தேர்தல் களத்தில் தோல்வியே காணாமல் 13 முறை வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் சென்றவர் கலைஞர். அந்த சட்டமன்றத்திற்கு நூற்றாண்டு கொண்டாடப்படும்போது அவர் இல்லை என்ற குறை தெரியாதபடி, இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரின் கரங்களால் கலைஞரின் படத்தை திறந்து வைத்து, சட்டமன்றத்தில் அவரை நிரந்தரமாக நிலைபெறச் செய்து புகழ் வணக்கம் செலுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆகஸ்ட் 2-ஆம் நாள் கலைஞரின் படத்தைத் திறந்துவைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பேருரையில், "இந்திய வரலாற்றில் கலைஞர் அவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார்'' என்று கலைஞருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் தனது உரையில், "ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்துக்கு உண்டு'' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை பாராட்டினார்.
படத்திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "மக்களின் முதலமைச்சர் என்று பாராட்டும் வகையில் செயல்பட்டு, பல்வேறு மாநில முதலமைச் சர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கலைஞர்'' என்று கலைஞரைப் பாராட்டினார். இவ்விழாவில் முன்னிலை வகித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையிலான தி.மு.க. நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைகளையும் நினைவுகூர்ந்து, "முதலமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி. கலைஞ ரின் மகன் என்ற முறையில் நெகிழ்ச்சி'' என்றார். பேரவைத் தலைவர் அப்பாவு தனது வரவேற்புரை யிலும் தமிழ்நாடு சட்டமன்றத்த
தேர்தல் களத்தில் தோல்வியே காணாமல் 13 முறை வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் சென்றவர் கலைஞர். அந்த சட்டமன்றத்திற்கு நூற்றாண்டு கொண்டாடப்படும்போது அவர் இல்லை என்ற குறை தெரியாதபடி, இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரின் கரங்களால் கலைஞரின் படத்தை திறந்து வைத்து, சட்டமன்றத்தில் அவரை நிரந்தரமாக நிலைபெறச் செய்து புகழ் வணக்கம் செலுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆகஸ்ட் 2-ஆம் நாள் கலைஞரின் படத்தைத் திறந்துவைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பேருரையில், "இந்திய வரலாற்றில் கலைஞர் அவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார்'' என்று கலைஞருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் தனது உரையில், "ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்துக்கு உண்டு'' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை பாராட்டினார்.
படத்திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "மக்களின் முதலமைச்சர் என்று பாராட்டும் வகையில் செயல்பட்டு, பல்வேறு மாநில முதலமைச் சர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கலைஞர்'' என்று கலைஞரைப் பாராட்டினார். இவ்விழாவில் முன்னிலை வகித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையிலான தி.மு.க. நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைகளையும் நினைவுகூர்ந்து, "முதலமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி. கலைஞ ரின் மகன் என்ற முறையில் நெகிழ்ச்சி'' என்றார். பேரவைத் தலைவர் அப்பாவு தனது வரவேற்புரை யிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பெருமைகளை யும் கலைஞரின் சாதனைகளையும் சொன்னார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சட்டமன்றத்திற் கானத் தேர்தலையடுத்து, சென்னை மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி அமைந்தது. அதன் முதல் சட்டமன்றத்தை 12-1-1921 அன்று அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் தொடங்கி வைத்தார். அதற்குத்தான் 2021-ல் நூற்றாண்டு விழா எடுத்தது, நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்று ஆளுநர் உரையின்போது அறிவித்ததது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க அரசு. இந்த நூற்றாண்டு கணக்கை ஏற்காமலும், ஜெயலலிதா படத்திறப்பில் தி.மு.க பங்கேற்காததால் கலைஞர் படத்திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் முடிவையும் எடுத்தது அ.தி.மு.க.
காழ்ப்பு அரசியல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குப் புதிதல்ல. நூறாண்டுக்கு முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் கடந்துதான் நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு, மகளிருக்கு வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, இந்து அறநிலையச் சட்டம் உள்ளிட்ட பல முன்னோடி சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலான 1957-ம் ஆண்டு தேர்தலில் வென்று, முதன் முறையாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காலடிவைத்த கலைஞர், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஒரு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக வும் இருந்துள்ளார். 5 முறை முதல்வர் பதவியை அலங்கரித்து, 19 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகம் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. அதிக ஆண்டுகள் இருந்தபோதும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க., தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் முதன்முறை யாக 1967, மார்ச் 6-ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அறிஞர் அண்ணாவின் ஆட்சியில், மதராஸ் ஸ்டேட் என்றிருந்த பெயரை, தமிழ்நாடு என்று மாற்றியதும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதும், இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கியதும் மிக முக்கியமான வையாகும். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், கலைஞரின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. கலைஞரின் ஆட்சியில், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களும் முக்கி யத்துவம் வாய்ந்தவை. மாநிலங்களின் உரிமைக் காகக் குரல் கொடுப்பதில் தமிழ்நாடு என்றும் முன்னணியில் நிற்கும் என்பதை வெளிப்படுத் தும்விதமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில், 1974, ஏப்ரல் 16-ம் தேதி, மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் கலைஞர். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றும் வழக்கத்தை மாற்றியமைத்து, சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும், குடியரசு தினத்தில் ஆளுநர்களும் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் கவுரவப்படுத்தியவர் கலைஞர்.
குடிசைவாழ் ஏழை எளியோரின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். மனிதர்களை அமர வைத்து மனிதர்களே இழுத்துச்செல்லும் கைரிக்ஷா முறையை ஒழித்து, அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷாவை அளித்தார். பின்னர், சைக்கிள் ரிக்ஷா வை மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷாவாக மாற்றி, ரிக்ஷா தொழிலாளர்களின் துயர் துடைத்தார். 1970-ம் ஆண்டில், மே தினத்தை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்தார்.
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு சமபங்கு சொத்துரிமையை 1989-ம் ஆண்டு சட்டமாக்கியவர் கலைஞர். இந்தியாவி லேயே முதன்முறையாக, அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப்படுத்தினார். பணியில் மட்டுமல்லாது, ஆட்சியிலும் பெண்களின் பங்களிப்பு வேண்டுமென்று, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றினார். தி.மு.க.வின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவாக, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டுவந்தார். கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிப்பதற்காக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டத்தைக் கொண்டுவந்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவித் திட்டதைக் கொண்டுவந்தார். பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் பெண்கள் சுயமாக இயங்குவதற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கலைஞரால் தான் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் விளைபொருட் களை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்வதற்காக உழவர் சந்தைகளை உருவாக்கியவர் கலைஞர். தனியார் வசமிருந்த போக்குவரத்துத்துறையை அரசுடைமையாக்கி, சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். கூடுதலாக, மினி பஸ் சேவையை உருவாக்கினார்.
ஜாதி ஆதிக்கத்தை ஒழிக்கும்விதமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைச் சட்டமாக்கியவர் கலைஞர். பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, தாழ்த்தப்பட்டோருக்கு 18% இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார். கலப்பு திருமணங்களை ஊக்குவிப்பதற்காக, கலப்புத் திருமணத் தம்பதியருக்கு ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார். ஜாதிக்கலவரங்களைத் தடுப் பதற்காக, அனைத்து சமூகத்தினரும் இணக்கமாக வாழும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களைக் கொண்டுவந்தார்.
மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். 10-ஆம் வகுப்புவரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கினார். மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் அளிக்க உத்தரவிட்டார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், கலைஞரின் ஆட்சியில் அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது.
அனைத்திற்கும் நுழைவுத்தேர்வு என்று ஒற்றைக்காலில் நிற்கிறது இன்றைய ஒன்றிய அரசு, ஆனால் கலைஞர் தலைமையிலான அரசோ, பொறியாளர் பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க வசதியாக, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கினார். மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தி, 2006-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், வாரம் இரண்டுமுறை முட்டைகள் வழங்க உத்தரவிட்டார்.
அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கைகள், திருநம்பிகள் என்று பெயர் சூட்டி, அவர்களுக்கான தனி நல வாரியத்தை அமைத் தார். உடல் ஊனமுற்றோரை, மாற்றுத்திறனாளிகள் என அழைக்கும்படி உத்தரவிட்டவர், அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைக் கொண்டுவந்தார். மக்களாட்சி என்பது அனைத்து மக்களுக்குமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பிச்சைக்காரர்கள், தொழு நோயாளிகளுக்கும் மறுவாழ்வு மையங்களைக் கொண்டுவந்தவர் கலைஞர். இப்படியாகத் தனக்குக் கிடைத்த சட்டம் இயற்றும் உரிமையை, சமூக நீதியை நிலைநாட்டவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தியவர் கலைஞர்.