Advertisment

தமிழர்களுக்கு விமானம் இல்லை! கைகழுவிய மத்திய அரசு! - தவிக்கும் பயணிகள்!

tr

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இயக்கப்படும் மத்திய அரசின் சிறப்பு விமான சேவையான வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை ஒரு விமானசேவை கூட குவைத் - திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவிய கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பன்னாட்டு விமானப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

Advertisment

tt

இந்நிலையில் உலகமெங்கும் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டது. வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவுசெய்த பாதிக்கப்பட்ட இந்தியர்களின் பதிவின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள விமானநிலையங்களுக்கு விமானசேவைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளிலிருந்து அதிகமான சேவைகள் இந்திய விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே விமானங்களை குத

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இயக்கப்படும் மத்திய அரசின் சிறப்பு விமான சேவையான வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை ஒரு விமானசேவை கூட குவைத் - திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவிய கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பன்னாட்டு விமானப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

Advertisment

tt

இந்நிலையில் உலகமெங்கும் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டது. வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவுசெய்த பாதிக்கப்பட்ட இந்தியர்களின் பதிவின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள விமானநிலையங்களுக்கு விமானசேவைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளிலிருந்து அதிகமான சேவைகள் இந்திய விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே விமானங்களை குத்தகைக்கு எடுத்தும் அவரவர்களுக்குத் தேவையுடைய விமான நிலையங்களை வந்தடையவும் மத்திய அரசு அனுமதித்தது. மாநில அரசு ஒத்துழைப்புடன் இந்த தனியார் விமானங்களை குத்தகைக்கு எடுத்துவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குவைத்தின் ஏர்வேஸின் 8 விமான சேவைகளில் 909 பயணிகளும், ஜஸீரா ஏர்வேஸின் 8 விமானசேவைகளில் 1,311 பயணிகளும், இண்டிகோ விமானநிறுவனத்தின் 3 விமானசேவைகளில் 499 பயணிகளும், மொத்தம் 19 விமானசேவைகளில் 2,719 பயணிகள் திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தனர். இவற்றில் ஒன்றுகூட மத்திய அரசின் சிறப்பு மீட்பு விமானசேவைத் திட்டமான "வந்தே பாரத்' திட்டத்தின்படி இல்லை. தற்போதைய ஐந்தாம் கட்ட மீட்பு நடவடிக்கைகளிலும் குவைத்திலிருந்து இதே நிலைதான். சுதந்திர தினம் முடிந்த நிலையிலாவது மாற்று ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த தற்காலிக மீட்பு விமான சேவைகள் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமானது பொதுமக்களின் கருத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரான அஙர்ஈஆஜஏர்ஒ-ல் கேட்டது. பொது மக்களும் தங்களும் கருத்துக்களை பதிவுசெய்தனர். குவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு மீட்பு விமானசேவைகள் வேண்டும் என்ற கருத்தும் அழுத்தமாக பல முறை பதிவிடப்பட்டது.

இந்தியாவிற்கு, குவைத் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தற்காலிகமாக, அதாவது வரும் 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தற்காலிக விமானசேவைகளை இரு நாடுகளுக்கிடையில் இயக்கிக் கொள்வதென்றும், குவைத் விமான நிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸ் ஆகியன சேவைவழங்க அனுமதிக்கப்பட்ட இந்திய விமான நிலையங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டைப் பொறுத்து சென்னை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளியைப் பொறுத்து ஏற்கனவே குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஸீரா ஏர்வேஸ் இரண்டும் தலா 8 சேவைகள் வழங்கிய நிலையில் தற்போதைய தற்காலிக ஒப்பந்தத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

tt

அதாவது "வந்தே பாரத்' மீட்பு விமான சேவையும் இல்லை. குவைத் விமானநிறுவனங்கள் சேவையும் அனுமதிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டியும் திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்கவும் வேண்டி அந்த ட்விட்டரில் பல பதிவுகள் இடப்பட்ட நிலையில், மத்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அந்த ட்விட்டர் பதிவுகளை நீக்கி மேலும் அதிர்ச்சி தந்தது.

தற்போது 5-ஆம் கட்ட "வந்தே பாரத்' மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்தியா மற்றும் குவைத்திற்கான தற்காலிக ஒப்பந்தத்தின் நிலை என்னவென்று தெரியாத சூழலில், ஒரு விமானசேவைகூட குவைத் மற்றும் இந்தியாவிற்கிடையில் பட்டியலிடப்படவில்லை. தனியார் குத்தகை விமானங்களில் திருச்சிராப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்வொரு விமானநிலை யத்திற்கும் வருவதற்கு கடுமையான விதிகள்; அதாவது ஒரு வாரம் கட்டாய தனிமைப்படுத்தலை அவர்கள் சொந்தச் செலவிலேயே மேற்கொள்ளுதல், வரும்போதும்-தனிமைப்படுத்தலை முடித்துக் கிளம்பும்போதும் என இருமுறை கொரோனா பரிசோதனை என கூடுதல் செலவினங்கள்.

இதனால், "சிறப்பு மீட்பு' விமானசேவையில் அதிகபட்சம் 100 குவைத்தினாருக்குள் முடிக்க வேண்டிய பயணக்கட்டணமானது, தனியார் குத்தகை விமானங்களில் குறைந்தது 220 குவைத்தினாரில் இருந்து அதிகபட்சம் 300 குவைத்தினார் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வேலை இழந்து, கடுமையா மன உளைச்சலில் குவைத்திலிருந்து "சிறப்பு மீட்பு' விமானசேவை இல்லை என்ற நிர்ப்பந்தம் காரணமாக திருச்சிராப் பள்ளிக்கு வந்த பயணிகள் செலவழித்த தொகை 6 கோடியே 65லட்சத்து 17ஆயிரத்து500. அதுவும் இம் மாதிரி பொருளாதார நெருக்கடியான சூழலில்.

"சிறப்பு மீட்பு' 5ஆம் கட்ட நடவடிக்கையி லாவது மத்திய அரசானது குவைத்திலிருந்து தேவையுடைய திருச்சிராப்பள்ளிக்கு தேவையான அளவு விமானசேவைகளை அனுமதிக்குமா? சேவை வழங்கத் தயாராக உள்ள குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸை திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க அனுமதிக்குமா?

சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி மாநில அரசானது மத்திய அரசை வலியுறுத்துமா?

கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

-ஜெ.டி.ஆர்

nkn190820
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe