றைந்த மக்கள் திலகம், நடிகர் எம்.ஜி.ஆரோடு அரசியலில் பயணித்து திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞரோடு அரசியலில் இணைந்து முதல்வர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கையை யும் பெற்றவர்தான் சீனியர் அமைச்சர் சு.முத்துச்சாமி.

Advertisment

வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற அமைச்சராக இருந்த முத்துச்சாமி, செந்தில்பாலாஜி விவகாரத்தால் தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சகத்தின் பொறுப்புகளையும் கூடுத லாகக் கவனித்துவருகிறார். பல்வேறு பணி நெருக்குதலுக்கு இடையே அவரது வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மாவட்டம் தாண்டியும் பேசுபொருளாயிருக்கிறது.

Advertisment

dd

அப்படி பேசும்படி அவர் என்ன செய்தார் என்கிறீர்களா?

அமைச்சர் முத்துசாமிக்கு ஒரு மகன். அவர் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். இந்த நிலையில் சென்ற ஜூலை 6-ஆம் தேதி தனது இரண்டு மகள்களுக்கு அவர் ஈரோட் டில் திருமணம் நடத்தினார்.

1996-வாக்கில் அ.தி.மு.க. அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக முத்துசாமி இருந்தபோது, "அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை தந்தையாக இருந்து வளர்க் கிறேன்' எனக்கூறி சட்டப்படி தத்தெடுத்தார். அந்தக் குழந்தை களை வளர்த்து, அவர்களுக்கு கல்வி கொடுத்து, அவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தனது சொந்தத்திலேயே இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்து, அந்த மகள்களின் திருமணத்தை சீரும் சிறப்புமாக ஈரோட்டில் நடத்தி ஒரு அன்புப் புரட்சியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.

Advertisment

மகள் சுருதிக்கு, பூரண கிஷோர் என்ற மாப்பிள்ளை யையும், மகள் சௌமியாவுக்கு கார்த்திக் என்ற மாப்பிள்ளையையும் முறைப்படி பார்த்து, இரண்டு இணையர்களையும் உறுதிசெய்து திருமணம் நடை பெற்றது, .

இந்த திருமணத்திற்கு மாவட்டத்திலுள்ள தி.மு.க. வினர் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள், நண்பர் கள் என பலரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார் கள்.

இரண்டு மகள்களுக்கும் தனது சமூகத்தின் பாரம்பரிய வழக் கப்படியே திருமணத்தை நடத்தியதோடு அவர் களுக்கான தாய் வீட்டுச் சீதனத்தையும், செய்து திரு மணத்தை சிறப்புற நடத்தி யிருக்கிறார்.

"அமைச்சர் முத்துச் சாமியைப் போல பரந்துவிரிந்த உள்ளத்துடன், மக்கள் பணி செய்யும் ஒவ்வொருவரும் அமைந்துவிட்டால் தமி ழகத்தில் ஒருவரும் ஆதர வற்றவர்களாக உணரமாட் டார்கள்' என திருமணத்தில் பலரும் பேசிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.