Advertisment

சிறைபிடிக்கப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள்!  -கொதிக்கும் நிர்வாகிகள்!

ominibust


டந்த நவம்பர் 7-ஆம் தேதி கேரளா மாநிலம் வாளையார் சோதனைச்சாவடி எல்லை யில், தமிழகத்திலிருந்து சென்ற 30 ஆம்னி பேருந்து களை அம்மாநில போக்குவரத்துத் துறையினர் சிறைபிடித்து பின் ரூபாய் 70 லட்சம்வரை அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியது.  கர்நாடக மாநிலத்திலும் கடந்த ஏழு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு 1 கோடியே 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ள னர். இந்த நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள்


டந்த நவம்பர் 7-ஆம் தேதி கேரளா மாநிலம் வாளையார் சோதனைச்சாவடி எல்லை யில், தமிழகத்திலிருந்து சென்ற 30 ஆம்னி பேருந்து களை அம்மாநில போக்குவரத்துத் துறையினர் சிறைபிடித்து பின் ரூபாய் 70 லட்சம்வரை அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியது.  கர்நாடக மாநிலத்திலும் கடந்த ஏழு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு 1 கோடியே 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ள னர். இந்த நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகளின் நல சங்கங்கள் அறிவித்தன.

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி ஆம்னி பேருந்து உரி மையாளர்கள் சங்கத் தலைவர் மதன், "தமிழகத்துக்குள்ளேயே இயக்கப்படும் ஆம்னி பேருந்து களுக்கு காலாண்டிற்கு... அதாவது 90 நாட்களுக்கு 1,50,000  ரூபாய் வரி வசூலிக் கப்படுகிறது. அதுவே வெளி மாநிலம் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு அந்த மாநிலத்துக்குள் அனுமதிக்க சாலை வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. சில நடைமுறைச் சிக்கல் இருந்ததால் மத்திய அரசு அனைத்திந்திய சுற்றுலா அனுமதி எனப்படும் ஏ.ஐ.டி.பி. வரியை அமல்படுத்தியது. அதன்படி வெளிமாநிலம் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு 90 நாட்களுக்கு 90,000 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்தவேண்டும். இதில் சாலை வரியை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும். இதற்கு ஆரம் பத்திலிருந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி ஆம்னி பேருந்து களுக்கே மிகவும் சிக்கல். அவர்கள் 30 கிலோ மீட்டர் தாண்டினாலே அடுத்த மாநிலமாகி விடும்''’என்றார்.

Advertisment

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து கள் நலச்சங்க தலைவர் அன்பழகனைத் தொடர்பு கொண்டோம். "மத்திய அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு அனைத்திந்திய சுற்றுலா அனுமதி என்ற வரி திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி தமி ழகத்துக்கு உள்ளே வரும் ஆம்னி பேருந்துகளிட மிருந்து மத்திய அரசு கடந்த மாதம் வரை வரி வசூலித்து பிரித்துக் கொடுத்துள்ளது. அதையும் பெற்றுக்கொண்டு, வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் ஆம்னி பேருந்துகளிடம் தமிழக அரசு காலாண்டுக்கு 1,50,000 ரூபாய் வசூலிக்கிறது. வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் இதுகுறித்து அம் மாநில போக்குவரத்து கழகத் திடம் புகார் தெரிவித்திருந்தனர். அதன் எதிரொலியே தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரள, கர்நாடகத்தில் அபராதம்'' என்றார்.

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் சென்னையில் போக்குவரத்துத் துறை கமி ஷனர் கெஜலட்சுமி, போக்குவரத்துதுறை அமைச் சர் சிவசங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின் பும் தீர்வு ஏற்படவில்லை. முதல்வரிடம் ஆலோ சித்துவிட்டு விரைவில் நல்ல தீர்வு சொல்வதாக அமைச்சர் ஆம்னி பேருந்து சங்கங்களிடம் தெரிவித்திருக்கிறார்.                 

nkn151125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe