தரலாமென்றதால், என்னோடு சேர்த்து 250 மாணவர்கள் இரத்த மாதிரிகளைக் கொடுத்தோம்.
அப்போது, உலகத்தின் ஆதிமனிதன் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த மனித இனத்தின் மரபணுவின் தொடர்ச்சி 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ங 130வ என்ற பழமையான மரபணு இப்பவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் லேபரட்டரியில் பாதுகாக்கப் படுகிறது. முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோசேப்பியன் இனத்தவர் படிப்படி யாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசிய பகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த மனிதனின் ஒத்த மரபணுவைத் தேடி உலகம் முழுவதும் இரத்த மாதிரிகளை எடுத்துவருகிறோம். 5000 வருடங்கள் பழமையான நகரங்களில் மதுரை யும் இருப்பதாக கிரேக்க புவியியல் ஆய்வாளர் மெகஸ்தனிஸ் கூறியதை அடிப்படையாக வைத்து இங்கு வந்தோம். உலகின் முதல் மனிதனின் மரபணு எந்த மொழி பேசும் இனத்தோடு ஒத்துப்போகிறது என்று ஆய்வு செய்வதற்காக இங்கு வந்ததில், உசிலம்பட்டி கல்லூரியில் 250 இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன்பின் நான் முதுநிலை எம்.சி.ஏ. படித்துவிட்டு, பி.ஹெச்டி.யும் முடித்து, தற்போது சென்னையிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். இந்த செய்தி குறித்து 10 வருடங்களுக்கு முன் பேராசிரியர் பிச்சப்பனிடம் பேட்டியெடுத்து நக்கீரன் தான் முதன் முதலில் வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஆதி மனிதனின் ங 130வ என்ற பழமையான மரபணு, மதுரையிலுள்ள என்னிடம் 100 சதம் ஒத்துப்போகிறது என்ற அறிவிப்பை பி.பி.சி., நேஷனல் ஜியாக்ரஃபி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
என்னோட ஒரேயொரு வேண்டுகோள் என்ன வென்றால், நம் தமிழக முதல்வர், 5,300 ஆண்டு களுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட் பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்று தெரிவித்தது உலகளாவிய கவனத்தை ஏற்படுத்தியது. அதே போன்று தமிழர்களே இந்தியாவின் முதல் பூர்வ குடி என்பது என்மூலம் நிருபணமாகியிருக்கிறது. நானே வாழும் சாட்சி. என் இறப்பிற்குப்பின் என் மரபணுவை மரபணு ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்திட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்''’என்றார்.
இந்த மரபணு சோதனைக்கு முக்கிய காரண மாக இருந்த மரபணு விஞ்ஞானி பிச்சப்பனை சந்தித்தோம். "மரபணு ஆராய்ச்சி தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அப்போதுதான் விஞ்ஞானி ஸ்பென்ஸர் வெல்ஸ், ஆர்கின் ஹில் ஆகியோரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்திலிருந்துதான் நவீன மனிதன் தோன்றினான். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் கருப்பர் இனத்தவர்கள் பேசும் மொழி தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. அங்கு வாழும் விலங்கினங்களை தமிழின் பண்டைய இலக்கணங் களில் வரும் மூலப்பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர் என்பது தெரியவருகிறது. அதேபோன்று அவர்கள் பேசுவதும் மிகப் பழமையான தமிழ் சொல்லாடல்களே என்பது குறித்த டாகுமென்டரியை போட்டுக் காண்பித்தார்கள்.
உலகிலுள்ள மனித இனத்தில் 2500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மரபணு சுழற்சி நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள மூதாதையர்களின் மரபணு 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தக்கண பிரதேசம் என்று சொல்லப்படுகிற தென் மாநிலங் களில் வாழ்ந்த திராவிடர் மரபணுவோடு, இந்த ங 130வ மரபணு ஒத்துபோக வாய்ப்பு இருக்கிறது. எனவே தென்னிந்தியாவில் ஜீனோ கிராப்ஸ் ப்ராஜெக்டிற்கு முதற்கட்டமாக உலக வங்கி 20 மில்லியன் டாலர் ஒதுக்கியதும், 1 லட்சம் பேரை சாம்பிள் எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்து, எங்களின் மரபணு தேடுதலைத் தொடங்கினோம். அப்படி ஒரு தேடுதலில்தான் உலகின் மிகப்பழமை யான நகரங்களில் வாழும் கிராமம் மற்றும் மலைசார்ந்த மனிதர்களிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடத்தியும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அப்படித்தான் மதுரை உசிலம்பட்டியிலுள்ள கள்ளர் கலைக் கல்லூரி மாணவர்களிடம் எடுக்கப்பட்டதில் விருமாண்டி என்பவரின் மரபணு, ங 130வ மரபணுவோடு 100% ஒத்துப்போனதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அறிவித்தது. இதன்மூலம் இந்தியாவின் கற்கால மனிதர்களில் மிகப்பழமையான பூர்வகுடிகள் தமிழர்களே என்பதும், இந்தியாவிற்கு 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதனின் தொடர்ச்சி விருமாண்டி என்பதும் நிரூபணமாகியிருப்பது மிகப்பெருமையாக இருக்கிறது'' என்றார்.
மனிதர்களின் ஆதிகுடியின் தொடர்ச்சியான மரபணு கொண்ட விருமாண்டி தமிழ்நாட்டு பெருமையென்றால்... அவருக்கு ஆதரவளித்து, பாதுகாக்க வேண்டியது தமிழ்நாட்டின் கடமை!