துரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வந்திறங்கிய முதல்வர், 1805.28 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணி களை தொடங்கிவைத்தவர், அடுத்ததாக, தி.மு.க.வின் தென்மண்டல பாக முகவர் கள் மாநாட்டில் கலந்து கொண்டார். தி.மு.க. தென் மண்டல பாகமுகவர்கள் மாநாட்டில் பேசிய முதல் வர், "சட்டமன்றத் தேர் தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு நான் உட்பட யாருக்கும் நோ ரெஸ்ட். அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். எந்த அச்சுறுத்த லுக்கும் பயப்படாதீர்கள்'' என்றார்.

Advertisment

அன்று மாலை நடிகர் கமல்ஹாசன் பண் பாட்டு மையம் சார்பாக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "மறவோம்' நிகழ்ச்சியில், தி.மு.க. கூட்டணிக்கட்சித் தலைவர்களான முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹி ருல்லா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

Advertisment

kamal1

தி.மு.க.வின் பாகமுகவர்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு கமலின் நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர்... நேரமின்மையால் முதல் நபராக மைக்கை பிடித்தவர், "காந்தியின் வாழ்க்கையில், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மதுரை மண்ணில் "மறவோம்'’என்ற நிகழ்ச்சியை கமல் ஏற்பாடு செய்திருக் கிறார். காந்தியைப் பின்பற்றி அரசியல் களத்துக்கு வந்தவர் தந்தை பெரியார். காந்தி யடிகளுடன் பல விஷ யங்களில் முரண்படவும் செய்தார். ஆனால், காந்தியடிகள் ஒரு பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப் பட்டபோது தந்தை பெரியார்தான், "இந்திய நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்ட வேண்டும்' என்று உணர்ச்சிபொங்கப் பேசினார். காந்தி யடிகளை மக்களுடைய மனதிலிருந்து எப்படியாவது அகற்றிட பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு எடுத்துக் காட்டுதான், நூறுநாள் வேலை திட்டத்திலிருந்து, காந்தியடிகளின் பெயரை நீக்கியது. அடுத்து, கரன்சி நோட்டிலிருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள். பா.ஜ.க.வின் பிடியில் தமிழ்நாடு சிக்கக்கூடாது'' என்றார்.

முதல்வர் பேசிய பின்னர் தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் பேசினார்கள். இறுதியாகப் பேசிய கமல், "நான் இப்போது இந்தியாவில் காணும் இந்த பிரிவினையை என்னுடைய சாதியிலும்  கண்டேன். அதிலிருந்து மேம்பட வேண்டும் என்று புறப்பட்ட பையன் நேராக போய் சேர்ந்தது பெரியார் திடல். பெரியார், காந்தியிடமிருந்துதான் வந்திருக்கிறார், முரண்பட்டு வந்திருக்கிறார். முரண்படுவது கடமை, காந்தி ஒரு மனிதர் என்னும் காலகட்டம் கடந்துவிட்டது. காந்தி இஸ் ஐடியாலஜி'' என்றார். 

Advertisment

தமிழ்நாட்டில் காந்தியின் புகழ்பாட அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பது பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.