Advertisment

ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் திமிரை அடக்கிய தமிழகம்!

rbistaff

மிழ்த்தாய் வாழ்த் துப் பாடலை அவமானப் படுத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளைக் கண்டித்து நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களால் அதிர்ந்து போனது ரிசர்வ் வங்கி. அவசரம் அவசரமாக ஓடோடி வந்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல்தியாகராஜனிடம் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி இயக்குநர்.

Advertisment

இந்திய குடியரசு தினவிழாவை கடந்த 26-ந்தேதி கொண்டாடியது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் அவமானப்படுத்தி யிருக்கிறார்கள்.

Advertisment

rbistaff

நிகழ்ச்சி முடிந்ததும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘’"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமென்கிற அவசிய மில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் திருக்கிறது''‘என்று திமிராக பதிலளித்திருக்கிறார்கள் அதிகாரிகள். "அந்த உத்தரவை காட்டுங்கள்'' என கேட்டபோது, அதற்கு பதிலளிக்

மிழ்த்தாய் வாழ்த் துப் பாடலை அவமானப் படுத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளைக் கண்டித்து நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களால் அதிர்ந்து போனது ரிசர்வ் வங்கி. அவசரம் அவசரமாக ஓடோடி வந்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல்தியாகராஜனிடம் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி இயக்குநர்.

Advertisment

இந்திய குடியரசு தினவிழாவை கடந்த 26-ந்தேதி கொண்டாடியது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் அவமானப்படுத்தி யிருக்கிறார்கள்.

Advertisment

rbistaff

நிகழ்ச்சி முடிந்ததும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘’"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமென்கிற அவசிய மில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் திருக்கிறது''‘என்று திமிராக பதிலளித்திருக்கிறார்கள் அதிகாரிகள். "அந்த உத்தரவை காட்டுங்கள்'' என கேட்டபோது, அதற்கு பதிலளிக்காமல் தெனா வெட்டாக நடந்து கொண்ட னர். இதனால் அதி காரிகளுக்கும் தமிழர்களுக்கு மிடையே வாக்குவாதங்கள் சூடு பிடித்தன. ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள் அதிகாரிகள்.

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமானப்படுத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த திமிர்ப் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியது. இதுகுறித்து உடனடி கருத்து தெரிவித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘’தமிழக அரசின் அரசாணையைக்கூட படித்து தெரிந்து கொள்ள முடியாதவர்கள் அதிகாரிகளாக எப்படி பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள், தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? ‘’ என்று மிக காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் என பலரும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை கண்டித்தனர். தி.க. வீரமணி, பா.ம.க. டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

rbistaff

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.

ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்ட அந்த முற்றுகைப் போராட்டத்தில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எதிரொலித்தன. போராட்டத்தில் கலந்துகொண்டு ஆவேசமாக முழக்கமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் நாம் பேசியபோது,”"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் பாடலாக தற்போதைய தி.மு.க. அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்திருக்கிறது. அந்த அரசாணையின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் -கர்ப்பிணிகளைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

அப்படியிருந்தும் குடியரசு தின விழாவில் ஒலித்த தமிழ்த் தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்தாமல் அவமானப்படுத்தி யிருக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் திமிரை அடக்க வேண்டாமா? அரசாணையை மதிக்கத் தெரியாத அதிகாரிகளின் செயல் மன்னிக்கக்கூடியதல்ல; தண்டிக்கக் கூடியது!

தமிழகத்தில் உட்கார்ந்துகொண்டு தமிழுக்கு எதிராகவே இந்த அதிகாரிகள் நடந்து கொள்வார்கள். நாமும் சும்மா பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா? அந்த அதிகாரிகளுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம். புகார் மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களை நாங்கள் சிறைபிடிக்க வேண்டியதிருக்கும்.

rbistaff

தமிழர்களின் வரிப்பணத்தில் உயிர் வாழும் அந்த அதிகாரிகளின் செயல்கள் ஆணவத்தின் உச்சம். தமிழர்களிடமும் தமிழக அரசிடமும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் எங்களின் போராட்டத்தின் வடிவம் மாறும்'' என்றார் மிக ஆவேசமாக.

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய போராட்டங்களும் கண்டனங்களும் வலுத்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காதது ஏன்? என்று விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. இதற்கிடையே, இந்த கண்டனங்கள் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகத் திற்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த நிலையில், சென்னை ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது? ஏன், தேவையற்ற இந்த சர்ச்சைகள்? என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸிடம் கேள்வி கேட்ட ஒன்றிய நிதியமைச்சகம், தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்க சென்னை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்; இந்த பிரச்சினை வளரக்கூடாது என்றும் சக்தி காந்ததாஸுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சென்னை ரிசர்வ் வங்கி இயக்குநர் எஸ்.எம். என்.சாமியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சக்தி காந்ததாஸ். உடனே தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னை சந்தித்து வருத்தம் தெரிவித்த துடன், "இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது' என்றும் உறுதியளித்திருக்கிறார் எஸ்.எம். என்.சாமி.

தமிழர்களின் ஆவேசம் தமிழின விரோதிகளின் திமிரை அடக்கியிருக்கிறது.

nkn020222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe