நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவொற்றியூரில் தனியார் மண்டபத் தில் கடந்த 27 டிசம்பர் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக் மற்றும் சாட்டை துரைமுருகன் பேச்சு கட்சி நிர்வாகிகளைக் கவர்ந்தது.
இடும்பாவனம் கார்த்திக் பேசியபோது, "இயற்கை வளத்தை பாதுகாத்தல், தூய்மையான காற்று, குடிநீர், விவசாயம் மற்றும் கட்சியின் கட்டமைப்பை பற்றி பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய சாட்டை துரைமுருகன், "எல்லா பகுதியிலும் நம் வெற்றியை உறுதிப் படுத்துவோம். எல்லா வாக்குச் சாவடியிலும் வெற்றியை உறுதிப்படுத்துவோம். மற்றபடி அணில் குஞ்சுகளைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வாக்குச்சாவடியின் அருகே சாட்டை அணில் 65 என்ற கடையை போடுவேன், அதை சாப்பிட்டுவிட்டு தெம்புடன் தேர்தல் வேலை பாருங்கள்'' என்ற பேச்சால் கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது.
இறுதியாகப் பேசிய சீமான், "ரத்தம் சிந்தாத அரசியல் போர் இந்த போர்'' என்று துவக்கினார். "தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் "தமிழ்நாடு' என்ற பெயரை அழித்துவிட்டு தமிழ்நாட்டை மறைக்கப் பார்க்கிறார்கள். இரண்டே இரண்டு போட்டி தான். ஒன்று திராவிட திருட்டு சித்தாந்தம், மற்றொன்று தமிழ் தேசிய சித்தாந்தம். இருவருக் கும்தான் இந்த தேர்தல் போர். ஹிந்தி நான் அல்ல, திராவிடன் நான் அல்ல, நான்தான் தமிழன். நடக்கப்போகும் போர் இந்திய திராவிடனுக்கும் தமிழனுக்கு மான போர்.. சில்லறையையும், சினிமாவையும் வைத்து உரு வான சித்தாந் தத்தை வீழ்த்த முடிய வில்லையென்றால் நாம் போராளியா? தனித்து நின்று, ஒரு வாரத்தில் சின்னம் பெற்று தமிழகத்தில் நடந்த தேர்தலில் மூன்றாவது இடம் பிடித்து, அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி. மும்மொழிக் கொள்கை ஒரு பக்கம், ஒரு மொழிக் கொள்கை தமிழ் இதற்குத்தான் போட்டி. இலவசம், இலவசம்... மிக்ஸி, கிரைண்டர் இந்த பக்கம் டி.வி., இந்த பக்கம் மடிக்கணினி. என் தம்பி ஒரு படி மேல உந்துருளி மோட்டார் பைக், கார். அப்போ நம்ம வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்! கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம். அப்போது அவனே மோட்டார் பைக், கார், மடிக்கணினி, சொந்த வீடு, மசாலா அரைக்க மிஷின் கூட அவனே வாங்கிக் கொள்வான்.
இந்த கூட்டத்தின் நோக்கமே வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு பற்றி தெரி விக்கத்தான். நம் இனத்தின் திருவிழா எல்லோரும் கூடவேண்டும். மாநாட்டுக்கு அண்ணன் மூன்று பக்க கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை உங்கள் உறவினர்களிடம் சென்று பத்திரிகை வைப்பது போல கொடுத்து அழைத்து வாருங்கள். தட்சணையாக நூற்றி ஒரு ரூபாய் வைத்து, அல்லது காலில் விழுந்துகூட அழைத்து வாருங் கள். ஒருமுறை நம் மாநாட்டை, மாநாடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும். கட்டுப் பாடு என்றால் என்ன என்பதை தெரிந்துகொள் ளட்டும்'' என்று மறைமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சாடினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/seeman-2025-12-29-16-18-12.jpg)