""ஈ.சி.ஆர்ல வீக்கெண்ட் பார்ட்டி நடக்கப்போகுது சார். வழக்கமான பார்ட்டி இல்ல. இண்டர்நேஷனல் போதை மாஃபியாக்களோட வேற லெவல் பார்ட்டி. அதுவும், சீஃப் கெஸ்டா வரப்போறவரு சாதாரண ஆளு இல்ல,… வேர்ல்டு லெவல் டி.ஜே. இதன்மூலமா, இண்டர்நேஷனல் போதை அண்ட் விபச்சார கும்பல் தமிழகத்துக்குள்ள எண்ட்ரி ஆகுது. தமிழகம் ரொம்ப சீக்கிரமா மிகப்பெரிய சீரழிவை சந்திக்கப்போகுது'' என்று நமக்கு வந்த திடுக்கிடும் இன்ஃபர்மேஷனை கன்ஃபர்மேஷன் பண்ணிக்கொண்டு ஈ.சி.ஆரை நோக்கி விரைந்தோம்.…
அதற்குமுன்… அந்த வேற லெவல் பார்ட்டிக்கு சிங்கிளாக செல்ல அனுமதி இல்லை என்பதால் செய்தி சேகரிக்கும் நோக்குடன் நம்முடன் வர சம்மதித்த ஃப்ரண்ட் திவ்யாவுக்கும் (நல்ல தோழி) சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இரண்டுபேருக்கு 2,000 ரூபாய். வி.ஐ.பி. புக்கிங் என்றால் ஐயாயிரம் ஓவாவாம். அடேங்கப்பா… இன்னும், கொஞ்சநேரம் தாமதித்திருந்தால்கூட டிக்கெட் ஃபுல் ஆகியிருக்கும்போல. அவசர அவசரமாக புக்கிங் செய்துவிட்டு இரவு 10:30 மணிக்கு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நீலாங்கரை அடுத்த வி.ஜி.பி. அம்யூஸ்மெண்ட் பார்க்கின் பின்புறத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஈசி-41 பார்ட்டி ஓப்பன் ஸ்பாட்டுக்குள் எண்ட்ரி ஆனோம்,… ஜோடியாக.
பைபிளில் வரும் கோலியாத், புராணத்தில் வரும் கடோத்கஜன் போல் ஹைட் அண்ட் வெயிட்டாக நிற்கிறார்கள் பவுன்சர்கள். சின்ன டவுட் வந்தாலும் பவுன்சர்களால் பஞ்சர் ஆக்கப்பட்டு தூக்கிவீசப்படுவோம் என்பதால் இயல்பான தொனியில் நாம் உள்ளே நுழைய… மொபைல் ஆப்’மூலம் பரிசோதித்துவிட்
""ஈ.சி.ஆர்ல வீக்கெண்ட் பார்ட்டி நடக்கப்போகுது சார். வழக்கமான பார்ட்டி இல்ல. இண்டர்நேஷனல் போதை மாஃபியாக்களோட வேற லெவல் பார்ட்டி. அதுவும், சீஃப் கெஸ்டா வரப்போறவரு சாதாரண ஆளு இல்ல,… வேர்ல்டு லெவல் டி.ஜே. இதன்மூலமா, இண்டர்நேஷனல் போதை அண்ட் விபச்சார கும்பல் தமிழகத்துக்குள்ள எண்ட்ரி ஆகுது. தமிழகம் ரொம்ப சீக்கிரமா மிகப்பெரிய சீரழிவை சந்திக்கப்போகுது'' என்று நமக்கு வந்த திடுக்கிடும் இன்ஃபர்மேஷனை கன்ஃபர்மேஷன் பண்ணிக்கொண்டு ஈ.சி.ஆரை நோக்கி விரைந்தோம்.…
அதற்குமுன்… அந்த வேற லெவல் பார்ட்டிக்கு சிங்கிளாக செல்ல அனுமதி இல்லை என்பதால் செய்தி சேகரிக்கும் நோக்குடன் நம்முடன் வர சம்மதித்த ஃப்ரண்ட் திவ்யாவுக்கும் (நல்ல தோழி) சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோம். இரண்டுபேருக்கு 2,000 ரூபாய். வி.ஐ.பி. புக்கிங் என்றால் ஐயாயிரம் ஓவாவாம். அடேங்கப்பா… இன்னும், கொஞ்சநேரம் தாமதித்திருந்தால்கூட டிக்கெட் ஃபுல் ஆகியிருக்கும்போல. அவசர அவசரமாக புக்கிங் செய்துவிட்டு இரவு 10:30 மணிக்கு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நீலாங்கரை அடுத்த வி.ஜி.பி. அம்யூஸ்மெண்ட் பார்க்கின் பின்புறத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஈசி-41 பார்ட்டி ஓப்பன் ஸ்பாட்டுக்குள் எண்ட்ரி ஆனோம்,… ஜோடியாக.
பைபிளில் வரும் கோலியாத், புராணத்தில் வரும் கடோத்கஜன் போல் ஹைட் அண்ட் வெயிட்டாக நிற்கிறார்கள் பவுன்சர்கள். சின்ன டவுட் வந்தாலும் பவுன்சர்களால் பஞ்சர் ஆக்கப்பட்டு தூக்கிவீசப்படுவோம் என்பதால் இயல்பான தொனியில் நாம் உள்ளே நுழைய… மொபைல் ஆப்’மூலம் பரிசோதித்துவிட்டு கையில் எண்ட்ரி பாஸ்க்கான "டேக்' கட்டி அனுப்புகிறார்கள். "பார்ட்டி முடியும்வரை கையில் கட்டப்பட்ட "டேக்'’ இருக்கவேண்டும்' என்று புன்னகையுடன் கட்டளையிடுகிறார்கள். கடலோரம் அமைக்கப்பட்டிருந்த மிக பிரம்ம்ம்ம்ம்மாண்டமான டிஜிட்டல் மேடை. கிக் ஏற்றும் மியூசிக். முக்கோண வடிவில் சினிமா ஸ்கிரீன்போல பேக் கிரவுண்டில் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் பள பளக்கும் காட்சிகள் என உற்சாகத்துடன் அந்த ஃபுல் மூன் பார்ட்டி ஸ்டார்ட் ஆனது.
பார்ட்டிக்கு ஜோடியாக வந்திருந்த பார்ட்டிகளில் தமிழ் பேசுபவர்கள் குறைவு. இங்கிலீஷிலும், பிரெஞ்சிலும் பீட்டர் விட்டவர்கள் அதிகம். ஆனாலும் தமிழக இளசுகளே இந்த பார்ட்டியின் டார்கெட்.
பார்ட்டி என்றாலே "பார்' என்பதுதானே தொடங்குகிறது. அங்கே மதுவகைகளுக்கு பஞ்சமில்லை. அதுவும், கண்களை எவ்வளவு ஸூம் பண்ணிப்பார்த்தாலும் நம் நாட்டு மது பானங்களை "பார்'க்கவே முடியவில்லை. எல்லாமே, வெளிநாட்டு பானங்கள்தான். விதவிதமான கண்ணாடிக் கோப்பைக்குள் மதுவை ஊற்றும் ஸ்டைலைப் பார்க்கும்போதே போதை ஏறுவதுபோல் இருந்தது. பலரும் டோக்கன் வாங்குகிறார்களே என்னவாக இருக்கும் என்று உற்றுப்பார்த்தால் ட்ரக்ஸ்’ வாங்கத்தான் இந்த டோக்கன் சிஸ்டம். (மது போதையைத் தாண்டி பல வகையான இன்டர்நேஷனல் லெவல் போதை பவுடர்கள் உண்டு). இங்கே, வாங்கும் போதை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என்ற கூடுதல் தகவல் நம்மை கிர்ர்ரடிக்கிறது.
