"இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போது தான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று கூறியதோடு அல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தவர் "தினத்தந்தி' அதிபர், மறைந்த சிவந்தி ஆதித்தனார். திருச்செந்தூர் வீரபாண்டி பட்டணத்தில் கடந்த பிப்.22-ல் நடந்த அவரின் மணிமண்டப திறப்பு விழாவில் திரும்பிய பக்கமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.
தமிழ்நாடு முழு

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங் களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் நிதி உதவி செய்தவர் சிவந்தி ஆதித்தனார். அதுமட்டுமல்ல, தென்மாவட்டத்தில் கபடி வீரர்களை தேடிப்பிடித்து அவர்களை ஊக்குவித்து பல போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கள மிறக்கினார். ""அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவரான இவர், எங்களைப்போன்ற கபடி பிளேயர்களின் படிப்பு எந்த வகையிலும் பாதிப்படையக்கூடாது என்பதற்காக பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி தொடங்கி வாய்ப் பளித்தார்''’என்கிறார் கோடக நல்லூரை சேர்ந்த கபடி வீரர் ஒருவர். ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தை கட்டிக் கொடுத்து, ‘"இரண்டாம் பராக்கிரம பாண்டியன்'’ என்றே அந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார்.
தமிழுக்கும், விளையாட்டிற்கும், வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் வழிகாட்டிய சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் மற்றும் உருவச் சிலையினை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ""எம்.ஜி.ஆர். சத்துணவு திட் டத்தை தொடங்கியபோது, திருச்சி பாப்பாக்குறிச்சி யில் தன் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் சத்துணவுக் கூடத்தை கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார். கல்வி வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை விளையாட்டுத்துறை வளர்ச்சியிலும் காட்டினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். இலக்கி யம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்த தற்காக அவருக்கு கடந்த 2008-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது கவுரவமே''’’என்றார்.
சிவந்தி ஆதித்தனாரின் நற்பணிகளை போற்றும் வகையில்தான் தமிழக அரசு சார்பில் அவருக்கு ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
இனிய தமிழை எளியநடையில் வழங்குகிற தினத்தந்தி’ நாளிதழை தொடங்கி பாமரனையும் படிக்க வைத்த சி.பா.ஆதித்தனாரின் மகனான சிவந்தி ஆதித்தனார், தனது நற்பணிகளால் கடல் கொஞ்சும் திருச்செந்தூரில் இறவாப் புகழோடு சிலையாக நிற்கின்றார்.
-நாகேந்திரன்