ஒன்றிய அரசு வக்ஃப் போர்டு வாரியத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் சட்டம் பாராளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில், தமிழகத்தின் வக்ஃப் போர்டு விவாதத்திற்குள்ளாகியுள்ளது. தமிழகத்தின் வக்ஃப் போர்டு தலைவராக இருந்த அப்துல்ரகு மான் மாற்றப்பட்டுள்ளார். யார் அடுத்த தலைவராக வருவார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த அப்துல் ரகுமான் 2009ஆம் ஆண்டு வேலூர் பாராளு மன்றத்தில் எம்.பி.யாக இருந்தவர். முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த துபாய் பிஸினஸ்மேனான இவர், மிகுந்த செல்வந்தர். முஸ்லிம் லீக் தலைவ ரான காதர் மொய்தீனின் சிபாரிசால் இவர் வக்ஃப் போர்டு தலைவராக நியமிக்கப்பட் டார். இவர் இந்த பதவிக்கு வந்ததிலிருந்தே இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு களை எதிர்த் தரப்பு எழுப்பி வந்தது. துபாயைச் சேர்ந்த வங்கியில் பொறுப்பிலிருந்த அப்துல் ரகுமான், தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக
ஒன்றிய அரசு வக்ஃப் போர்டு வாரியத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் சட்டம் பாராளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில், தமிழகத்தின் வக்ஃப் போர்டு விவாதத்திற்குள்ளாகியுள்ளது. தமிழகத்தின் வக்ஃப் போர்டு தலைவராக இருந்த அப்துல்ரகு மான் மாற்றப்பட்டுள்ளார். யார் அடுத்த தலைவராக வருவார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த அப்துல் ரகுமான் 2009ஆம் ஆண்டு வேலூர் பாராளு மன்றத்தில் எம்.பி.யாக இருந்தவர். முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த துபாய் பிஸினஸ்மேனான இவர், மிகுந்த செல்வந்தர். முஸ்லிம் லீக் தலைவ ரான காதர் மொய்தீனின் சிபாரிசால் இவர் வக்ஃப் போர்டு தலைவராக நியமிக்கப்பட் டார். இவர் இந்த பதவிக்கு வந்ததிலிருந்தே இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு களை எதிர்த் தரப்பு எழுப்பி வந்தது. துபாயைச் சேர்ந்த வங்கியில் பொறுப்பிலிருந்த அப்துல் ரகுமான், தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களை நிர்வாகம் செய்துவந்தார். ஒரு முஸ்லிம் தனது சொத்துக்களை தனிப் பட்ட டிரஸ்ட் மூலம் நிர்வாகம் செய்யும் நேரத்தில் அந்த சொத்துக்களை வக்ஃப் போர்டுக்கு எழுதி வைக்கலாம்.
வக்ஃபு போர்டு அந்த சொத்துக்களை பராமரிக்கும். அந்த சொத்துக்களை முஸ்லிம் அல்லாதவர்கள் கைவைக்க முடியாது. அந்த சொத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. அந்த வேலைகளை வக்ஃபு வாரியம் பார்த்துக் கொள்ளும். சென்னையில் திருவல்லிக் கேணி பகுதியில் 20 ஏக்கர் நிலம் அருணா கார்டன் என்கிற பெயரில் இருந்தது. ஒரு கிரவுண்டே பல கோடிக் கணக்கில் விலை போகும் திருவல்லிக்கேணியில் ஏக்கர் கணக்கிலான வக்ஃபு போர்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இஸ்லா மியர் நிலத்தை இஸ்லா மியர் அல்லாத ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்.
அதை 2009ஆம் ஆண்டு வக்ஃப் போர்டு மீட்டது. அது பெரிய அளவில் செய்தியாகியது. இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லா மியர் சொத்துக்களில் அந்த சொத்து யாருக்கு சொந்தம் என வக்ஃபு போர்டு முடிவு செய்யும். இதில் யாருக்கு சொந்தமென வக்ஃப் போர்டு முடிவு செய்கிறதோ அதை எதிர்த்து இன்னொரு குழு வக்ஃப் வாரியத்தை எதிர்த்து குரல் எழுப்பும். இப்படி தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்கள் பற்றி ஏகப்பட்ட விவாதம் வக்ஃப் வாரியத்திற்கு எதிராக எழுவது வழக்கம். சமீபத்தில், பராளுமன்றத்தில் வக்ஃப் வாரியம் தொடர்பான சட்டத் திருத்தங்களை மோடி அரசு கொண்டுவந்தபோது, தமிழகத்தில் ஒரு இந்து கோயில் அமைந்துள்ள ஒட்டுமொத்த கிராமமே முஸ்லிம்களின் வக்ஃப் வாரிய சொத்து என பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இப்படி அப்துல்ரகுமான் தலைமையிலான வக்ஃப் வாரியத்திற்கு எதிராக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அப்துல்ரகுமான் என்கிற முஸ்லிம் லீக் தலைவரிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அப்துல்ரகுமானுக்கு எதிராக முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமான வர்கள். தற்பொழுது அமைச்சரவை மாற்றம் நடைபெறப்போகிறது. செஞ்சி மஸ்தான் அமைச்சரவைப் பணிகளை சரியாகக் கவனிப்பதில்லை என முதல்வர் ஸ்டாலினே ஒரு கூட்டத்தில் செஞ்சி மஸ்தான் மீது குற்றம்சுமத்தி னார். அவர் அமைச்சரவையிலிருந்து கழற்றிவிடப்படக்கூடும் என செய்திகள் உலாவருகிறது.
பெருமளவு புகார்கள் எழும் இந்த வக்ஃப் வாரிய தலைவர் பதவிக்கு ஒருவர் வந்தால் அத்துடன் அவரது அரசியல் முடிவுக்கு வந்துவிடும்.
ஓய்வு பெற்றவர்களின் பதவியாக கருதப்படும் இந்த வக்ஃப் போர்டுக்கு செஞ்சி மஸ்தான் நியமிக்கப்படுவார். அவருக்குப் பதிலாக ஆவடி நாசர் அமைச்சராக இடம் பெறு வார் என செய்திகள் வெளிவந்துகொண்டிருக் கிறது. இந்த சூழலில், மத்திய அரசு வக்ஃப் வாரி யத்தை சீரமைக்க வேண்டும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்க வேண்டுமென அந்த வக்ஃப் வாரிய சட்டதிருத்த மசோதாவில் சொல் லப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அந்த மசோதா வை எதிர்க்கும் தி.மு.க. ஆட்சி செய்யும் மாநி லத்தில் வக்ஃப் வாரியத்தில் முறைகேடு, வக்பு வாரிய தலைவர் மாற்றம் என வரும் செய்திகள் ஆரோக்கியமான விசயமாக இல்லை என்கிற குரல் தி.மு.க. வட்டாரங்களிலேயே கேட்கிறது.
வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது ஒரு குரூப் புகார் தெரிவிப்பது உண்மைதான். பல லட்சம் கோடி மதிப்புள்ள இஸலாமியர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் வாரிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த செஞ்சி மஸ்தானை நியமித்தால் எப்பொழுதும் புகார் எழும் அந்த பதவியின் மீது வரும் விமர்சனங்கள் தி.மு.க. மீது பாயும். எனவே செஞ்சி மஸ்தானை வக்ஃப் வாரியத் தலைவர் ஆக்கமாட்டோம். அதற்கு பதில் முஸ்லிம் சொத்துக்களை நிர்வகிக்க முஸ்லிம் ஒருவரையே முஸ்லிம் லீக் பரிந்துரையோடு நியமிக்கலாம் என தி.மு.க. வட்டாரங்கள் ஆலோசனை செய்து வருகிறது.
வக்ஃப் வாரிய பஞ்சாயத்து பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது பா.ஜ.க.வின் இஸ்லாமிய விரோத பிரச் சாரத்திற்கு காரணியாகிவிடக்கூடாது என தி.மு.க. மேலிடம் கவலைப்படுகிறது.