குடியுரிமைக்காகப் போராடும் தமிழர்கள்! -சட்ட நியாயம் கிடைக்குமா?

dd

லங்கைப் பிரச்சினை காரணமாக, அங்கிருந்து தமிழகத்தில் வந்து ஈழத்தமிழர்கள் குடியேறி கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கான சட்ட வழியுரிமைகள் குறித்த தகவல்களைச் சேகரித்த, திருச்சியைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர் இ.ரோமியோ ராய் ஆல்பிரட், இதுகுறித்த வழக்கொன்றையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளார். அவர் இந்த வழக்குக்காக சேகரித்த, நேரில் கண்ட சில வரலாற்றுத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"தமிழகத்திலுள்ள இலங்கை அகதி முகாம்களில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். இலங்கை பூர்விகத் தமிழர்கள், இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கி.பி. 1800-ல் இந்தியாவை வாட்டிய கடும் பஞ்சத்தின்போது தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் உலகெங்கும் சென்றனர்.

ref

அப்படி இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்களை 1948-ல் அந்நாடு கணக்கெடுத்தபோது, 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என அறிவித்தது. அதன்பின் இலங்கை அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அது இலங்கை குடியுரிமைச் சட்டம். அதுதான் தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரச் சினையாக உருவெடுத்தது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தமிழர்களுக்கு குடியுரிமை இல்லையென அந்தச் சட்டம் அறிவித்தது.

1948-ல் இந்திய பிரதமரான நேருவும், இலங்கையின் சேனநாயகாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பிரதமர் நேரு, இந்தியாவிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு பர்மா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளன. உங்கள் நாடு மட்ட

லங்கைப் பிரச்சினை காரணமாக, அங்கிருந்து தமிழகத்தில் வந்து ஈழத்தமிழர்கள் குடியேறி கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கான சட்ட வழியுரிமைகள் குறித்த தகவல்களைச் சேகரித்த, திருச்சியைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர் இ.ரோமியோ ராய் ஆல்பிரட், இதுகுறித்த வழக்கொன்றையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளார். அவர் இந்த வழக்குக்காக சேகரித்த, நேரில் கண்ட சில வரலாற்றுத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"தமிழகத்திலுள்ள இலங்கை அகதி முகாம்களில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். இலங்கை பூர்விகத் தமிழர்கள், இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கி.பி. 1800-ல் இந்தியாவை வாட்டிய கடும் பஞ்சத்தின்போது தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் உலகெங்கும் சென்றனர்.

ref

அப்படி இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்களை 1948-ல் அந்நாடு கணக்கெடுத்தபோது, 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என அறிவித்தது. அதன்பின் இலங்கை அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அது இலங்கை குடியுரிமைச் சட்டம். அதுதான் தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரச் சினையாக உருவெடுத்தது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தமிழர்களுக்கு குடியுரிமை இல்லையென அந்தச் சட்டம் அறிவித்தது.

1948-ல் இந்திய பிரதமரான நேருவும், இலங்கையின் சேனநாயகாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பிரதமர் நேரு, இந்தியாவிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு பர்மா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளன. உங்கள் நாடு மட்டும் ஏன் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை என கேள்வியெழுப்பினார். அதேபோல் இலங்கையும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தினார். ஆனால் இலங்கை அதற்கு மறுத்துவிட்டது.

அதன்பின் 1962-ல் சீனாவுடன் நடைபெற்ற போரில், இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. வடக்கில் சீனாவும் கிழக்கு மற்றும் மேற்கில் பாகிஸ்தானும், தெற்கில் இலங்கையும் இருப்பதால், இந்தப் போரில் இலங்கை நமக்கெதிராக திரும்பிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இலங்கைக்கு இசைவாய் இந்தியா நடந்துகொண்டது. அந்த அகதிகளை இந்தியா அழைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டு ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் 1964-ல் கையெழுத் தானது. இக்கட்டிலிருந்த இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. அதன்பின் இந்திய பிரதமராக வந்த இந்திராகாந்தி காலத்தில், ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் இந்திராவும் இணைந்து 1974-ல் ஒரு ஒப்பந்தம் போட்டனர்.

அதன்படி, இலங்கைத் தமிழர்களில் 6 லட்சம் பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமெனவும், மீதமுள்ள 3 லட்சத்து 75 ஆயி ரம் பேருக்கு இலங்கை குடி யுரிமை வழங்குமெனவும் ஒப் பந்தத்தின் ஷரத்துகள் கூறின. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக் கும் மேலாக இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்களை ஆடு, மாடுகள்போல பாவித்து அந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கைவாழ் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்குக் கொண்டுவரப் பட்டார்கள். தலைமன்னார் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கப்பல்மூலம் இராமேஸ்வரம் வந்தடைந்து, திருச்சி கொட்டப் பட்டு பகுதிக்கு அழைத்துவரப் பட்டார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே, 1982-ல் இலங்கையில் இனக் கலவரம் ஏற்பட்டு, பூர்வீக இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களால் வேட்டையாடப்பட்டனர். 1983, ஜூலை மாதத்தில் இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இதனால் இலங்கை பூர்வீகத் தமிழர்கள், கள்ளத்தோணிகள் மூலம் இந்தியாவை வந்தடைகின்றனர். இந்திய அரசுக்கு இலங்கைவாழ் தமிழர்கள் யார், இந்திய வம்சாவளித் தமிழர்கள் யார் என்ற தெளிவு இருக்கவில்லை. அனைவரும் அகதிகளாகவே கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கை பூர்வீகத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான ஷரத்தை இந்திய அரசு கிட்டத்தட்ட மறந்தேவிட்டது.

re

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, இந்தியவாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கும் ஷரத்தை 1984 அக்டோபரில் நீக்கிவிட்டோம் என்றும், அதன்படி 4 லட்சத்து 61 ஆயிரத்து 631 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் தகவல் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 1 லட்சத்து 38 ஆயிரம்பேர் குறித்து எந்தத் தகவலும் இல்லை. பாதிபேர் அகதிகளாகவே இந்தியா வந்துள்ள னர். வந்தவர்களில் இந்திய குடியுரிமையுள்ள வர்கள் யார், இலங்கை குடியுரிமையுள்ளவர்கள் யார் என்பதிலும் இந்திய அரசுக்குத் தெளி வில்லை. அனைவரும் 108 முகாம்களில் கலந்து வசித்துவருகின்றனர்.

நாங்கள் தற்போது தொடர்ந்த வழக்கின் நோக்கமே, ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஒப்பந்தத்தின்படி அப்போது இலங்கைவாழ் தமிழன் கணேசன் (67) என்பவருக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்கப்பட்டது. அவரது கடவுச்சீட்டிலும் பதிந்து தரப்பட்டது. ஆனால் இந்தியாவின் மீட்புப்பணி ரத்து செய்யப் பட்டதால், அவர் இலங்கையிலே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது உயிரைப் பாதுகாக்க அவர் திரிகோணமலை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழு வருடங்களுக்குப் பிறகு திரிகோணமலையிலும் இனக்கலவரம் வெடிக்க, உயிருக்குப் பயந்து படகுகள் மூலம் 1990-ல் இந்தியா வந்து சேர்ந்தார்.

இராமேஸ்வரம் மண்டபம் வந்து சேர்ந்த அவர் கரூர் இறும்பூதிப் பட்டி அகதிகள் முகாமுக்கு அனுப்பப் பட்டார். அவர் வைத்திருக்கும் கடவுச்சீட்டு, அவர் இந்தியக் குடியுரிமை பெற்ற இலங்கைவாழ் தமிழர் என்பதைக் காட்டுகிறது. இருந்தும் அவர் இத்தனை ஆண்டுகளாக அகதிகள் முகாமிலே வைக்கப்பட்டிருக்கிறார். மறுவாழ்வுத் துறையின் நோக்கமே, பல்வேறு நாடுகளில் இருந்து இந்திய குடியுரிமை பெற்று தாயகம் திரும்புபவர்களை குடியுரிமை கொடுத்து பாதுகாப்பதுதான். ஆனால் அது நடைபெறவேயில்லை. அவர்களுக்கான குடியுரிமை பெற்றுத்தருவதுதான் இந்த வழக்கின் நோக்கம்.

