2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.5. தமிழ்நாட்டின் ஜி.டி.பி. 11.19. இதன் பொருள் தமிழ்நாட்டின் பொருளாதார சதவிகிதம் கிட்டத்தட்ட இந்தியாவின் பொருளாதார சதவிகிதத்தைவிட இரண்டு மடங்காக இருக்கிறது என்பதாகும்.
இந்தப் புள்ளி விவரம் மத்திய அரசே வெளி யிட்டது. எனவே அரசியலுக்காக உயர்த்திக்கூறப் பட்டுள்ளது எனச் சொல்ல வழியில்லை. ஆந்திரா வும் தெலுங்கானாவும் 8 சதவிகித வளர்ச்சியுடன் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன. இதனோடு வேறொன்றையும் இணைத்துச்சொன் னால் புரியும். பாகிஸ்தானின் ஜி.டி.பி. 338 பில்லி யன் டாலர்கள். மாறாக தமிழ்நாட்டின் ஜி.டி.பி. யோ 329 பில்லியன் டாலர்கள். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, நமது அண்டை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கமாக உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் இரட்டை இலக்க ஜி.டி.பி.யைக் கொண்ட ஒரே மாநிலம். தமிழகத்தின் பொருளாதாரம் மட்டும் எப்படி மிகவேகமாக வளர்கிறது? தமிழ்நாடு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப் பிடித்தபோதும் பொருளாதார வளர்ச்சியில் அசாதாரண வளர்ச்சியை எப்படி எட்டமுடிந்தது? இரட்டை என்ஜின்கள் இயங்கும் மாநிலங்களை விட, ஒரு ஒற்றை என்ஜின் இயங்கும் மாநிலம் பொருளாதாரத்தில் முதலிடம் வந்ததெப்படி?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேவைத் துறை, கட்டுமானம், ஆட்டோமொபைல் என பல துறைகள் காரணமாக இருக்கின்றன. உற்பத்தித் துறையில் தமிழகம் வலுவாகத் திகழ்கிறது. 2023-24-ல் தமிழகம் 12.6% வளர்ச்சியடைந்தது. இந்த 2024-25-லோ 14.7% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. கட்டுமானத் துறையில் ஒட்டு மொத்தமாக 11.6 சதவிகிதமாகவும், தொழில் துறையுடன் கட்டுமானத்தையும் சேர்த்தால் 13.4% வளர்ச்சிகண்டுள்ளது. சேவைத்துறையின் வளர்ச்சி இந்த ஆண்டு 11.3%. ரியல் எஸ்டேட் துறை 7.33 சதவிகிதத்திலிருந்து 12.42 சதவிகிதமாக வளர்ந்துள்ளது.
சுற்றுலா, சுகாதாரத்துறை, பொதுநிர்வாகம் இவையனைத்துமாகச் சேர்ந்துதான் தமிழ்நாட்டை இந்தியாவிலே முதல் மாநிலமாக உயர்த்தியிருக் கின்றன. தொடக்கம் முதலே ஆட்டோமொபைல் துறையில், கார் நிறுவனங்களுக்கு வேண்டிய வசதி கள் சலுகைகளை தமிழக அரசுகள் செய்துதந்தன. இவை தவிர டெக்ஸ்டைல்ஸ், லெதர், லெதர் புராடக்ட்ஸ், ஆப்டிகல், ஆயத்த ஆடைகள் உற்பத்தியிலும் தமிழகம் முன்னணி வகிக்கின்றது. தலைநகர் சென்னை மட்டுமல்லாது ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, சேலம் போன்ற பிற நகரங்களும் தொழிலில் வளர்ந்துவருகின்றன. உள்கட்டுமானத்தில் பெரும் முதலீடு காரணமாக, தொழில்துறை மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் சிறப்பான சாலைகளின் மூலம் உடனுக்குடன் எடுத்துச்செல்லப்படுகின்றன.
இவையெல்லாவற்றையும் விட காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர். முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்விக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ஊக்கமும் சலுகைகளும்தான் இந்தியாவிலே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.
-சூர்யன்