டி.ஜே. (பார்ட்டியை இயக்கும் டிஸ்கோ ஜாக்கி) சாண்டி என்பவர் குதூகலப்படுத்திக்கொண்டே ரஜினியும் கமலும் நடித்த "நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வரும் "சிவ சம்போ' பாடலின் மிக்ஸிங் மியூசிக்கின் டிஜோ சவுண்டை அதிகரித்து ஸ்பீடைக் கூட்ட மதுக்கோப்பைகளுடன் ஆடிக்கொண்டிருந்த ஜோடிகளும் இன்னும் உற்சாகமாகி தங்களின் ஆட்டங்களின் வேகத்தைக்கூட்டுகிறார்கள். பவுன்சர்களின் கண்கள் வேறு சி.சி.டி.வி. கேமராவாய் மாறி நம்முன் சுழன்றுகொண்டிருக்க… வேறு வழியில்லாமல் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நாமும் ஆட்டத்தில் இறங்கி, வேகத்தை கூட்டவேண்டிய சூழல்.
ஆட்டத்தின்போது கொஞ்சம் கொஞ்சமாக மேலாடைகளும் கழட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கிருந்த ஜோடிகள் திடீரென்று ஆடை மாற்றுவதுபோல் ஆட்களையும் மாற்றிக்கொண்டதைப் பார்த்து, "அடப்பாவிங்களா? நாங்கதான் டூப்ளிகேட் கப்பிள்னா நீங்களுமாடா?' என்றபடி கவனத்துடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.
அப்போது, ""சாதாரண பார்ட்டிதான் வான்னு என்னைக் கூட்டிக்கிட்டு வந்தியே, இதுதானா அது?… உன்னை... வெளியில வா'' என்று நமது தோழி ஆடிக்கொண்டே கண்கள் சிவந்துபோய் கொந்தளித்ததை கண்டுகொள்ளாததுபோல் ஆடிக்கொண்டிருந்தோம் நாம்.
12 மணிவரை உற்சாகமாக ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தபோது சின்ன அமைதி. அட… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம் போல… என்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் திடீரென்று… முன்பைவிட மியூஸிக்கின் ஒலியும் வேகமும் இன்னும் வேகமெடுத்தன. ஆர்ப்பரித்து ஆனந்த சத்தத்துடன் வரவேற்கின்றன குத்தாட்ட போதை இளசுகள். அப்போது, புரிந்தது, இண்டர்நேஷனல் டி.ஜே. மஃபைஸா எண்ட்ரி ஆகிறார் என்பது! அதற்குப்பிறகு, அப்படியொரு உற்சாக போதை ஆட்டத்தை பார்த்ததே இல்லை. நிச்சயமாக… உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் போதைகளை ஏற்றிக்கொள்ளாமல் அப்படி உற்சாகத்துடன் நான் ஸ்டாப்பாக ஆடவே முடியாது. 3 மணி… 4 மணி… என விடிய விடிய போதை ஆட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. சூரிய ஒளிக்கற்றைகள் உள்ளே நுழைய கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது.
சிலர் கார்களில் ஏறி பறக்க சிலர் ஆட்டக்களைப்பில் ரிசாட்களில் தங்கிக்கொள்கிறார்கள். அத்தனையையும் நமது கண்கள் மட்டுமல்ல… நமது சீக்ரெட் வீடியோ கேமராவும் படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருந்தது. இத்தனை களேபரங்கள் நடந்துகொண்டிருக்க காவல்துறை ரோந்துவாகனங்கள்கூட வரவில்லை. இதுவே, அரசாங்க டாஸ்மாக்கில் குடித்துவிட்டு டூவீலரில் வந்தால் மடக்கி நிறுத்தி, ஊதச் சொல்லி காசு புடுங்குவார்கள்’என்று நமது தோழி டென்ஷனாக…இங்க நடக்குற போதை சமாச்சாரங்கள் எல்லாம் மேல்மட்டத்துலேயே முடிச்சிடுவாங்க. அதனால, சாதாரண போலீஸால் ஒண்ணும் பண்ணமுடியாது’என்றோம்.
யார் இந்த டி.ஜே. மஃபைஸா?
""இந்த மஃபைஸா… மூன்றாம் பாலினத்தவர். ஆப்பிரிக்காவில் பிறந்து இந்தியாவின் புனேவில் வசித்து வருகிறார். தனது மியூசிக் டி.ஜெ. மூலம் போதை ஏற்றுகிறவர். கோவாவில், இவர் நடத்திய பார்ட்டியில் வெளிநாட்டுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். இதனால், கோவா பக்கம் தலைகாட்டாதவர் திடீரென்று தமிழகத்திற்குள் அதுவும் தலைநகரத்துக்குள் எண்ட்ரி ஆகியிருக்கிறார். இவர் வேர்ல்டு லெவல் ஃபேமஸ் டி.ஜே. இவரோட பார்ட்டி கோவாவுலதான் அதிகமா நடக்கும். கோவாவுல நடக்குற பார்ட்டிக்கு டிக்கெட்டே கிடைக்காது. அதுக்குக் காரணம், இவரை ஆர்கனைஸ் பண்ற பார்ட்டியிலதான் இண்டர்நேஷனல் போதை அண்ட் விபச்சார நெட் ஒர்க் பிஸினஸ்ஸே நடக்கும். அந்த வருமானம் அதிகம் என்பதால் டிக்கெட் கட்டணம் இலவசம்.
இதுக்குப்பின்னால, பல நிழலுலக போதைப்பொருள் மாஃபியாக்கள் இருக்காங்க. போதைப்பொருட்கள், விபச்சாரம் ஒரு இடத்துல நடக்குதுன்னா அந்த இடத்துக்கு யாரும் போகமாட்டாங்க. ஆனா, இந்தமாதிரி பார்ட்டி… -அதுவும் வேர்ல்டு லெவல் டி.ஜே. வர்றாருன்னா ஹைலெவல் இளசுகள் ஈஸியா வருவாங்க. அங்க, அவங்களுக்கு தேவையான ஏ டூ இசட் விஷயங்களையும் கொட்டிக்கொடுத்து கோடிக்கணக்குல பிசினஸ் பண்றதுதான் இந்த பார்ட்டியோட டார்கெட். ‘
"வீட்'’எனப்படும் கோந்துமாதிரியான கஞ்சாதான் இந்த பார்ட்டி ஸ்பெஷல். இந்த மாதிரியான கஞ்சா அவ்வளவு ஈஸியா கிடைச்சுடாது. இந்த மாதிரி, ஒவ்வொரு பார்ட்டியிலேயும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். டி.ஜே.வையும் அவரைச் சேர்ந்தவர்களையும் விசாரிச்சாலே இண்டர்நேஷனல் கடத்தல்காரர்கள், போதை வியாபாரிகள், விபச்சார புரோக்கர்கள் எல்லோரும் சிக்குவாங்க'' என்று ஷாக் கொடுக்கிறார்கள்.
பலவித இன்டர்நேஷனல் போதை அயிட்டங்களுடன் தமிழகத்தை அதுவும் சென்னையை குறிவைத்துள்ள இந்த டீம் பற்றி தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரியின் கவனத்துக்குக்கொண்டு சென்றபோது, “""விரைவில் விசாரிக்கிறேன்'' என்றார் உறுதியாக.
அடுத்த பார்ட்டி ஜூலை 14 சனி இரவு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர். சாலையை நோக்கிச்செல்லும் இளசுகளை தடுக்கும் வகையில், அதற்குள்ளாக நடவடிக்கை எடுக்குமா "ஸ்காட்லாண்டு யார்டு'க்கு நிகரான தமிழக காவல்துறை?
-அரவிந்த்