தற்போது தமிழகத்திலுள்ள முகாம்களில் 96,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 50,000 பேரிடம் இந்தியக் குடியுரிமை இல்லாமல் இருந்தாலும், அவர்களது பாட்டி, தாத்தா என அவர்களது உறவினர்கள் தமிழகத் திலே வாழ்கின்றனர். அவர்களோடு சேர்ந்து வாழ முடியாமல் இவர்கள் தவிக்கின்றனர். முப்பதாண்டுகளாகியும் அவர்கள் அகதிகளாகவே கருதப்படுகின்றனர்.

கணேசனின் கடவுச்சீட்டை ஆதாரமாகக் கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில், இந்த கணேசன் என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 1987-ல், இலங்கை குடியுரிமையுடைய, இந்திய அகதிகள் முகாம்களில் உள்ளவர்களை நாங்கள் திரும்ப அழைத்துக் கொள்கிறோம். அதுபோல, இலங்கை முகாம்களில் உள்ள இந்தியக் குடியுரிமையுடையவர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென அப்போது கூறப்பட்டது. இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கு கணேசனே சாட்சி.

நாங்கள் முன்வைத்த கோரிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரம்புக்குள் வருகிறது. கணேசன் கொடுக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து அவருக்கு குடியுரிமை கொடுப்பது இந்திய அரசாங்கத்தின் கடமை. இந்தியக் குடியுரிமை இருந்தும் ஒருவர் போதிய விழிப்புணர்வு இல்லா மல் 31 வருடங்கள் அகதியாகவே வாழ்ந்திருக்கிறார். ஆகவேதான் இந்த வழக்கை நான் கையில் எடுத்திருக்கிறேன்.

இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிப்பது அரசின் கொள்கை முடிவைச் சார்ந்தது. ஆனால் அரசே மீட்டுக்கொண்ட 4 லட்சத்து 61 ஆயிரத்து 631 பேரில், பலர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நலமாக வாழ்கிறார்கள். அதில் இந்தியக் குடியுரிமை பெறாமல் போன 1 லட்சத்து 38 ஆயிரம் பேரில் இந்திய அரசு விரிவான ஆய்வு நடத்தி இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என ஆய்வுசெய்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்பதேயாகும்.

கலவரத்திலும் உயிர் பயத்திலும் தப்பிவந்த பலர், உரிய ஆவணங்களுடன் வந்திருப்பர் என எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் பலர் ஆவணங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களின் அப்பாவின் பிறப்புச் சான்றிதழில் இந்திய வம்சாவளி என இலங்கை அரசு குறிப்பிட்டிருக்கும். இப்படி பல ஆவணங்களைக் கொண்டு அவர்களது இந்திய வம்சாவளியை உறுதிப்படுத்தலாம். எனினும், பல நடைமுறைச் சிக்கல்களால் அவர்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர். .

1984 ஒப்பந்தத்தின்படி மொத்தம் 6 லட்சம் பேர் மீட்கப்படவேண்டும். ஆனால் அரசின் கணக்குப்படி மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 98 ஆயிரம் பேருக்கும் மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை கொடுக்கலாம். அரசின் கொள்கைப்படி 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு குடியுரிமை கொடுக்கலாம் என்பதால், 98 ஆயிரம் பேருக்கு கொடுப்பதில் பிரச்சினை இருக்காது'' என்றார் விரிவாக.

nkn160621
இதையும் படியுங்கள்
Subscribe