மிழகத்திற்கு ஒரு செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால் நடப்பு நிதியாண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று பல்வேறு புள்ளிவிபரங்களுடன் குற்றம்சாட்டினார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. 

Advertisment

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டிற்கான (2026-27) இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவை யில் 17-ஆம் தேதி தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. பட்ஜெட் உரையை   2 மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். 

Advertisment

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தங்கம் தென்னரசு, மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் ஒன்றிய அரசு நடத்திய பல நிகழ்வுகளைக் கண்டிருக்கிறோம். எனினும் இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று. தமிழ்நாட்டிற்கு பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்து வைப்பது, மாநில அரசி டம் கலந்தாலோசிக்காமல் வரிவிகிதங்களை சீரமைத்து நியாயமற்ற நிபந்தனைகளுடன் திட்டச் செலவினங் களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் வழியாக, தமிழ் நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் 9,600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படும். 

2025-26 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளின் பங்கு, திருத்திய மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அரசியல் சாசனப் பிரிவு 293-ன்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 16,290 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும். வழங்கப்படவில்லையெனில் மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் உச்சவரம்பிலிருந்து கழிக்கப்படும் என ஒன்றிய அரசின் நிபந்தனை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 15,877 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள் ளது’என்று குற்றம்சாட்டினார் தங்கம் தென்னரசு. 

Advertisment

மேலும், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களை விவரித்து புள்ளிவிபரங்களுடன் சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தினார் நிதி அமைச்சர். ஒன்றிய அரசு நிறைய வஞ்சகங்கள் செய்த நிலையிலும், பல தடைகளைத் தாண்டி, அனைத்துத்துறைகளிலும் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்து வருவதையும் விவரித்தார். அப்போது, பேரவையில் மேஜையை தட்டி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் உறுப்பினர்கள்.    

தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய சாதனை திட்டங்களையும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன்களையும் பட்டியலிட்ட துடன், அனைத்து துறைகளுக்கு மான நிதி ஒதுக்கீடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.  

குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறைக்கு 1,55,000 கோடி, பள்ளிக்கல்விக்கு 48,000 கோடி, ஊரக வளர்ச்சிக்கு 28,687 கோடி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 22,090 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு 28,227 கோடி, நெடுஞ்சாலைத்துறைக்கு 21,132 கோடி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறைக்கு 17,088 கோடி, உணவுத் துறைக்கு 17,068 கோடி, உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு 15,111 கோடி, அரசு ஊழியர் களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு 11,000 கோடி என ஒவ்வொரு துறையிலும்  செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு களால் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களின் குறியீடு அதிகரிக் கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். 

tnbudget1

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான 3,000 ரூபாயும், கோடை காலத்தை சமாளிக்க சிறப்புத்  தொகையாக 2,000 ரூபாயும் சேர்த்து 5,000 ரூபாயை ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 3 மணி நேரத்தில் வரவு வைக்கப் பட்டதை பெருமிதமாக சட்டப்பேரவையில் தெரிவித்தார் தங்கம் தென்னரசு. 

நடப்பு நிதியாண்டிற்கான இந்த இடைக்கால பட்ஜெட்டில் அரசின் வருவாயாக 3,44,575.31 கோடியாகவும், செலவீனமாக 3,93,271.63 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசிற்கு 48,696.32 கோடி ரூபாய் வருவாய்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நடப்பு நிதியாண்டிற்காக 1,79,809 கோடி ரூபாய் கடன் வாங்கத் திடமிடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் மொத்த கடன் சுமை 10.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.  

தேர்தல் காலம் என்பதால் மக்களைக் கவரும் புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. (இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்காது; தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகளைச் சொல்லிக் கொள்ளலாம் என முதல்வர் ஆலோசிப்பதாக இரு இதழ்களுக்கு முன்பு ராங்கால் பகுதியில் எழுதியுள்ளோம். 

இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. வழக்கம்போல, எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன. குறிப்பாக, காது குத்துதல் என்று இடைக்கால பட்ஜெட்டை அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.  

அதேசமயம், பட்ஜெட்டை நடுநிலையாக ஆய்வு செய்கிற பொருளாதார வல்லுநர்களோ, "தேர்தல் காலம் என்பதால் இடைக்கால பட்ஜெட் என்பது நிதி ஒதுக்கீடுகளின் சங்கமமாகத் தான் இருக்கும். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த வகையில் ஆய்வு செய்தால், மக்கள் நலன் சார்ந்தும், பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப் பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. அனாவசிய நிதி ஒதுக்கீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இடைக்கால பட்ஜெட்டில் இதைத் தாண்டி எதிர்ப்பார்க்கக்கூடாது. மத்திய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு ஆரோக்கியமான இடைக்கால பட்ஜெட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது''’என்று அழுத்தமாகச் சொல்கின்றனர். 

-இளையர்

___________
வேளாண்மைத்துறைக்கு47,000 கோடி!

ஒவ்வொரு ஆண்டும் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அந்த வகையில்,  இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வேளாண்துறைக்கான பட்ஜெட்டை வாசித்தார் எம்.ஆர்.கே.! அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண்மை துறைக்கு தி.மு.க. அரசு அறிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதன்மூலம் வேளாண்மைத் துறையும் தமிழக விவசாயிகளும் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை பேரவையில் பதிவு செய்தார். 

குறிப்பாக, சிறுதானியங்கள் உற்பத்தியையும் அதன் பயன் பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் கடந்த நிதி ஆண்டு முதல் ஐந்தாண்டு கால திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே., அத்திட்டத்தின் மூலம் இதுவரை 12 லட்சம் விவசாயிகள் 178 கோடி நிதியில் பலனடைந்துள்ளனர். கேழ்வரகு உற்பத்தித் திறனில் தேசிய அளவில் தமிழகம் முதலிட மும், கேழ்வரகு உற்பத்தியில் இரண்டாவது இடமும், சிறு தானியங் கள் உற்பத்தியில் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 62 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 15 உழவர் சந்தைகள் அமைக்கப் பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியவர், அனைத்து கிராமங்களிலும் வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு திட்டத்தின் வளர்ச்சியையும், விவசாயிகள் அடைந்த பலனையும் விவரித்துப் பேசினார். வேளாண்மைத் துறைக்காக 47,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தனது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.